அருள்மிகு மருதாந்தநாதேஸ்வரர் திருக்கோவில்
ஆங்கரை, லால்குடி வட்டம்
சுவாமி : மருதாந்தநாதேஸ்வரர்.
அம்பாள் : சுந்தர காஞ்சனி.
தலச்சிறப்பு : இக்கோயிலில் அம்பாளையும் சுவாமியையும் ஒரே நேரத்தில் சுற்றி வந்துவிடலாம். கோவில் கிழக்கு நோக்கி இருந்தாலும் தெற்கு நோக்கிய வாசலே பயன்படுத்தப்படுகிறது. அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியும், சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும் அமைக்கப்பட்டு, ஒரே மண்டபமாக கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அமைவது மிகவும் அரிதானது.
தல வரலாறு : சுஹோலர் என்ற முனிவரின் மகன்தான் மருதாந்தன் என்பவன். சுஹோலரின் மனைவி நடத்தை சரியில்லாததால் அவளை ஒதுக்கிவிட்டார் முனிவர். விலகிப்போன மனைவியோ பாவத்தொழிலை செய்து வந்தாள். மருதாந்தன் வாலிபனானான். அந்நாட்டு இளவரசனின் நட்பு அவனுக்கு கிடைத்தது. இளவரசன் பெண் பித்தனாக இருந்தான். அவனோடு சேர்ந்த மருதாந்தனும் அவனைப் போலவே ஆனான். ஒருமுறை அவர்கள் தாசி (தங்களை விட வயதில் கூடிய ஒரு பெண்) வீட்டிற்கு சென்றனர்.
அந்த பெண்ணிற்கோ இளவரசனுடன் வந்திருந்த வாலிபனைப் பார்த்ததும் சந்தேகமாக இருந்தது. இருப்பினும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அதன்ப்பிறகே, அந்த பெண் வந்த வாலிபன் தனது மகன் என்பதை தெரிந்துகொண்டாள். அந்த வாலிபனோ எப்பேர்ப்பட்ட பாவத்தை செய்துவிட்டோம் என புலம்பித் தீர்த்தான். அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. காட்டில் போய் தியானத்தில் அமர்ந்துவிட்டான். இறைவனைக் காணாதவரை எதுவுமே சாப்பிடுவதில்லை என்று உறுதியெடுத்தான். அறியாமல் பெரும் பிழை செய்த அந்த வாலிபனின் முன் சிவபெருமான் தோன்றினார். அவன் செய்த பிழைக்கு மன்னிப்பு வழங்கினார்.
“எந்த ஒரு வாலிபனும் எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவனது தாயாகவே கருத வேண்டும். இதை உலகிற்கு உணர்த்தவே இந்த கொடும் நாடகம் ஆடினேன். கலியுகத்தில் இது போன்ற கொடுமைகள் நிகழலாம், எனவே அவர்கள் எல்லாம் திருந்தவே இவ்வாறு செய்தேன்”என்றார். இருப்பினும் அந்த வாலிபனின் மனது படாதபாடுப்பட்டது. இந்த தோஷத்திற்கு விமோசனம் என்ன என கேட்டான். அதற்கு இறைவன் தனக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட்டால் பாவம் தீரும் என்றார். அதன் பின் தனது சொந்த உழைப்பில் மருதாந்தன் சிவனுக்கு கோயில் அமைத்தான். அவனுக்கு அம்பாள் ஆறுதல் கூறினாள். இத்தலத்தில் உள்ள அம்பாள், சுந்தர காஞ்சனி என அழைக்கப்படுகிறாள்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழாக்கள் :
தமிழ் புத்தாண்டு,
வைகாசி விசாகம்,
ஆடி கிருத்திகை,
விநாயகர் சதுர்த்தி,
நவராத்திரி,
கந்தசஷ்டி,
திருக்கார்த்திகை,
பங்குனி உத்திர நாட்களில் சிறப்பு பூஜை உண்டு.
அருகிலுள்ள நகரம் : திருச்சி.
கோயில் முகவரி : அருள்மிகு மருதாந்த நாதேஸ்வரர் திருக்கோவில்,
ஆங்கரை, லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. மதுரா ஹோட்டல்,
No.1 ராக்கின்ஸ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 001.
ஜங்சன் ரோடு,
கண்டோன்மெண்ட்,
Ph : +(91)-431-2414737, +(91)-9894558654.
2. மாயவரம் லாட்ஜ் No 87,
வண்ணாரபேட்டை தெரு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 002,
தெப்பக்குளம் அஞ்சல்,
Ph : +(91)-431-2711400, 2704089.
3. பெமினா ஹோட்டல் 109,
வில்லியம்ஸ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 001,
மத்திய பேருந்து நிலையம்,
ரெயில்வே ஜங்ஷன்,
Ph : 0431 - 2414501.
4. ஹோட்டல் ராக்போர்ட் வியுவ் 5,
ஓடத்துறை ரோடு,
சிந்தாமணி,
திருச்சிராப்பள்ளி - 620 002,
Ph : +91 740 2713466.
5. கிராண்ட் கார்டினியா,
22 - 25 மன்னார்புரம் ஜங்ஷன்,
திருச்சி - 620 020,
Mobile : +91 95856 44000, Tel : +91 431 4045000.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. ரகுநாத் ரெஸ்டாரன்ட்,
காலேஜ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 002.
2. பார்த்தசாரதி விலாஸ்/ வீகன் ரெஸ்டாரன்ட்,
கொண்டையன் பேட்டை ஆக்ரஹராம்,
திருவானை கோவில்,
திருச்சி - 620 002.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)