அருள்மிகு சட்டைநாதர் திருக்கோவில்

சீர்காழி, நாகப்பட்டினம்

 

Sattainathar _temple

 

சுவாமி : சட்டைநாதர்.

அம்பாள் : பெரியநாயகி, திருநிலைநாயகி.

மூர்த்தி : சோமாஸ்கந்தர், தோணியப்பர்.

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், காளி தீர்த்தம், பராசர தீர்த்தம், புறவ நதி, கழுமல நதி, விநாயக நதி.

தலவிருட்சம் : பாரிஜாதம், பவளமல்லி.

தலச்சிறப்பு : இத்திருத்தலம் தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் 14வது தேவாரத்தலம் ஆகும். சட்டைநாதர் சுவாமி திருத்தலம்  நகர் நடுவில் நாற்புறமும் கோபுரங்களுடனே உயர்ந்த திருச்சுற்று மிதில்களோடு விளங்குகின்றது.  அதனுள்  பிரம்மபுரீசுவரருக்கும், திருநிலை நாயகிக்கும், திருஞானசம்பந்தருக்கும் தனித்தனியே ஆலயங்கள் உள்ளன.  இவை  கிழக்குப்பார்த்த சன்னதிகளே, சுவாமிகோவில் மகா மண்டபத்தில் திருஞானசம்பந்தர் உற்சவமூர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார்.  வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீ முத்துசட்டைநாதரும், தெற்கு உட்பிரகாரத்தில் திருமாளிகைப்பத்தியில் அறுபத்து மூவர்களும்  உள்ளனர்.  இவைகள் பன்னீருகத்தும் விளங்கிவந்த பெயர்களா மென்பது “வசையில் காட்சி” என்னும் திருக்கழுமல  மும்மணிக்கோவை 10 வது பாடலால் விளங்கும் அங்கேயே சட்டைநாதர் பலிபீடமும் இருக்கின்றது.  மேலைப் பிரகாரத்திலும்  வடக்குப் பிரகாரத்தில் மேலே மலைக்குப் போகப் படிக்கட்டுகள் அமைந்திருக்கின்றன.  சுவாமி கோவிலை ஒட்டிக்  கட்டுமலையில் இருகது புள்ளினம் ஏந்தும் ஐதீகத்தில் ஸ்ரீ உமாமகேசுவரார் பெரிய உருவத்துடன் எழுந்தருளி இருக்கின்றார்.   இவ்விரு முர்த்தங்களும் சுதையாலானவை.

ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி மிகவும் மூர்த்திகரம் மிக்கவர்.  இவர் திருநாமங்கொண்டே இத்தேவஸ்தானம் விளங்குகிறது.  இம்மலை  திருத்தோணிமலை எனப் பெயர்பெறும்.  சுவாமி கோவில் வெளிப்பிராகாரம் வடமேற்கு மூலையில் திரு ஞானசம்பந்தர்  திருக்கோவில் விளங்குகிறது.  அதற்கு அணித்தாக ஈசானத்தில் அம்மையின் ஆலயம் உள்ளது.  அம்மை சன்னதியில் பிரம்ம  தீர்த்தம் நாற்புரமும் கருங்கற் படிகட்டுகளுடன் விளங்குகிறது.  சுவாமி சன்னதியில் மடைப்பள்ளியும் தேவஸ்தான  அலுவலகமும் தனித்தனியே அமைந்திருக்கின்றன.  இத்தலத்தில 47 கல்வெட்டுகள் உள்ளன.  கல்வெட்டில் இத்தலம் இராஜராஜவன்  நாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேயம் திருக்கழுமலம் என்று குறிக்கப் பெற்றுள்ளது. பிரம்மபுரீசுவரர்  திருக்கழுமலமுடையார் என்றும், தோணியப்பர் திருத்தோணிபுரம் உடையார் என்றும், தோணியப்பர் பக்கத்திலுள்ள அம்மை  பெரியநாச்சியார் என்றும், திருஞானசம்பந்த பெருமான் ஆளுடைய பிள்ளையார் என்றும் குறிக்கப் பெறுகின்றார்கள்

தல வரலாறு : இத்திருத்தலம் 1000 ஆண்டுகளுக்கு முன் பழமையானது.  மகாவிஷ்ணு மாவலிபால் குறள் வடிவாகச் சென்று  மூன்றடி மண் யாசித்து விண்ணையும் மண்ணையும் ஈரடியால் அளந்து மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்துப் பாதாள  உலகிற்குச் செலுத்தினார்.  அதனால் அவர் அகங்காரங் கொண்டு உலகு நடுங்கத்திரி வாராயினார்.   இஃதறிந்த வடுகநாதர் தமது  திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்துப் பூமியில் விழ்த்தினார்.  இலக்குமி மாங்கலியப் பிச்சை வேண்டியவாறே  இறைவனருள் செய்ய, விஷ்ணு உயிர் பெற்று எழுந்து வணங்கினார்.  அவர்தம் தோலையும், எலும்பையும் அணிந்து கொள்ள  வேண்டுமென்று விண்ணப்பிக்க இறைவனும் எலும்பைக் கதையாகக் கொண்டு, தோலைச் சட்டையாகப் போர்த்து அருள்செய்தார்.   அதுமுதல் பெருமான் தண்டபாணி, சட்டை நாதர், வடுக நாதர், ஆபதுத்தாரணர் எனப் பல திருநாமங்களோடு விளங்கி வருகிறார்.

ஆரியவர்த்தத்தை ஆண்டு வந்த காலவித்து என்னும் வேந்தன் புத்திரப் பேறின்மையினால் வருந்தி உரோமச முனிவரைக் கண்டு  தன் கவலையைத் தெரிவித்தான்.  முனிவரும் கயிலையின் சிகரத்தை தரிசித்தால் கவலை நீங்கும் என்று கூறினார்.  எவ்வாறு  தரிசிக்க முடியும் என்று கவலையுற்ற வேந்தனை நாட்டுக்கு அனுப்பிவிட்டுக் கயிலாயம் சென்ற முனிவர் தவஞ்செய்தார்.   இறைவன் முனிவர் முன்தோன்றி வேண்டுவது யாதென, முனிவரும் தென்னாட்டு மக்கள் தரிசிக்க வேண்டி இம்மலைச்சிகரம்  ஒன்றைத் தென்திசையில் தோற்றுவித்து அதில் உமாதேவியுடன் வீற்றிருந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். அதற்குக்  கயிலாயபதி ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் போர் நடக்கும் பொழுது இது நிறைவேறும் என்று அருள்புரிந்தார்.  பின்னொருநாள்  ஆதிசேடனுக்கும், வாயுவுக்கும் தம்முள் யார் வலியர் என்பது பற்றிப் போர் நிகழ்ந்தது.  ஆதிசேடன் தனது ஒரு தலையை  மெதுவாகத் தூக்கினான்.  உடனே மலைச்சிகரம் பெயர்ந்து ஒரு பெருங்கிளையும் பல சிருகிளைகளுமாக 11 கிளைகள் விழுந்தன.   பெருங்கிளையான சிகரம் இறைவன் அருளால் 20 பறைவகளால் இங்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டது.  காலவித்து என்னும் அரசனும் தரிசித்தான்.  பின்னர் அம்மலை மறைந்து நிற்க, மலைவந்து தங்கிய இடத்தில் சுதையால் 20 பறைவகள் தாங்கியது  போலவே கட்டுமலை ஒன்றைக்கட்டுவித்து அரசனும் தன் நகர் சேர்ந்தான்.

திருஞானசம்பந்தப் பிளையார் சிவபாத ஹிருதயர் என்னும் பிராணோத்தமருக்குத் திருக்குமாரராகச் சற்புத்திர மார்க்கத்தை  விளக்கவும் சைவசமயம் யாங்கணும் பரவவும் அவதரித்தார்.  மூன்றாண்டு நிறம்பாத பிள்ளையாரைக் கரையில் இருக்கச் செய்து  நீராடிக் கொண்டிருந்தார்.  அப்போது பிளையார் பூர்வ உணர்ச்சிமேலிட பார்வதி தேவியாரையும் பரமேசுவரரையும் நினைத்து  அம்மே அப்பா என்று அழுதருள பெருமானும் அம்மையை நோக்கித் திருமுலைப்பால் கொடுத்தருள்க என்றருளினார்.  அவ்வாறே அம்மையாரும் பொற்கிண்ணத்தில் பாலைப்பெய்து ஞானத்தைக் குலைத்து ஊட்டியருளினார்.  அதையுண்ட பிள்ளையாரும்  ஞானசம்பந்தம் பெற்றுத் திருஞானசம்பந்தர் ஆயினார்.  ஸ்நானம் முடித்து வந்த தந்தையார் பிள்ளையாரை நோக்கி உனக்குப்  “பல்கொடுத்தார் யார்?” என்று கோபித்துக் கேட்க பிள்ளையாரும் இடபாரூடராய் அம்மையப்பராய் எழுந்தருளி வந்த  சுட்டிக்காட்டித் “தோடுடைய செவியன்” என்னும் திருப்பதிகம் பாடியருளினார்.  பின்னர் பிள்ளையார் சிவ சமயம் எங்கும் நிலை  பெறுமாறு பற்பல செயற்கருஞ் செயல்களைச் செய்து தலங்கள் தோறும் சென்று அரிய தேவாரப்பதிகங்களை அருளி இப்பதிக்கு  அருகிலுள்ள திருநல்லூர் பெருமண(ஆச்சாள்புர)த்தில் தமது பதினாறாவது வயதில் வைகாசி மூலத்தில் தமக்கு நிகழ்ந்த  திருமணத்தின் பொருட்டு வந்த அன்பர் கூட்டத்துடன் இறைவன் அருட்சோதியிற் கலந்தருளினார்.

வழிபட்டோர் : குமரவேள், ஸ்ரீகாளி, பிரம்மன், விஷ்ணு, குரு, இந்திரன், சூரியன், சந்திரன், அக்னி, சேடன், ராகு, கேது,  வேதவியாசர்.

பாடியோர் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர், பட்டினத்தடிகள்,நம்பியாண்டார் நம்பிகள்,  சேக்கிழார், அருணகிரிநாதர்.

நடைதிறப்பு : காலை 6.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை, மாலை 4.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை.

பூஜை விவரம் : 6 கால பூஜைகள்.

திருவிழாக்கள் : சித்திரை திருவாதிரையில் பிரம்மோற்ஸவம் நடைபெறும்.

அருகிலுள்ள நகரம் : சீர்காழி.

கோவில் முகவரி : அருள்மிகு சட்டைநாதர் திருக்கோவில்,

சீர்காழி – 609 110, நாகப்பட்டினம் மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. சோழா இன்,

105, பிடாரி சவுத் ஸ்ட்ரீட்,

தென்பதி,

சிர்காழி - 609 111,

Ph : 094444 93388.

 

2. ஐயர்பாடி ஹோட்டல்,

ஓல்ட் என்.ஹெச்,

தென்பதி,

சீர்காழி - 609 110.

 

3. ஹோட்டல் ஆர்யபவன்,

ஓல்ட் என்.ஹெச்,

திருவள்ளுவர் நகர்,

தென்பதி,

சீர்காழி - 609 111.

 

4. மங்கள விலாஸ் ஹோட்டல்,

தென்பதி,

சீர்காழி.

 

5. கணேசன் ஹோட்டல்,

சீர்காழி.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

 

1. சம்பூர்ணா ரெஸ்டாரன்ட்,

ஓல்ட் என்.ஹெச்,

தென்பதி,

சீர்காழி - 609 110.

 

2. கார்டன் ரெஸ்டாரன்ட்,

தென்பதி,

சீர்காழி - 609 110.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
ஸ்வேதரண்யேஸ்வரர் 
13.8km

சிவலோகநாதர் 
11.7km

கேது- கீழ்பெரும்பள்ளம் 
21.4km
வைத்தீஸ்வரன்கோவில் 
6.6km
சோமநாதசுவாமி 
23.4km