அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில்(கேது ஸ்தலம்)
கீழப் பெரும்பள்ளம், நாகை மாவட்டம்
சுவாமி : அருள்மிகு நாகநாத சுவாமி.
அம்பாள் : அருள்மிகு சௌந்தரநாயகி.
மூர்த்தி : நடராசர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், பிள்ளையார், கேது, தனி அம்பாள்.
தீர்த்தம் : நாகதீர்த்தம்.
தலவிருட்சம் : மூங்கில் மரம்.
தலச்சிறப்பு : இங்கு கேது பகவான் தனிச் சன்னதியில் எழுந்தருளி உள்ளார். இங்கு வந்து வழிபட்டால் கேதுத் தொடர்பான தோஷங்கள் விலகி நன்மைகள் நடக்கும். கேது தோஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் திருட்டு பயம், கெட்ட பழக்கங்கள், சொத்து சேதம் அடைதல் அல்லது நாசமடைதல், மானமிழத்தல் மற்றும் புத்திர தோஷம் போன்றவற்றால் அல்லல் படுவர். இங்கு வந்து கேது பகவானை தரிசிக்கும் பக்தர்கள் தோஷங்களில் இருந்து முக்தி அடைவர் என நம்பப்படுகிறது.
கேதுவின் திசை - வட மேற்கு,
கேதுவின் ரத்தினம் – வைடுரியம்,
கேதுவின் வண்ணம் – கரும்புகை வண்ணம்,
கேதுவின் சுவை – உறைப்பு,
கேதுவின் வாகனம் – சிங்கம்,
கேதுவின் தானியம் – கொள்ளு,
கேதுவின் தெய்வம் – விநாயகர்,
கேதுவின் மலர் – செவ்வரளி,
கேதுவின் உலோகம் – கருங்கல்,
கேதுவின் கிழமை – ஞாயிறு.
கேதுவின் பலன்கள் - தரித்திரம், வியாதிகள் மற்றும் பீடைகளில் இருந்து நிவர்த்தி.
தல வரலாறு : ஏறத்தாழ 1900 வருடங்களாக இருந்து வரும் ஒரு கோவில் ஆகும். நவகிரகங்களில் இது கேதுவுக்கு உரியது. சோழ மன்னர்கள் கட்டிய அழகான கோவில். இந்த தலத்தின் வரலாறு என்னவெனில், அசுரர்களும் தேவர்களும் சேர்ந்து பாற்கடலை வாசுகி என்ற நாகத்தைக் கொண்டு, மேரு மலையை சுற்றி மத்தாக உபயோகித்து அமிர்தம் பெற முயற்சி செய்தனர். ஒரு புறம் தேவர்களும் மறுபுறம் அசுரர்களும் இழுத்தனர். மலையைச் சுற்றியதால் வாசுகியின் உடல் புண்ணாகியது. வலி தாங்காது, நாகப்பாம்புவின் தன்மையால், விஷத்தைக் கக்கியது. இதனால் கலவரம் அடைந்த தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். ஈஸ்வரனும் அவர்களைக் காக்க, தானே அந்த விஷத்தை எடுத்து விழுங்கினார். பார்வதி தேவி எம்பெருமானின் கண்டத்திலேயே அவ்விஷத்தை நிறுத்தி நிவர்த்தி செய்தார். இந்த சம்பவம் நடந்து முடிந்த பின்னர், வாசுகி, தன்னால் சிவபெருமானுக்கு ஏற்பட்ட கஷ்டத்தையும் தன்னால் சிவ அபச்சாரம் நடந்து விட்டதே என்று கவலை கொண்டு, மனம் வருந்தி, தனக்கு பிராயசித்தம் தருமாறு வேண்டி, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தாள். சிவபெருமான் காட்சி தந்து, ஆசி வழங்கி, வாசுகியின் தியாகத்தை பாராட்டினார். வாசுகி சிவபெருமானிடம், இந்த தலத்தில் காட்சி தந்த இடத்திற்கு பெருமை சேர்க்க, இங்கு அதே கோலத்தில் எழுந்து அருள் வேண்டும் என கெஞ்சினார். அவளது கோரிக்கையின் படி இங்கு நாகநாதராக அருள் பாலிக்கின்றார்.
இங்கு கேது பிரதான மூர்த்தியாகும். மற்ற நவகிரகங்கள் இல்லை. தனி சன்னதியில் பாம்பு தலையுடன் மனித உடலோடு காட்சி தருகிறார். நிழல் கிரகமாக கருதப்படும் கேது தானாகவே ஒளிவிடும் சூரிய, சந்திர கிரகத்துடைய அடி பாகமாகவே உள்ளது. இங்கு அருள் பாலிக்கும் கேது பகவான் சிம்மபீடத்தில் சிவபெருமானை நோக்கி வணங்கியபடி உள்ளார். ஞானத்தை அள்ளி தரும் கேது இங்கு அனுகிரகம் செய்யும் அன்பராகவே வீற்றிருக்கிறார். இவருக்கு ராகு காலத்தில், எமகண்டத்தில் விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது. கேதுவின் சன்னதியில் சூரிய பகவானின் சிலைகள் இரண்டு இருக்கின்றன. அத்துடன் சனீஸ்வரர் சிலையும் உண்டு. தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உள்ள உத்ராயண காலத்தில் ஒரு சூரியனுக்கும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள தட்சணாய காலத்தில் மற்றொரு சூரியனுக்கும் தனிப்பட்ட விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
பூஜை விவரம் : ஆறு கால பூஜை.
திருவிழாக்கள் :
கேது பெயர்ச்சி,
பங்குனித் திருவாதிரை,
ஆருத்ரா,
திருக் கார்த்திகை,
நவராத்திரி,
சிவராத்திரி,
பிரதோஷ வழிபாடு,
விநாயகர் சதுர்த்தி.
அருகிலுள்ள நகரங்கள் : மயிலாடுதுறை, சீர்காழி.
கோயில் முகவரி : அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில்,
”கேது ஸ்தலம்” கீழப் பெரும்பள்ளம், வாணகிரி அஞ்சல், தரங்கம்பாடி வட்டம், நாகை மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. சோழா இன்,
105, பிடாரி சவுத் ஸ்ட்ரீட்,
தென்பதி,
சிர்காழி - 609 111,
Ph : 094444 93388.
2.ஐயர்பாடி ஹோட்டல்,
ஓல்ட் என்.ஹெச்,
தென்பதி,
சீர்காழி - 609 110.
3.ஹோட்டல் அர்யபவன்,
ஓல்ட் என்.ஹெச்,
திருவள்ளுவர் நகர்,
தென்பதி,
சீர்காழி - 609 111.
4.மங்கள விலாஸ் ஹோட்டல்,
தென்பதி,
சீர்காழி.
5. கணேசன் ஹோட்டல்,
சீர்காழி.
அருகில் உள்ள உணவகங்கள் :
1.சம்பூர்ணா ரெஸ்டாரன்ட்,
ஓல்ட் என்.ஹெச்,
தென்பதி,
சீர்காழி - 609 110.
2.கார்டன் ரெஸ்டாரன்ட்,
தென்பதி,
சீர்காழி - 609 110.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)