ஸ்ரீ லெஷ்மி நாராயண பெருமாள் திருக்கோவில் 
திருமணஞ்சேரி, நாகை மாவட்டம்

 

 Kalyana Varadharaja Perumal_temple

சுவாமி : லெஷ்மி நாராயணர்.

அம்பாள் : லக்ஷ்மி.

மூர்த்தி : தன்வந்திரி பெருமாள், ஆஞ்சநேயர் சன்னதி.

தீர்த்தம் : துளசி தீர்த்தம்.

தலவிருட்சம் : பன்னீர்.

தலச்சிறப்பு : ஸ்ரீ லெஷ்மி நாராயண பெருமாள் திருக்கோவில் மேற்கு பார்த்து அமைந்துள்ளது. பெருமாளின் மடியில் லெஷ்மி  தேவி அமர்ந்தவாறு மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.  வரதராஜ பெருமாள் உற்சவராக உள்ளார்.  இத்தலத்தில் ஸ்ரீ தன்வந்திரி  பெருமாள், ஸ்ரீ ஆஞ்சநேயர், தனி சன்னதிகளில் அருள்பாலிகின்றனர். லெஷ்மி நாராயண பெருமாள் கோவிலில் அமைந்துள்ள  தன்வந்திரி பெருமாளை வழிபடுவதால் தீராத வியாதிகள், ரோகங்கள் நிவர்த்தியாகும்.

இத்தலத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் பால உருவம் கொண்ட ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வரூபம் கொண்ட ஆஞ்சநேயர் என  இரண்டு ஆஞ்சநேயர் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கிறார்.  விஸ்வரூபத்தில் ஆஞ்சநேயர் தலைமுடி மீது கிரீடதிற்கு பதிலாக  மணி அணிந்தவாறு உள்ளார்.  இத்தலத்தில் உள்ள ஆஞ்சிநேயரை நெய் தீபம், வடமாலை சார்த்தி வழிபடுவதால் நினைத்த  காரியங்கள் எளிதில் நிறைவேறும் மற்றும் சனி தோஷம், எம பயம் நீங்கும்.

மேலும் இதலத்தில் உள்ள பெருமாளை வழிபடுவதால் புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நிவர்த்தியாகும்.  லெஷ்மி நாராயண  பெருமாளுக்கு நைவேத்தியம் செய்த பொங்கலை உண்டால் புத்திர பாக்கியம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  இதனால்  இத்திருக்கோவில் நாராயண பெருமாள் மிகவும் பிரசித்தி பெற்றவராக கருதப்படுகிறார்.

தல வரலாறு : கல்யாண சுந்தரேஸ்வரர், பார்வதி தேவியின் பூலோக முறைப்படி நடந்த திருக்கல்யாணத்தை லெஷ்மி நாராயண  பெருமாள் நடத்தி வைத்ததாக கருதப்படுகிறது.  இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் லெஷ்மி நாராயண பெருமாள் மேற்கு நோக்கி  அருள்பாலிக்கிறார்.  இத்தலம் 2002ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.  மீண்டும் திருப்பணி செய்து 2013ம் ஆண்டு  கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நடைதிறப்பு : காலை 7.00 to 12.00, மதியம் 4.30 to 7.00.

திருவிழாக்கள் :

இராமானுஜர் பிறந்த நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது,

வரதராஜ பெருமாள் சுவாமி வீதியுலா ஒவ்வொரு ஆண்டும் கரிநாள் தை மாதம் 3ம் தேதி நடைபெறும்,

அனுமந்ஜெயந்தி,

ராமநவமி,

கிருஷ்ண ஜெயந்தி.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோவில் முகவரி : ஸ்ரீ லெஷ்மி நாராயண பெருமாள் திருக்கோவில்,

திருமணஞ்சேரி, குத்தலாம் வட்டம், நாகை மாவட்டம்.

தொலைப்பேசிஎண் : 9894788156.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. மன்ட்ரா வேப்பத்தூர்,

536/537, A1 பகவதபுரம் மெயின் ரோடு,

ஸ்ரீ சைலபதிபுரம்,

கடையான்காடு,

கும்பகோணம் - 612 105.

 

2.ஹோட்டல் ரயாஸ்,

எண். 18, ஹெட் போஸ்ட் ஆபீஸ் ரோடு,

நியர் மகாமஹம் டேங்க் வெஸ்ட் பாங்க்,

காந்தி அடிகள் சாலை,

வலயபேட்டை அக்ரஹாரம்,

கும்பகோணம் - 612 001,

Ph : 0435 242 3170.

 

3.ஹோட்டல் ரிவர்சைடு ரிசோர்ட் & ஸ்பா,

எண். 32 & 33, காலேஜ் ரோடு,

கொண்டங்குடில்லாம்,

கும்பகோணம் - 612 002,

Ph : 0435 244 3666.

 

4.ஹோட்டல் விநாயகா,

132, காமராஜா ரோடு,

ஜான் செல்வராஜ் நகர்,

ரயில்வே ஸ்டேஷன் எதிரில்,

கும்பகோணம் - 612 001,

Ph:096298 66611.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1.அனாஸ் ரெஸ்டாரன்ட்,

ஸ்ரீநகர் காலனி,

கும்பகோணம் - 612 001.

 

2.ஹோட்டல் சண்முகா,

எஸ்.ஹெச் 64 அண்ணா நகர்,

கும்பகோணம் - 612 001,

Ph : 0435 242 5350.

 

3.ஸ்ரீ கணேஷ் பவன்,

மூப்பனார் நகர்,

செட்டிமண்டபம் உள்ளூர் - 612 001,

Ph : 0435 200 1333.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 


ஐரவதேஸ்வரர் 
170m

உத்வாகநாதர் 
300m

உக்த வதேஸ்வரர் 
4.2km

மயூரநாதர் 
13.5km

கல்யாண சுந்தரேஸ்வரர் 
4.5km