அருள்மிகு கைலாசநாதர்(சந்திரன்) திருக்கோவில்

 திங்களூர், தஞ்சாவூர் மாவட்டம்

Chandran_temple


சுவாமி : கைலாசநாதர்.

அம்பாள் : பெரியநாயகி.

தீர்த்தம் : சந்திர தீர்த்தம், காவிரி ஆறு.

தலவிருட்சம் : வில்வம்/வாழை.

தலச்சிறப்பு : சூரிய, சந்திரன் ஆகியோர்களுக்கு தனி சன்னதி உண்டு.  கோள்கள் சூரியனை  பார்த்தவாறு அமைந்து உள்ளது.  பங்குனி உத்திரம் நாளன்று காலை 6 மணிக்கு இறைவன் மீது  சூரிய ஒளியும், மறுநாள் மாலை சந்திர ஒளியும் படரும்.  இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.   தமிழகத்தில் அன்னப் பிரசாதத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.  நீர்  தொடர்பான நோய்களுக்கு இவரே காரணம் ஆவார்.  காலரா, நுரையீரல் நோய்கள் போன்றவை  நீங்க இவரை வழிபடலாம்.  வெண்மை நிற மலர்களால் அர்ச்சனை செய்து, வெள்ளை நிற  ஆடைகள் உடுத்தி, முத்து மாலை அணிந்து, பெளர்ணமி விரதம் இருந்து வழிபடலாம்.

தல வரலாறு : இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது.  திராவிடக் கட்டிடக் கலையை பின் பற்றி கட்டப்பட்டுள்ளது இக்கோவில்.  அப்பூதியடிகள் என்ற 63  நாயன் மார்களில் ஒருவரான இவர் திங்களூரை சேர்ந்தவர்.  இவர் சிவபெருமான் மீது கொண்ட  பற்றால், சிவபெருமான் மீது பக்தி கொண்ட திருநாவுக்கரசர் பெயரை தன் மகன்களுக்கு மூத்த  திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்று பெயர் வைத்தார்.  மேலும் திருநாவுக்கரசர் பெயரில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்து வந்தார்.

ஒரு நாள் திருநாவுக்கரசர் திங்களூருக்கு வந்த போது அப்பூதியடிகள் பற்றி கேள்விப் பட்டு அவரை  காண சென்றார்.  திருநாவுக்கரசரை கண்ட அப்பூதியடிகள் அவரை வரவேற்று உணவு அளிக்க  விரும்பினார்.  தன் மகனை வாழை இலை பறித்து வருமாறு அனுப்ப அங்கே அவனை பாம்பு  தீண்டியது.

தன் மகன் இறந்து விட்டான் என்ற செய்தி கேட்டால் திருநாவுக்கரசர் சாப்பிட மாட்டாரோ  என்று  என்னிய அப்பூதியடிகள் அதனை மறைத்து உணவு அளித்தார்.  மகனை பற்றி அறிந்த  திருநாவுக்கரசர், அவனின் உடலை திங்களூர் திருக்கோவிலுக்கு எடுத்துச் சென்று “ஒன்று கொலாம்  அவர் சிந்தை” என்று பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார்.  இதுவே இக்கோவில் வரலாறு ஆகும்.

நடைதிறப்பு : காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : திருவையாறு.

கோயில்முகவரி : அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,

திங்களூர் - 613 204, தஞ்சாவூர் மாவட்டம்.

 

அருகில் உள்ள தங்கும் இடம் :

 

1.அலா ரிசோர்ட்,

பெரம்பூர் ஆக்ராஹரம் கும்பகோணம் மெயின் ரோடு,

ஸ்டேட் ஹைவே 22,

திருவையாறு - 613 204,

Ph : 04362 260 430.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

 

1.அழகப்பன் ஹோட்டல்,

தியாகராஜா காலனி,

திருவையாறு - 613 204.

 

2.நூற் ஹோட்டல்,

ஸ்டேட் ஹைவே 27,

நடுக்கடை,

கல்யாணபுரம் - 613 201.

 

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

 

இருக்குமிடம்
  

 

 

அருகிலுள்ள கோவில்கள் 

 

திருவையாறு சிவன் 
4.3km
ஹர்ச விமோசன பெருமாள் 
6.5km

பிரம்மசிரக்கண்டீஸ்வரர்
3Km
கோவிந்தராஜாபெருமாள்13.3Km
கைலாசநாதர் 
13.3km

நிசும்பசூதனி
15.9km