அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோவில்

திருப்புத்தூர், சிவகங்கை மாவட்டம்

 Thirupathur---Bairavan_temple

சுவாமி : திருத்தளி நாதர்.

அம்பாள் : சிவகாமி.

மூர்த்தி : சோமாஸ்கந்தர்.

தீர்த்தம் : ஸ்ரீதளி தீர்த்தம்.

தலவிருட்சம் : கொன்றை.

தலச்சிறப்பு : இத்தல இறைவன் தானே தோன்றிய லிங்கமாக அருள்பாலிக்கிறார்.  அஷ்ட பைரவர்  தலம். சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 196 வது தேவாரத்தலம் ஆகும்.

தல வரலாறு : பல நூற்றாண்டுகளுக்கு முன் வால்மீகி கொலை, கொள்ளை போன்ற  பாவச்  செயல்களில் ஈடுபட்டு வந்தார், தன்னை திருத்திக் கொள்ள வேண்டி கொன்றை மரங்கள் நிறைந்த  ஒரு வனத்தில் சிவனை நோக்கி கடுந்தவம் இருந்தார்.  நீண்ட காலம் தவம் செய்ததால், அவர்  அமர்ந்து இருந்த இடத்தை சுற்றிலும் கரையான்கள் புற்று கட்டின.  அவரது தவத்தை மெச்சிய  சிவன் அவருக்கு காட்சி கொடுத்தார். புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர்  "புற்றீஸ்வரர்' எனப்பட்டார்.  அவ்வாறு காட்சி கொடுத்ததின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தலமே  இக்கோவில்.  புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், "புத்தூர்" என்று அழைக்கப்பட்ட இத்தலம்,  பின்னர் மரியாதைக்கு உரிய “திரு” என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, "திருப்புத்தூர்” ஆனது.  பிற்காலத்தில், இவ்விடத்தில் மன்னர்களால் கோயில் கட்டப்பட்டதாக தெரிகிறது.

நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் : சித்திரையில் பைரவர் விழா, கார்த்திகையில் சம்பக சஷ்டி.

அருகிலுள்ள நகரம் :  சிவகங்கை.

கோயில் முகவரி : அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோவில்,

திருப்புத்தூர் - 630 211, சிவகங்கை மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம்:

1.ஹோட்டல் கார்த்திக்,

போஸ்ட் ஆபீஸ் ரோடு, பிள்ளையார்பட்டி

அருகில், என்.ஹெச் 36 திருப்பதூர் - 630 211,

Ph : 04577 268 780.

2.செல்வம் ஹோட்டல்,

கோவிலூர் திருப்பதூர் ரோடு, கூத்தடைபட்டி,

பிள்ளையார்பட்டி - 630212.

3.தப்பா கார்டன்ஸ் ரிசோர்ட்,

687, மெயின் ரோடு, அறியாக்குடி,

காரைக்குடி

4.ஹோட்டல் சுபலட்சுமி பாலஸ்,

#1 சர்ச் பஸ்ட் ஸ்ட்ரீட், செக்காலை ரோடு,

செக்காலை, காரைக்குடி - 630 001,

Ph : 04565 237 010

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்

 

வைறவர் கோவில்
7.4km

சௌம்ய நாராயண பெருமாள்
8.8km

கற்பக விநாயகர்
8km

சண்முகநாதன்
11.7km

காரைக்குடி அம்மன்
15.7km