அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோவில்

திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்

Sri-sathyamoorthi-perumaal_temple

சுவாமி : சத்தியமூர்த்தி.

அம்பாள் : உஜ்ஜிவனதாயார்.

தலச்சிறப்பு : பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.  இது ஒரு குடைவரைக் கோயிலாகும். இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர்.  பல்லவர் காலத்தில்  சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் சிவன் கோவிலும்  பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.  இந்த சத்திய மூர்த்தி பெருமாள் ஆலயத்தை தனியே சுற்றி  வரமுடியாது.  மூலவர் சந்நிதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது என்பது சிறப்பு.

தல வரலாறு : மது, கைடபர் என்னும் அரக்கர்கள் பெருமாள் பாம்பணையில் படுத்து  உறங்கிக்  கொண்டு இருக்கும் போது ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை அபகரிக்க வருகின்றனர்.  அதை கண்டு  அஞ்சிய ஸ்ரீதேவி பெருமாளின் மார்பிலும், பூதேவி பெருமாளின் திருவடி அருகிலும்  ஒளிந்து  கொண்டனர்.  அப்போது பெருமாளின் உறக்கம் கலையக்கூடாது என்று ஐந்து தலை நாகம்  ஆதிஷேசன் தன் வாயிலிருந்து நஞ்சை கக்கி அரக்கர்களை விரட்டிவிடுகிறது.  பெருமாளின்  அனுமதி இல்லாமல் இப்படி செய்து விட்டோமே என்று நாகம் அஞ்சி இருக்கும் நேரத்தில் பெருமாள்  என் அனுமதியின்றி செய்தாலும் நல்லதே செய்திருக்கிறாய் பாராட்டுக்குரிய செயல் என்று  கூறியதாக வரலாறு.  இதை மெய்ப்பிக்கும் வகையில் இத்தலத்தில் ஆதிசேஷன் தன் தலையை  அஞ்சி சுருங்கியவாறு காட்சி தருவது சிறப்புக்குரியது.

பாடியோர் : திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் பாடிய ஸ்தலம்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

திருவிழாக்கள் :

வைகாசி பௌர்ணமி தேர் - 10 நாட்கள் விழா,

ஆடிபூர திருவிழா - 10 நாட்கள் திருவிழா,

கிருஷ்ணஜெயந்தி,

வைகுண்ட ஏகாதேசி.

அருகிலுள்ள நகரம் : புதுக்கோட்டை.

கோயில் முகவரி : அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோவில்,

திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்.

தொலைபேசி எண் : 04322 -221084, 99407 66340.

அருகில் உள்ள தங்கும் இடம்:

1.சிதம்பர விலாஸ்,

செட்டிநாடு, ராமநாதபுரம்,

கடியாபட்டி, புதுகோட்டை - 622 505,

Ph :095855 56431.

 

2. சாரதா விலாஸ் ஹெரிடேஜ் ஹோம் இன் செட்டிநாடு,

832 மெயின் ரோடு, கொத்தமங்கலம்,

காரைக்குடி வட்டம் - 630 105.

 

3. ஹோட்டல் சத்யம்,

1 சத்தியமூர்த்தி ரோடு, புதுகோட்டை,

புதுகோட்டை - 620 008.

 

4. விசாலம்,

7/1 - 143, லோக்கல் பன்ட் ரோடு,

கனடுகத்தான் - 630103

 

அருகில் உள்ள  உணவகள்:

 1.அப்புஸ் குரிஸ் பேமிலி ரெஸ்டாரன்ட்,

No: 5/p, பூங்கா நகர், ராஜகோபாலபுரம்,

ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பாரத ஸ்டேட் வங்கி எதிரில்,

புதுகோட்டை - 622 003, Ph : 04322 261 541

 

2. ஸ்ரீ ஐஸ்வர்யா ரெஸ்டாரன்ட்,

மார்த்தண்டபுரம்,

புதுகோட்டை - 622 001.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 

ஸ்ரீபைரவர் ஆலயம் 
700m

சத்யகிரீஸ்வரர் 
120m
சுந்தரசுவாமிகள் 
17.7km

மீனாட்சிசுந்தரேஸ்வரர்
17.8km

ஜெயவிளங்கி அம்மன்
17.9km

முத்துமாரியம்மன் 
26.9km