அருள்மிகு சுந்தராஜ பெருமாள் திருக்கோவில்

 அன்பில், திருச்சி மாவட்டம்

 Vadivazhagiya-Nambi-Perumal_temple

சுவாமி : சுந்தராஜ பெருமாள்(டிவழகியநம்பி).

அம்பாள் : அழகியவல்லி நாச்சியார்.

தீர்த்தம் : மாண்டூக புஷ்கரணிகொள்ளிட தீர்த்தம்.

விமானம் : தாரக விமானம்.

தலச்சிறப்பு : 108 வைணவ திருத்தலங்களில் இது 4வது திருத்தலம்.100 ஆண்டுகளாக  நடைபெறாமல் இருந்த குடமுழுக்கு விழா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெகு  விமர்சையாக நடைப்பெற்றது. இத்தலத்தை சேவித்த பின்னர் எதிர்க்கரையில் உள்ள  அப்பக்கூடத்தான் திருத்தலத்தை தரிசித்தால் விசேஷம்.  துர்வாசரால் சாபம் பெற்ற மண்டூக  முனிவரின் சாபத்தை நீக்கிய திருத்தலம்.

தல வரலாறு : ஒருமுறை படைப்புக் கடவுள் பிரம்மனுக்கு உலக உயிர்களின் அழகுக்குத் தாமே  காரணம் என்ற அகந்தை பிறந்தது.  பெருமாள் அறிவுரைத்தும் பிரம்மனுக்கு ஆணவம்  அழியவில்லை.  பூமியில் சாதாரண மனிதனாகப் பிறக்கும்படிச் சபிக்கிறார் திருமால்.  பூமியில் தன்  தவறுக்குக் பிராயச்சித்தம் தேடி பிரம்மன் ஒவ்வொரு தலமாக வழிபட்டு இங்கு வருகிறார்.

பேரழகு பொருந்திய மனிதர் ஒருவரைக் காண்கிறார்.  இவ்வளவு அழகுமிகுந்த ஒருவரைக்  கண்டதில்லை என்கிறார்.  அழகு நிலையற்றது.  ஆணவம் ஒருவனை அழிக்கக்கூடியது.   இவ்விரண்டையும் பெற்றவர் சிறப்பான வாழ்வைப் பெறுவதில்லை என்ற உண்மையை உணர்த்தி  அவருக்குப் பள்ளிகொண்ட கோலத்தில் எழிலான காட்சியை அருள்கிறார்.  பிரம்மன் ஆணவம்  அழியப் பெறுகிறார்.  பிரம்மன் மீது அன்பு கொண்டு திருமால் காட்சிதந்ததால் இத்தலம் அன்பில் என அழைக்கப்படுகிறது.

நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு  7.30 மணி வரை.

பூஜைவிவரம் : இரண்டு கால பூஜைகள்.

திருவிழாக்கள் :

திருக்கார்த்திகை விசேஷம்,

ஆடிவெள்ளி, தைவெள்ளி நாட்களில் சுந்தரவள்ளி தாயார் புறப்பாடு,

நவராத்திரி திருவிழா,

மார்கழி - திருவாய்மொழி, திருமொழி திருநாள், ராப்பத்து திருநாள்.

அருகிலுள்ள நகரம் : திருச்சி.

கோவில் முகவரி : அருள்மிகு சுந்தராஜ பெருமாள் திருக்கோவில்,

அன்பில் (அஞ்சல்), லால்குடி (தாலுகா ), திருச்சி மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. மதுரா ஹோட்டல்,

No.1 ராக்கின்ஸ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 001.

ஜங்சன் ரோடு,

கண்டோன்மெண்ட்,

Ph : +(91)-431-2414737, +(91)-9894558654.

 

2. மாயவரம் லாட்ஜ் No 87,

வண்ணாரபேட்டை தெரு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 002,

தெப்பக்குளம் அஞ்சல்,

Ph : +(91)-431-2711400, 2704089.

 

3. பெமினா ஹோட்டல் 109,

வில்லியம்ஸ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 001,

மத்திய பேருந்து நிலையம்,

ரெயில்வே ஜங்ஷன்,

Ph : 0431 - 2414501.

 

4. ஹோட்டல் ராக்போர்ட் வியுவ் 5,

ஓடத்துறை ரோடு,

சிந்தாமணி,

திருச்சிராப்பள்ளி - 620 002,

Ph : +91 740 2713466.

 

5. கிராண்ட் கார்டினியா,

22 - 25 மன்னார்புரம் ஜங்ஷன்,

திருச்சி - 620 020,

Mobile : +91 95856 44000, Tel : +91 431 4045000.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. ரகுநாத் ரெஸ்டாரன்ட்,

காலேஜ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 002.

 

2. பார்த்தசாரதி விலாஸ்/ வீகன் ரெஸ்டாரன்ட்,

கொண்டையன் பேட்டை ஆக்ரஹராம்,

திருவானை கோவில்,

திருச்சி - 620 002. 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்