ஸ்ரீ பகவத் விநாயகர் கோவில்

கும்பகோணம்

Sri-Bagavath-Vinayagar_temple


சுவாமி : ஸ்ரீ பகவத்விநாயகர்.

தலச்சிறப்பு : கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் இத்திருகோவிலும் ஒன்று.  இக்கோயில் நாகேஸ்வரர் கோயில்  திருமஞ்சன வீதியில் உள்ளது.  இக்கோயிலை பகவத் விநாயகர் கோயில் என்றும் பகவ விநாயகர் கோயில் என்றும்  அழைக்கின்றனர்.  காசியை விட அதிக புண்ணியம் கொண்டதாக கும்பகோணம் பகவத் விநாயகர் கோயில் திகழ்வதாக  புராணங்கள் தெரிவிக்கிறது.  பழமை வாய்ந்த இந்த கோயில் கடந்த 1692ம் ஆண்டிலேயே திருப்பணி செய்யப்பட்ட கோயிலாகும்.

கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் மடத்துத் தெருவில் அருள்பாலித்து வரும் பகவத் விநாயகர் கோயில், காசி விஸ்வநாதர்  கோயிலின் இணை கோயிலாக திகழ்ந்து வருகிறது.  பிரசித்தி பெற்ற இந்த கோயில் கும்பாபிஷேகம் 2006ம் ஆண்டு நடைபெற்றது.   இதை தொடர்ந்து வரும் 2016-ல் கும்பகோணத்தில் மகாமக திருவிழா கொண்டாடப்பட உள்ளதால் பகவத் விநாயகர் கோயிலிலும்  திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தல வரலாறு : வேதாரண்யத்தில் ஸ்ரீபகவர் மகரிஷி தன் சீடருடன் வசித்து வந்தார்.  ஸ்ரீ பகவரின் முனிவரின் வயதான தாயார்  உடல்நிலை பாதிக்கப்பட்டு இறக்கும் தறுவாயில் தன் மகனிடம் “நான் இறந்ததும் என் அஸ்தியை ஒரு கலசத்தில் சேகரித்து  புனிதத் திருத்ததலங்களுக்கு எடுத்துச் செல், எங்கு என்னுடைய அஸ்தி மலர்களாக மாறுகிறதோ, அங்கு ஓடும் புனித நதியில்  கரைத்து விடு” என்று கூறிவிட்டு உயிர் துறந்தார்.

இதனால் ஸ்ரீ பகவர் தன் சீடருடன் தாயாரின் அஸ்தியை எடுத்துக்கொண்டு தீர்த்த யாத்திரை சென்றார்.  அவர் திருகுடந்தை வந்து  காவேரி நதியில் நீராடும் போது, சீடனுக்கு பசியின் காரணமாக எதாவது பலகாரம் இருக்கும் என்று அஸ்திக்கலசத்தை திறந்து  பார்க்க அதில் மலர்கள் இருக்கக்கண்டு ஏமாற்றம் அடைந்து முன்பு இருந்தது போல முடிவைத்து விடுகிறார்.  இச்செயல்  குருவிற்கு தெரியாது.  காசியிலே தான் ஹஸ்தி மலருமென்று எண்ணிய குரு நாதர் காசியிலும் மலராதது கண்டு அதிர்ச்சி  அடைந்தார்.

அப்போது குருவிற்கு சீடர் குடந்தை(கும்பகோணம்)யில் நடந்ததை கூறினார்.  மீண்டும் பகவர் கும்பகோணம் அடைந்து காவேரி  ஆற்றில் ஸ்நானம் செய்து விட்டு, அஸ்தி மலர்களாக மாறியிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியுற்று அஸ்தியை கரைக்கிறார்.  இதனால் கும்பகோணத்துக்கு காசியை விடவும் வீசம் அதிகம் என்று காட்டியருளிய மரத்தடியில் இருந்த விநாயகரை இங்கேயே  தங்கி தன் சீடருடன் வழிபடவே அன்று முதல் இந்த கணபதிக்கு “ஸ்ரீ பகவத் விநாயகர்” என்ற பெயர் வரலாயிற்று.  காசிக்கு வீசம்  பெரிது கும்பகோணம் என்று உணர்த்தும் வகையில் பகவரின் வலது கை முத்திரை உள்ளது".

மூலஸ்தானத்தில் மூலவராக எளுந்தருளி உள்ள பகவத் விநாயகர் மிகவும் அழகாக இருக்கின்றார்.  நவகிரக தோஷங்களை  நீக்கியருளும் வரபிசாதி.  இவரது நெற்றியில் சூரியன், நாபிக்கமலத்தில் சந்திரன், வலது தொடையில் செய்வாய், வலது கீழ்க்கை  புதன், சிரஸில் வியாழன், இடது கீழ்க் கரம் சுக்கிரன், வலது மேல் கையில் சனி, இடது மேல் கையில் ராகு, இடது தொடையில்  கேது என நவக்கிரகங்கள் குடி கொண்டுள்ளனர்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

திருவிழாக்கள் : விநாயகர் சதுர்த்தி.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : ஸ்ரீ பகவத் விநாயகர் கோவில்,

கும்பகோணம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

 

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2.சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3.குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4.ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்
ராமசுவாமி கோவில்
600 m

வீரபத்திர சுவாமி
750 m

ஆதிகும்பேஷ்வர சுவாமி
650m
நாகேஸ்வர சுவாமி
290m
சாரங்கபாணி சுவாமி
290 m
சோமேஷ்வர சுவாமி
210 m