அருள்மிகு ஆளுடையார் திருக்கோவில்
உய்யக்கொண்டான் திருமலை, திருச்சி
சுவாமி : ஆளுடையார்.
அம்பாள் : மைவிழியாள், பாலாம்பிகை.
தலச்சிறப்பு : இக்கோவில் மலையை செதுக்கி உயரமான மலை மேல் அமைக்கப்பட்டுள்ளது ஆலயம். கருவறையில் இறைவன் ஆளுடையார், லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருடைய திருமேனி எட்டரை அடி உயரத்தில், பிரம்மாண்டமாக, அழகிய திருக்கோலத்துடன் அமைந்திருப்பதும் மற்றும் இங்கே அம்பாளுக்கு இரண்டு சந்நிதிகள் இருப்பது சிறப்பாகும். கிழக்கு நோக்கி இருக்கும் சந்நிதியில் அம்பாளுக்கு அஞ்சனாக்ஷி என்றும் தூய தமிழில் மைவிழியாள் என்றும் அழைக்கப்படுகிறாள். கண்களுக்கு மை தீட்டிய அந்தக் கருணைக் கடல், தமது ஒரு கண்ணால் பக்தர்களின் தீமைகளை அழித்து, மறு கண்ணால் நன்மைகளைப் பொழிகிறாள். மேற்கு நோக்கி இருக்கும் மற்றொரு சந்நிதியில் பாலாம்பிகை என்ற திருநாமத்துடன் அம்பிகை அருள்பாலிக்கிறாள். தெற்கில் தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் பெருமாளும், வடக்கில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்க, விஷ்ணு துர்க்கையின் எதிரே சண்டீஸ்வர சன்னதி, ஆஞ்சநேயர், விநாயகர் சன்னதிகளும் உள்ளன. முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம், நடுவே பிரமாண்டமான நந்தி மண்டபமும் உள்ளது.
தல வரலாறு : ராவணனின் தந்தையான விச்சிரவசுவுக்கும் சாகை என்பவளுக்கும் பிறந்த மூன்று புதல்வர்களுள் மூத்தவன் தான் கரன். இவனது சகோதரர்கள் தூஷணன், திரிசரன் என்பவர்கள். கரன், திரிசரனின் சேனாதிபதியாய் இருந்தான். கரன் தவம் செய்வதற்காக ஒரு சிவன் கோயிலைக் கட்டத் திட்டமிட்டான். திரிசரன் திருச்சியை அரசாண்ட போது, கரன் உய்யக்கொண்டான் திருமலையில் ஒரு சிவன் கோயிலைக் கட்டிமுடித்தான். அதுவே ஆளுடையார் திருக்கோவில் என்பது புராண வரலாறு.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழாக்கள் :
பிரதோஷம்,
சிவராத்திரி,
சோம வாரங்கள்,
கடைசி சோம வாரத்தின் போது சங்காபிஷேகம்,
ஐப்பசி பௌவுர்ணமியில் அன்னாபிஷேகம்.
அருகிலுள்ள நகரம் : திருச்சி.
கோயில் முகவரி : அருள்மிகு ஆளுடையார் திருக்கோவில்,
உய்யக்கொண்டான் திருமலை, திருச்சி மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. மதுரா ஹோட்டல்,
No.1 ராக்கின்ஸ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 001.
ஜங்சன் ரோடு,
கண்டோன்மெண்ட்,
Ph : +(91)-431-2414737, +(91)-9894558654.
2. மாயவரம் லாட்ஜ் No 87,
வண்ணாரபேட்டை தெரு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 002,
தெப்பக்குளம் அஞ்சல்,
Ph : +(91)-431-2711400, 2704089.
3. பெமினா ஹோட்டல் 109,
வில்லியம்ஸ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 001,
மத்திய பேருந்து நிலையம்,
ரெயில்வே ஜங்ஷன்,
Ph : 0431 - 2414501.
4. ஹோட்டல் ராக்போர்ட் வியுவ் 5,
ஓடத்துறை ரோடு,
சிந்தாமணி,
திருச்சிராப்பள்ளி - 620 002,
Ph : +91 740 2713466.
5. கிராண்ட் கார்டினியா,
22 - 25 மன்னார்புரம் ஜங்ஷன்,
திருச்சி - 620 020,
Mobile : +91 95856 44000, Tel : +91 431 4045000.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. ரகுநாத் ரெஸ்டாரன்ட்,
காலேஜ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 002.
2. பார்த்தசாரதி விலாஸ்/ வீகன் ரெஸ்டாரன்ட்,
கொண்டையன் பேட்டை ஆக்ரஹராம்,
திருவானை கோவில்,
திருச்சி - 620 002.
Trichy-620020,Tamilnadu.
Mobile : +91 95856 44000.
Tel : +91 431 4045000.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)