அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோவில்

கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் 

somanathaswami_temple

சுவாமி : அருள்மிகு சோமநாத சுவாமி. 

அம்பாள் : சோம கமலாம்பிகை அம்மன்.

மூர்த்தி : சண்டிகேஸ்வரர்.

தீர்த்தம் : சோம தீர்த்தம், ஜடாயு தீர்த்தம். 

தலவிருட்சம் : நெல்லி மரம்.

தலச்சிறப்பு : அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோவில் சோழர் காலத்தில் கீழப்பழையாறையில்  7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.  இத்திருக்கோயில் புராதனமான சோழர் காலத்து கலைநயம்  மிக்க சிற்பங்கள் மிகுந்த திருக்கோயிலாகும்.

இக்கோவில் அமைந்து இருக்கும் கீழப்பழையாறை ஊர் தான் சோழர்களின் தலைநகராக இருந்தது.   இதன் பின்பு தான் தஞ்சாவூர் தலைநகரமாக மாற்றப் பட்டதாக வரலாறு கூறுகிறது.  தஞ்சாவூர்  மாவட்டம், கும்பகோணம் வட்டம், கீழப்பழையாறை அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில்,  சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் உபகோயிலாகும்.

தல வரலாறு : சோமநாத சுவாமி திருக்கோவில் அப்பர்,திருஞான சம்பந்தர் ,சுந்தரர், சேக்கிழாரால்  பாடல் பெற்ற தலம்.  பிற்காலச் சோழர்களின் இரண்டாவது தலைநகரம் ஆகும்.  இங்கு முதலாம்  ராசராசனின் தந்தை யான சுந்தரசோழன் இருந்து ஆட்சி புரிந்தான் என்று பழம் இலக்கிய நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் முன்னும், பின்னும் வந்த அரசர்கள் நந்திபுரம் என்றும், 9,10-ம்  நூற்றாண்டில் பழையாறை நந்திபுரம் எனவும், 11-ல் முடி கொண்ட சோழபுரம் என்றும், 12-ம்  நூற்றாண்டில் ராசராச புரம் என்றும் பெயர் மாற்றம் பெற்று விளங்கியதாக வரலாறுகள்  கூறுகின்றன.

சைவம் வளர்த்த நங்கையும், மணிமுடிச் சோழனின் மகளும், கூன்பாண்டியனின் மனைவியுமான மங்கையர்கரசியார் தோன்றி வாழ்ந்தது இத்தலத்தில்தான்.  63 நாயன்மார்களில் ஒருவரான அமர்  நீதி நாயனார், சைவப் பணி புரிந்த தலம் கீழப்பழையாறை ஆகும்.  அருள்மிகு சோமநாத சுவாமி  திருக்கோவில் சிதிலமடைந்ததால் திருப்பணி செய்யப்பட்டு, கடந்த 6.6.1962-ம் ஆண்டு  குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர், சரியான பராமரிப்பு இல்லாமல் மீண்டும் சிதிலமடைந்தது.   மீண்டும் குடமுழுக்கு நடத்த திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

அப்பொழுது இத்தலத்தில் இருந்து 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நான்கு ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.  ஐம்பொன்னாலான இரண்டரை அடி உயரமுள்ள சுந்தரர் சிலை, 2 அடி  உயரமுள்ள திருஞானசம்பந்தர் சிலை, இரண்டரை அடி உயரமுள்ள ஆடிப்பூர அம்மன் சிலை,  ஒன்றரை அடி உயரமுள்ள அரியநாச்சியார் என்னும் சந்திரசேகர அம்மன் சிலை ஆகிய நான்கு  சிலைகள் உள்ளன.

வழிபட்டோர் : மங்கையர்கரசி.

பாடியோர் : அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார்.

நடைதிறப்பு : காலை 7.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு  7.00 மணி வரை.

கோயில் முகவரி : அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோவில்,

கீழப்பழையாறை, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

தொலைப்பேசிஎண் : அர்ச்சகர் - 98945 69543.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2.சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3.குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4.ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

  1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)

இருக்குமிடம்
  

 

 

அருகிலுள்ள கோவில்கள்

 


ஜெனார்த்தன பெருமாள்
1.3km

பகவதி அம்மன்
900m

தர்மபுரீஸ்வரர்
1.7km

தேனுபுரீஸ்வரர்
2.8km
ஐராவதேஸ்வரர்
4km

அமிர்தகடேஸ்வரர்
7.1km