அருள்மிகு பயறணீநாத சுவாமி திருக்கோவில்
உடையார் பாளையம், அரியலூர் மாவட்டம்
சுவாமி : பயறணீஸ்வரர்.
தலச்சிறப்பு : இவ்வாலயம் அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலாவுக்கு சிறந்த இடமாகும்.
தல வரலாறு : இக்கோவில் 1400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வூர் வழியே சென்ற வணிகன் ஒருவன் மிளகுக்கு அக்காலத்தில் அதிக வரி விதிக்கப் பட்டதால் அவற்றை பயிறு என்று பொய் கூறிக் குறைந்த வரி செலுத்தி விட்டுக் கொண்டு செல்ல, விருத்தாச்சலம் சென்று பார்க்கும் போது மிளகெல்லாம் பயிறாகி இருக்கவே, இத்தல சிவபெருமான், வணிகன் பொய் சொல்லிச் சென்றதற்கு அளித்த தண்டனை என்பது உணர்ந்து இங்கு வந்து வழிபட்டு முறையிட்டு இறையருளால் பயிற்கள் எல்லாம் மீண்டும் மிளகாக மாறப்பெற்றான். இதனாலேயே இத்தல இறைவனாருக்கு "பயறணி நாதர்" என்ற திருப்பெயரும், ஊருக்கு "பயறணீச்சுரம்" என்ற பெயரும் ஏற்பட்டன.
இங்கே உள்ள “திரு பயறணீசுவரர் ஆலயம்” தமிழகத்தின் தொன்மையான கோயில்களில் ஒன்று. சுவாமியின் திருநாமம் வடமொழியில் முற்கபுரீசுவரர் எனவும் தமிழில் பயறணீநாதர் எனவும் மற்றும் அம்பிகையின் திருநாமம் தமிழில் நறுமலர்ப் பூங்குழல்நாயகி எனவும் வடமொழியில் சகுந்தளாம்பிகை எனவும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள வில்வளைத்த பிள்ளையார் அருச்சுனனுக்கு காண்டீப வில்லை வளைத்துக் கொடுத்தவர் என்று ஐதீகம். இவர் திருக்கரத்தில் ஒரு வில் உள்ளது.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம்12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : ஜெயங்கொண்டம்.
கோயில் முகவரி : அருள்மிகு பயறணீநாத சுவாமி திருக்கோவில்,
உடையார் பாளையம், அரியலூர் மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1.ஸ்ரீ ராம் லாட்ஜ்,
பஸ் ஸ்டாண்ட் ரோடு,
ஜெயங்கொண்டம்,
Ph : 04331250521.
2.சுபா லாட்ஜ் ஏ/சி,
27, பஸ் ஸ்டாண்ட் ஜெயங்கொண்டம்.
3.குமரன் லாட்ஜ்,
சிதம்பரம் ரோடு,
ஜெயங்கொண்டம்,
Ph : 250218.
4.பி.வி.ஆர் லாட்ஜ்,
கடைவீதி,
ஜெயங்கொண்டம்,
Ph : 250950.
5.முருகன் லாட்ஜ்,
சிதம்பரம் ரோடு,
ஜெயங்கொண்டம்,
Ph : 250401.
அருகில் உள்ள உணவகங்கள் :
1.ஹோட்டல் சுந்தரம்,
64/127-A, திருச்சி ரோடு,
டி.என்.இ.பி. ஆபீஸ்,
ஜெயங்கொண்டம் - 621 802,
Ph : (04331) 253516.
2.காமாட்சி ரெஸ்டாரன்ட்,
3, ஈஸ்வரி காம்ப்ளெக்ஸ்,
ஒதா ஸ்ட்ரீட்,
ஜெயங்கொண்டம் மெயின் பஸ் ஸ்டாண்ட்,
ஜெயங்கொண்டம் - 621 802,
Ph : (04331) 250800.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)