அருள்மிகு சுவேத விநாயகர் திருக்கோயில்
திருவலஞ்சுழி, கும்பகோணம் வட்டம்
சுவாமி : அருள்மிகு செஞ்சடைநாதர்.
அம்பாள் : அருள்மிகு பெரியநாயகி.
மூர்த்தி : சுவேத விநாயகர், வலஞ்சுழி விநாயகர், அஷ்டபுஜா காளி, உக்கிர பைரவ மூர்த்தி, சனீஸ்வரன் சண்முகர், ஏரண்ட முனிவர்.
தீர்த்தம் : காவேரி, அரசலாறு, ஜடா தீர்த்தம்.
தலவிருட்சம் : வில்வம் மரம்.
தலச்சிறப்பு : காவிரி வலமாகச் சுழித்துச் செல்லும் இடத்தில் உள்ளதால் வலஞ்சுழி எனப் பெயராயிற்று. வெள்ளைப் பிள்ளையார் இத்தலத்தில் சிறப்பு மூர்த்தி ஆவார். இவர் கடல் நுரையால் செய்யப்பட்டு இந்திரனால் பிரதிஷ்டை செய்யப் பட்ட மூர்த்தி ஆவார். இவ்விநாயகருக்கும் பச்சைக் கற்பூரம் மட்டுமே சாத்தப்படுகிறது.
தல வரலாறு : தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். ஆகையால், ஆலகால விஷம் பாற்கடலில் இருந்து வெளி வந்தது. பல்வேறு அவதிகளுக்கு உட்பட்ட தேவர்கள், தங்கள் தவறை உணர்ந்து பொங்கி வந்த கடல் நுரையைப் பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூஜை செய்தனர். அதன் பின்னரே அமுதம் பெற்றதாக புராணங்கள் சொல்கின்றது. தேவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர் தான் திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள்.
காவிரி நதி வலமாக சுழித்துச் செல்லும் இடத்தில் அமைந்து உள்ளதால் இத்தலம் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது. அவ்வாறு வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. அதுகண்ட சோழமன்னன் கவலையுற்றுத் திகைத்த போது, அசரீரியாக இறைவன், "மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் பலியிட்டுக் கொண்டால் அப்பிலத்துவாரம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்" என்று அருளினார். அது கேட்ட மன்னன் கொட்டையூர் என்ற ஊரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ள இடத்தில் தவம் செய்த ஏரண்ட முனிவரை அடைந்து அசரீரி செய்தியைச் சென்னான். இதைக் கேட்ட ஏரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன் வந்தார். அவர் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளிப்பட்டாள். ஏரண்ட முனிவருக்கு இக்கோவிலில் சிலை இருக்கிறது. இன்றும் மஹாசிவராத்திரி நாளில் இரவில் நான்கு ஜாமங்களிலும் ஆதிசேஷன் வெளிப்பட்டு திருவலஞ்சுழி, திருநாகேச்சுரம், திருப்பாம்புரம், நாகைக்காரோணம் என்னும் தலங்களில் வந்து வழிபடுவதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.
வழிபட்டோர் : திருமால், பிரம்மன், இந்திரன், உமையம்மை, ஏரண்ட முனிவர், ஆதிசேஷன்.
பாடியோர் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
பூஜை விவரம் : நான்கு கால பூஜை
திருவிழாக்கள் :
ஆவணி – சதுர்த்தி பிரம்மோற்சவம்,
ஏழாந் திருநாளன்று விநாயகருக்குத் திருக்கல்யாணம்,
விநாயக சதுர்த்தியன்று விநாயகருக்குத் தேர் புறப்பாடு.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு சுவேத விநாயகர் திருக்கோயில், (சுவாமிமலைத் திருக்கோயிலின் இணைக் கோயிலாகும்.)
திருவலஞ்சுழி, சுவாமிமலை(அஞ்சல்) - 612 302, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. ஹோட்டல் அழகு 24,
சன்னதி ஸ்ட்ரீட்,
சுவாமிமலை - 612 302,
Ph : +91-99449-09579.
2.இன்டிகோ சுவாமிமலை வில்லா,
6/30 பி ஆக்ராஹரம்,
பாபுராஜபுரம் (போஸ்ட்),
கும்பகோணம் - 612 302.
3. ஹோட்டல் சரவண பவன் 25பி & 25சி,
ஜீவரத்தினம் மளிகை,
கிரௌன் தியேடர் அருகில்,
டெய்லி தந்தி அருகில்,
ஆற்காடு ரோடு,
வேலூர் - 632 004.
Ph : 0416 221 7433.
4.ஓ.வி.எம் ரிசோர்ட்ஸ் கும்பகோணம்,
கும்பகோணம்.
5.வெங்கடராமன் ஹோட்டல்,
கர்ண கொள்ளை ஆக்ராஹரம்,
வலயபேட்டை ஆக்ராஹரம்,
கும்பகோணம்.
அருகில் உள்ள உணவகங்கள் :
1.ஸ்ரீ ஆதி கணேஷ் பவன் பியூர் வெஜிடேரியன் ஹோட்டல்
எண் 32, சன்னதி ஸ்ட்ரீட்,
சுவாமிமலை,
கும்பகோணம் - 612 302,
Ph : +(91)-9443161929, 7598578257.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)