அருள்மிகு மகரநெடுங்குழைக்காதன் திருக்கோவில்

தென்திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டம்

Then-thiruperai_temple

சுவாமி : மகரநெடுங்குழைக்காதன்.

அம்பாள் : குழைக்காதநாச்சியார்.

தீர்த்தம் : சுக்கிரவுகரணி, சங்கு தீர்த்தம், கூடுபுனல் தீர்த்தம்.

விமானம் : பத்ர விமானம்.

தல வரலாறு : ஸ்ரீமத் நாராயணன் திருமாலை விடுத்து பூமிதேவியிடம் அதிக ஈடுபாடு கொண்டதாக நம்பிய திருமகள் துர்வாச முனிவரிடம் பூமா தேவியை போல, தான் அழகு இல்லாத காரணத்தால்  ஸ்ரீமந் நாராயணனே தன்னை வெறுக்கின்றார்.  அதனால் அவளை போன்றே தனக்கும் அழகும்  நிறமும் வேண்டும் எனக் கேட்டார்.  துர்வாசரும் பூமிதேவியை காண வந்த பொழுது திருமாலின்  மடியில் அமர்ந்து துர்வாசரை மதியாமல் இருக்க, கோபத்தில் துர்வாசகர் பூமாதேவியை நீ  இலக்குமியின் உருவத்தை பெறுவாய் என சாபமிட்டார்.  எனவே சாப விமோசனம் பெற பூமாதேவி  இத்தலம் வந்து ஓம் நமோ நாராயணன் என்ற மந்திரத்தை ஜெபம் செய்து வர பங்குனி பவுர்ணமி  தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும் பொழுது இரண்டு மகர குண்டலங்கள் (மீன்  வடிவான காதில் அணியும் ஓர் அணிகலன்) கிடைக்க அப்பொழுது திருமால் பிரத்யட்சமாக  குண்டலங்களை திருமாலுக்கு அளித்து மகிழ்ந்தார்.

தேவர்கள் பூ மாரி சொரிய பூமா தேவியின் மேனி அழகானது.  லக்குமியின் உடலுடன் பூமா தேவி தவமிருந்தால் ஸ்ரீபோரை (லக்குமியின் உடலைப் பெற்றவர்) என்று ஆனது.  இன்று பெருமாள் மகர குண்டலங்களுடன் காட்சியளிக்கிறார்.  இதனால் பொருளின் திருநாமம் மகர நெடுங்குழைகாதன்  (மீன் வடிவிலான நீண்ட காதணிகளை அணிந்தவன்) வருணன், அசுரர்களிடம் போரிட்டு தன் பாசம்  என்னும் ஆயுதத்தை இழந்து இத்தலம் வந்து தவம் செய்து திரும்பப் பெற்றதால் இத்தலத்தில் மழை  வேண்டி (வருண பகவானை) பிராத்திக்கும் பிராத்தனைகள் இன்று வரை பொய்ப்பதில்லை.   சுக்கிரனும் இங்கு வந்து பெருமாள் அருள் பெற்றார். 

விதர்ப்ப நாட்டு மன்னன் இங்கு வந்து வழிபட்டதால் நாட்டின் 12 வருட பஞ்சம் நீங்கி நாடு  செழித்ததாக வரலாறு கூறுகிறது.  பிரம்மனும் ஈசானய ருத்தரருக்கும் முன்பாக குழைக்காத  நாச்சியார், திருப்பேரை நாச்சியார் சகிதம் வீற்றிருந்த பரமபத திருக்கோலத்தில் பெருமாள் சேவை  சாதிக்கின்றார்.  வேதம் ஓதி வரும் வேத வித்தைகளை காணவும், ஓடி விளையாடும்  குழந்தைகளின் மகிழ்ச்சியை காணவும் இங்கு பெருமாள் கருடனை ஒதுங்கி இருக்க கூறியதால்  கருடன் சன்னதி பெருமாளுக்கு இடப்பக்கமாக விலகி அமைந்துள்ளது.

வேத ஒலியும் விழா ஒலியும் பிள்ளைக் குழாவிளையாட்டு ஒலியும் அறாத்திருப்பேரையில்  சேர்வன் நானே.  என்ற நம்மாழ்வார் பாசுரமும் இதையே காட்டுவதாக கூறப்படுகின்றது.   நம்மாழ்வார் காலத்திற்கும் முன்னே அமையப் பெற்றது.  இக்கோவில் பின் பத்தாம் நூற்றாண்டின்  மத்தியில் கொடி மரமும், மண்டபமும், பின் வெளி மண்டபம், தேரும் செய்யப்பட்டுள்ளதாக  கல்வெட்டுகள் கூறுகின்றன. சுந்தரபாண்டியனுக்கு குழந்தை பேறு பெற வேண்டி அவனால் சோழ  நாட்டில் இருந்து இவ்வூருக்கு அழைத்து வரப்பட்டு தினசரி பெருமாளை பூஜை செய்வதற்காக  குடியமர்த்தி பொன்னும் பொருளும் கொடுக்கப்பட்ட ஜெய்முனி சாமவேத தலவகார நூற்றெண்மர்  வழி வந்த அவ்வூர் அந்தணர்கள் பெருமாளை தங்களுள் ஒருவராகவே கருதி கைங்கரியங்களை  செய்து வருகின்றனர்.

சுந்தர பாண்டியனுக்காக 108 நபர் இருந்தனர்.  பெருமாளே காணாமல் போன நபர் வடிவில் அரசன்  முன் தோன்றினார் எனவும் அதனால் பெருமாள் எங்களில் ஒருவர் எனவும் இவ்வூர் மக்கள்  கூறுகின்றனர்.  இங்கு பங்குனி ப்ரமோஸ்தலத்தின் 5ம் திருநாள் இரவு பெருமாள் கருட சேவையில்  பிரதான வாயிலில் இருந்து வெளி மண்டபத்திற்கு ஏழுகின்ற சமயத்தில் பெருமாளை சேவிக்கும்  நாத்திகனும் ஆத்திகனும் ஆவான்.

வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாத அப்பேற்பட்ட காட்சி அது.  ஸ்ரீ ரங்கநாதனின் அழகை முகில்வண்ணன் (அழகுடையவன்) என்று பாடிய நம்மாழ்வார் பின்வரும் பாடலில் நிகரில் முகில் வண்ணன் (ஈடு இணையற்ற அழகுடையவன்) என்று ஸ்ரீமகர நெடுங் குழைக்காதனை பாடியுள்ளார்.   “கூடுபுனல் துறையும் (தாமிரபரணி கரை) குழைக்காதனை திருமாலையும் கிடைக்க கொடுத்து  வைத்திருக்க வேண்டும்” என்பது இவ்வூரில் வழக்கில் உள்ள ஒரு கூற்று.

நடைதிறப்பு : காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல்  இரவு 7.30 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : திருநெல்வேலி.

கோவில் முகவரி : அருள்மிகு மகரநெடுங்குழைக்காதன் திருக்கோவில்,

தென்திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டம்.

 அருகில் உள்ள தங்கும் இடம் :

1. ஹோட்டல் எம். என். ஹெச் ராயல் பார்க்,

எம். என். ஹெச் ஜிவல்லரி கேம்பஸ்,

64-D, மதுரை ரோடு,

திருநெல்வேலி ஜங்ஷன்,

திருநெல்வேலி 627 001,

Ph : 0462-2320404, 0462-2324617, 0462-2324618, 0462-2324619.


2. ஹோட்டல் அப்லெட் ட்ரீ,

நார்த் பய்பாஸ் ரோடு(பாலம் எதிரில்),

வண்ணாரபேட்டை,

திருநெல்வேலி 627 003,

Ph : (+91) 95 95 333 333.


3. ஸ்ரீ பரணி ஹோட்டல்,

29 - A, மதுரை ரோடு,

திருநெல்வேலி ஜங்ஷன்,

திருநெல்வேலி - 627 001.


4. ஹோட்டல் எ.எ.ஆர் ராயல் பார்க், 996/1-B,

கிரீன் போரஸ்ட் பர்னிசர் மார்ட் எதிரில்,

வசந்தா நகர்,

நியூ பஸ் ஸ்டாண்ட் அருகில்,

திருநெல்வேலி 627 007,

Ph : 0462 – 2555900.


5. ஹோட்டல் எம்.என்.ஹெச் ராயல் பார்க்,

எம்.என்.ஹெச் ஜிவல்லரி கேம்பஸ்,

64-டி, மதுரை ரோடு,

திருநெல்வேலி ஜங்ஷன்,

திருநெல்வேலி - 627001.

 

அருகில் உள்ள உணவகங்கள்:

1. மாருதி ரெஸ்டாரன்ட் ஸ்ரீ ஜானகிராம் ஹோட்டல்ஸ்,

மதுரை ரோடு ஜங்ஷன்,

திருநெல்வேலி - 627 001,

Ph : 0462-2331941.


2. ஹோட்டல் நெல்லை சரவண பவன் திருநெல்வேலி ஜங்ஷன்,

டவுன் அண்ட் பாளையம்கோட்டை,

திருநெல்வேலி - 627 001,

Ph : 0462 233 5917.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
வைத்தமாநிதிபெருமாள்
4.2km

இரட்டை திருப்பதி(ராகு)
10.4Km

இரட்டை திருப்பதி(கேது)
10.1Km
மாயகூத்தர்
11.4Km
ஆதிநாத பெருமாள
5.9Km
காய்சினவேந்தன
10.2Km