சௌம்ய நாராயண பெருமாள்
திருகோஷ்டியூர், சிவகங்கை மாவட்டம்
சுவாமி : சௌம்ய நாராயணர்.
அம்பாள் : திருமாமகள்.
தீர்த்தம் : தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம்.
தலச்சிறப்பு : இக்கோவிலில் மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது. ராமானுஜர் உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்த தலம். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 95 வது திவ்ய தேசம். திருமண தடை நீங்கும் முக்கிய தலங்களில் இதுவும் ஒன்று. குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
தல வரலாறு : முன்னொரு காலத்தில்பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் பயந்த முனிவர்கள் இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் அவர்களது கோரிக்கையை ஏற்றார். இதனிடையே இத்தலத்தில் கதம்ப மகரிஷி, விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அவர் தான் தவமிருக்குமிடத்தில், எவ்வித தொந்தரவும் இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தார்.
எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்தார் மகாவிஷ்ணு. அப்போது நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்கப்போவதாக கூறினார் மகாவிஷ்ணு. மகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை தங்களுக்கு காட்டும்படி வேண்டினர். எனவே, அவதாரம் எடுப்பதற்கு முன்பே இங்கு நரசிம்ம கோலம் காட்டியருளினார். இதனால் மகிழ்ந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் அவரது பிற கோலங்களையும் காட்டும்படி வேண்டினர். சுவாமியும் நின்ற, சயன, உட்கார்ந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு, இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் "திருக்கோட்டியூர்' என்றும் பெயர் பெற்றது.
பாடியோர் : பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழாக்கள் :
மாசியில் தெப்பத்திருவிழா,
வைகுண்டஏகாதசி,
நவராத்திரி.
அருகிலுள்ள நகரம் : சிவகங்கை.
கோவில் முகவரி : அருள்மிகு சௌம்ய நாராயணப்பெருமாள் திருக்கோவில்,
திருக்கோஷ்டியூர் - 630 211, சிவகங்கை மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம்:
1. ஹோட்டல் கார்த்திக்,
போஸ்ட் ஆபீஸ் ரோடு, பிள்ளையார்பட்டி
அருகில், என்.ஹெச் 36 திருப்பதூர் - 630 211,
Ph : 04577 268 780.
2. செல்வம் ஹோட்டல்,
கோவிலூர் திருப்பதூர் ரோடு, கூத்தடைபட்டி,
பிள்ளையார்பட்டி - 630212.
3. தப்பா கார்டன்ஸ் ரிசோர்ட்,
687, மெயின் ரோடு, அறியாக்குடி,
காரைக்குடி.
4.ஹோட்டல் சுபலட்சுமி பாலஸ்,
#1 சர்ச் பஸ்ட் ஸ்ட்ரீட், செக்காலை ரோடு,
செக்காலை, காரைக்குடி - 630 001,
Ph : 04565 237 010.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)