அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் திருக்கோவில்
திருமருகல், திருவாரூர் மாவட்டம்
சுவாமி : மாணிக்கவண்ணர், ரத்னகிரீசுவரர்.
அம்பாள் : வண்டுவார்குழலி, ஆமோதளநாயகி.
தீர்த்தம் : இலட்சுமி தீர்த்தம் என்கிற மாணிக்க தீர்த்தம்.
தலவிருட்சம் : மருகல் - ஒருவகை வாழை.
தலச்சிறப்பு : கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில். வைப்பூரைச் சேர்ந்த செட்டிப் பெண் ஒருத்தி தன் தந்தையின் சொல் தவறக்கூடாது என்னும் வாய்மையில் தன் முறைமாமனோடு உடன்போக்கு செய்தாள். இத்தலத்தில் தங்கி இருந்த போது பாம்பு தீண்டி அச்செட்டிமகன் உயிர் துறந்தான். அப்பெண்ணின் அழுகை ஒலி கேட்டு திருஞானசம்பந்தர் அங்கு வந்து செய்தி அறிந்து செட்டிமகனை உயிர் பெற்று எழுமாறு அற்புதம் நிகழ்த்தித் திருமணம் செய்து வைத்தார். திருச்செங்காட்டங்குடியில் உள்ள கணபதீச்சரத்து இறைவன் தம் திருக்கோலத்தை திருஞானசம்பந்தருக்குக் காட்டி அற்புதம் நிகழ்த்திய தலம். இங்கு விநாயகர், முருகர், அறுபத்துமூவர், பராசரலிங்கம், நடராசர் சபை, பதஞ்சலி, வியாக்கிரபாதர், நவக்கிரகங்கள், பைரவர், சூரியன், செட்டிமகன், செட்டிப்பெண் திருவுருவங்கள், திருஞானசம்பந்தர், சப்தமாதர்கள், சௌந்தரநாயகி, தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரமன், துர்க்கை, முதலிய சந்நிதிகள் உள்ளன. "மருகல்" என்பது ஒரு வகை வாழை. இது "கல்வாழை" என்றும் சொல்லப்படுகிறது. இதைத் தல மரமாகக் கொண்டதால் இத்தலம் "திருமருகல்" என்று பெயர் பெற்றது.
பாடியோர் : சம்பந்தர், அப்பர்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள நகரம் : திருவாரூர்.
கோயில்முகவரி : அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் திருக்கோவில்,
திருமருகல், திருவாரூர் மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. ஹோட்டல் செல்வீஸ் (பி) லிமிடெட் 2,
கட்டுகார ஸ்ட்ரீட்,
சந்தமங்களம்,
திருவாரூர் - 610 002,
Ph : 04366 222 082.
2. அருண் ஹோட்டல்,
சந்தமங்களம்,
கே.டி.ஆர். நகர்,
திருவாரூர்,
தமிழ்நாடு - 610 001.
3. ஹோட்டல் காவேரி,
சந்தமங்களம்,
கே.டி.ஆர் நகர்,
திருவாரூர்,
தமிழ்நாடு - 610 003.
4. ஹோட்டல் எம்.எம்.எ,
டாக்டர் கலைஞர் நகர்,
மன்னார்குடி ரோடு,
டி.நகர்,
விளாமல்,
திருவாரூர் - 610001,
Ph:04366 220 218.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)