அருள்மிகு இராமசுவாமி திருக்கோவில்

கும்பகோணம்

Arulmigu-Ramaswamy_temple


சுவாமி : அருள்மிகு இராமசுவாமி.

அம்பாள் :  அருள்மிகு சீதாலட்சுமி.

மூர்த்தி : ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகன், பரதன், அனுமார்.

தலச்சிறப்பு : அவசியம் காணவேண்டிய அற்புதமான கோயில் இது.  காரணம் கோயில் மட்டுமல்ல  ஒரு சிறந்த கலைக்கூடமும் ஆகும்.  இக்கோயில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி  புரிந்த ரெகுநாத நாயக்க மன்னரால் கி.பி.1620 ம் ஆண்டு கட்டப்பெற்றது.  முன் மண்டபம் 62  தூண்களுடன் சிற்ப வேலைப்பாட்டுடன் உள்ளது.  பெருமாளின் பல்வேறு அவதாரங்களும்  அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மகா மண்டபம் என்று பெயர்.  கோயிலின் உள்  பிரகாரத்தில் இராமயணம் முழுவதும் சித்திரமாக வரையப்பட்டுள்ளன.  சுமார் 200க்கு மேற்பட்ட  சித்திரங்கள் வரயப்பட்டு சித்திரகூடம் சிறக்கிறது.  

இக்கோயிலின் உற்சவமூர்த்திகள் மிகப்  பழங்காலத்தவை.  அவை தாராசுரத்தில் புதையுண்டு இருந்ததாகவும் கி.பி.16 ம் நூற்றாண்டில்  தஞ்சையை ஆண்ட அச்சுதப்பெருமாள் தோன்றி  அச்சிலைகளை எடுத்து பிரதிஷ்டை செய்து தனக்கு  கோயில் அமைக்குமாறு கூறியதாக வரலாறு  கூறுகிறது.  சுவாமியின் கருவறை பழைய முறைப்படி அமைந்துள்ளது.  ஸ்ரீ இராமபிரானும்  அன்னை  சீதாதேவியும் ஒரே ஆசனத்தில் அமர்ந்துள்ளனர்.

பரதர் குடைபிடிக்க சத்ருக்குனர் சாமரம் வீச இலக்குமணர் வில்லேந்திய வண்ணம் இராமர்  கட்டளையை எதிர்பார்த்து நிற்பது போன்ற பட்டாபிஷேக காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.   மேலும் கையில் வீணையுடன் ஸ்ரீ ஆஞ்சநேயர் இராமாயண பாராயணம் செய்வது போன்ற  திருமேனி ஒரு தனியழகு. இக்கோயிலின் பெருமாள் கோதண்டபாணியாக உள்ளார்.  கலை  வண்ணமும் அருள் வெள்ளமும் சேர்த்து அள்ளித்தரும் இக்கோயிலில் ஸ்ரீ இராமநவமி,  கோகுலாஷ்டமி நவராத்திரி காலங்களில் பத்துநாட்கள் பெரிய விழாவாக நடைபெறும்.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.15 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.15  வரை.

பூஜை விவரம் : ஆறு கால பூஜை.

திருவிழாக்கள் : ஸ்ரீராமநவமி திருவிழா, பவித்ர உற்சவம், ஊஞ்சல் உற்சவம்.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு இராமசாமி திருக்கோவில்,

கும்பகோணம் அஞ்சல், தஞ்சை மாவட்டம் - 612 001.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2.சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3.குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4.ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)

இருக்குமிடம்
  

அருகிலுள்ள கோவில்கள் 
காசி விஸ்வநாத சுவாமி 
1.2km

ஆதிகம்பட்ட விசுவநாதர் 
1km

வீர பத்ர சுவாமி 
1.1km
பகவத்விநாயகர் 
600m
நாகேஸ்வர சுவாமி 
600m
சோமேஷ்வர சுவாமி 
350m