லக்ஷ்மணசுவாமி(தீர்த்தம்) திருக்கோவில்
ராமேஸ்வரம்

Lakshmana-swami_temple

சுவாமி : ராமர், லக்ஷ்மணன்.

அம்பாள் : லட்சுமணசுவாமி.

தலச்சிறப்பு : ஸ்ரீராமர் தீர்த்தத்திலிருந்து கோயில் நோக்கி செல்லும் வழியில் அமைந்துள்ளது லட்சுமண தீர்த்தம்.  இங்கு  லட்சுமணர் தாம் தம்மை அறியாது செய்திருக்கக் கூடிய பாவச்செயல்களுக்கு பரிகாரம் செய்திட இந்த தீர்த்தத்தை உருவாக்கினார்.   இங்கு அவரே சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.  எப்படி மைய கோயிலில் இருக்கும் சிவபெருமான் ராமேஸ்வரர் என அழைக்கப்படுகிறாரோ அப்படியே இங்குள்ள சிவபெருமான் லட்சுமனேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

லட்சுமணதீர்த்தத்தில் சங்கல்பத்துடன் நீராடிய பின்னர் அங்கு இருக்கும் பெரிய புளியமரத்தின் அருகில் சென்று முடி திருத்துவரிடம் முடிநீக்குதல் செய்ய வேண்டும். பின்னர் எள்ளும் நீரும் கொடுத்து முன்னோருக்கான தர்ப்பணம் செய்ய வேண்டும். பின் லட்சுமனேஸ்வரரை வழிபட வேண்டும். இதனால் தொழிலில் முன்னேற்றம், பாவ விமோசனம் ஏற்படும் என்பது நம்பிக்கை. லட்சுமணதீர்த்தத்தில் இந்த சடங்குகள் செய்யப்பட்டு முறையாக நீராடும் போது தான் சேது தீர்த்த யாத்திரையே உண்மையில் ஆரம்பிக்கிறது என்பது ஐதீகம்.

தல வரலாறு : ராமாயண காலத்திற்கு பின் மகாபாரத போர் நடந்த காலம்.  பலராமருக்கு அதில் மக்கள் மடிவது பிடிக்கவில்லை.   இதன் காரணமாக போரில் ஈடுபட மாட்டேன் எனக் கூறி தீர்த்தயாத்திரை மேற்கொண்டார்.  அதன்படி அவர் நைமிசாரண்யத்தை  அடைந்தார்.  அவ்விடத்தில் சூதமகரிஷி மற்ற மகரிஷிகளுக்கு புராணங்களை விவரித்து கூறினார்.  இதனால் பலராமரை பார்த்து  சூதமகரிஷி மரியாதை செய்யவில்லை.

கோபம் கொண்ட பலராமர் ஏர் ஆயுதத்தால் சூதமகரிஷியை தாக்க அவர் இறந்து விட்டார்.  அப்படியே சூதமகரிஷியை பலராமர்  உயிர்ப்பித்தார்.  இருப்பினும் பலராமருக்கு மனவருத்தம் ஏற்பட்டது.  போரை வெறுத்து தீர்த்தயாத்திரை கிளம்பிய தான் இப்படி  ஆத்திரத்தையும் ஆணவத்தையும் அடக்காமல் ஒரு உயிரை கொலை செய்து விட்டோம் என்ற வருத்தம் ஆட்கொண்டது.   ஆயுதமில்லாத ஒருவரை அதுவும் ஞானத்தை பிறருக்கு போதிக்கும் ஒருவரை கொன்றோம் என்ற பாவம் குறித்த குற்ற உணர்ச்சியால் பலராமர் மனவருத்தம் கொண்டார்.

இதனை கண்ட முனிவர்கள் அவரிடம் கோபத்தாலும் அகங்காரத்தாலும் ஏற்பட்ட இந்த பாவகாரியத்துக்கு பரிகாரம்  லட்சுமணதீர்த்தம் சென்று நீராடி நித்திய கடன்களை செய்து அங்குள்ள லட்சுமனேஸ்வரராக விளங்கும் சிவலிங்கத்தை  வழிபடும்படி கூறினர்.  அதன்படி பலராமரும் இங்கு சென்று சிவனை வழிபட்டார்.  அத்துடன் அவரும் ஒரு லிங்க பிரதிஷ்டை  செய்தார்.  இங்கு துணிகளை வறியவர்களுக்கு தானம் செய்வது மகத்தான தானம்.  பலராமன் விவசாயத்தின் குறியீடாகவும்  காணப்படுகிறார்.  நிலத்தின் மாண்பை காட்டும் ஏர் தான் பலராமரின் ஆயுதம் ஆகும்.

வழிபட்டோர் : பலராமர், லட்சுமணர்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

திருவிழாக்கள் : இங்கு தைப்பூசத்தன்று தெப்பத் திருவிழா நடைபெறும்.

அருகிலுள்ள நகரம் : ராமேஸ்வரம்.

கோயில் முகவரி : லக்ஷ்மணசுவாமி(தீர்த்தம்) திருக்கோவில்,

ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம்:

1. ஹோட்டல் குயின் பேலஸ்,

என்.ஹெச். ரோடு, பஸ் ஸ்டாண்ட் அருகில்,

ராமேஸ்வரம் - 623 526,

Ph : 04573 221 013.

 

2. ஹோட்டல் விநாயகா,

#5, ரயில்வே பீடர் ரோடு,

ராமேஸ்வரம் - 623 526,

Ph : 04573 222 361.

 

3. டைவிக் ஹோட்டல்ஸ் ராமேஸ்வரம்,

என்.ஹெச் - 49, மதுரைராமேஸ்வரம் ஹைவே,

ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில், ராமேஸ்வரம் - 623 526,

Ph : 04573 223 222.

 

4. ஹோட்டல் கரிஷ் பார்க்,

3, மதுரை ராமேஸ்வரம் ரோடு,

பாரதி நகர், ராமநாதபுரம் - 623 503.

Ph : 094423 22030.

 

அருகில் உள்ள உணவகங்கள்:

1. ஹோட்டல் ஐஸ்வர்யா லக்ஷ்மி,

கிரௌண்ட் ப்ளோர், என். ஹெச் 45,

மதுரை - ராமேஸ்வரம் ரோடு, சாலை பஜார்.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (453 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்

 


மங்களநாத சுவாமி
66.7 km 

அனுமன் கோவில்
150 m

ராமசுவாமி கோவில்
1.9 Km

கோதண்டராமன்
10.7 km

திருப்புல்லாணி
56.2 km