அருள்மிகு அமுதவல்லி நாச்சியார் உடனுறை உலகளந்த பெருமாள் கோயில்

காஞ்சிபுரம்

Ulagalantha-perumal_temple


சுவாமி : அருள்மிகு உலகளந்த பெருமாள்.

அம்பாள் : அமுதவல்லி நாச்சியார்.

விமானம் : ஸாரஸ்ரீகர விமானம்.

தீர்த்தம் : நாகதீர்த்தம்.

தலச்சிறப்பு : அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுர மாவட்டத்தில்  மட்டும் மொத்தம் 4 கோவில்கள் உள்ளது நான்குமே திவ்ய தேசத்தை சேர்ந்தவை என்பது மிகவும்  சிறப்பான ஒன்று.  அவை 1. திருஊரகம் 2. திருநீரகம் 3. திருக்காரகம் மற்றும் 4. திருக்கார்வானம்.   இது காஞ்சிக்குக் கிடைத்தப் பெருமை ஆகும்.  திருஊரகத்தைத் தவிர மற்ற மூன்றும் வேறு எங்கோ  இருந்ததாகவும் பிறகு இங்குப் பிரதிஷ்டை செய்ததாகவும் செய்திகள் உண்டு.

திருக்கோவில் அமைப்பு :  இத்திருக்கோவில் தற்போது உள்ள பூமியின் மேல் மட்டத்திலிருந்து  சுமார் 6 அடி தாழ்ந்து அமைந்துள்ளது.  அதாவது இத்திருக்கோயிலின் நுழைவு வாயிலை  அடைந்தவுடன் சுமார் 8 படிகள் கீழ் இறங்கிச் சென்ற பின்பே திருக்கோயிலை அடையலாம்.  மூலவர் சுவாமி உலகளந்தபெருமாள் மேற்குப்பார்த்தவண்ணம், நின்ற திருக்கோலத்தில்  திரிவிக்கிரம (வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது) வடிவத்தில்  பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.

தல வரலாறு : இப்புராணம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.  அதாவது மகாபலி அசுரேந்திரனாக  முடி சூட்டிக் கொண்டதும் அவனது கட்டளை மூன்று லோகங்களிலும் செயல்பாட்டிற்கு வந்தது.  அதனால் தேவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.  தேவர்களின் கஷ்டங்களைப் போக்கவும்,  மகாபலியின் கொட்டத்தை அடக்கவும், திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் சென்று  நிம்மதியாகப் பகவானைத் தியானிக்க, தனக்கென்று ஒர் இடம் தேவைப்படுகிறது.  அதனை  அளித்தால் நன்மையாக இருக்கும் எனக் கேட்டார்.

மகாபலியும் இதற்கு உடன்பட்டு தேவையான அளவு இடத்தை எடுத்து கொள்ளக் கூறினார்.  உடனே திருமால் திரிவிக்ரம வடிவம் எடுத்து தன்னுடைய ஒரு திருவடியால் மேலுலகத்தையும், மற்றொரு அடியால் கீழுலகத்தையும் அளந்தார்.  மூன்றாவது அடிக்கு இடமில்லை என மகாபலியிடம்  வாமனர் கூற, அதற்கு மகாபலி அடியேனின் சிரசு இருக்கிறது என்று கூற, திரிவிக்கிரமர் தன்  பாதத்தை மகாபலியின் தலையில் வைத்து அழுத்தி அவனைப் பாதாள லோகத்தில் கொண்டு  சேர்த்தார்.  மீண்டும் மூன்று லோகத்தையும் இந்திரரிடம் இருக்குமாறு செய்தார்.  என்பது புராண  வரலாற்றுச் செய்தியாகும்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு  8.00 மணிவரை நடைதிறந்திருக்கும்.

அருகிலுள்ள நகரம் : காஞ்சிபுரம்.

கோயில் முகவரி : அருள்மிகு அமுதவல்லி நாச்சியார் உடனுறை உலகளந்த பெருமாள் கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

தொலைபேசி எண் : 94425 53820.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. ஜி.ஆர்.டி ரெசிடென்சி காஞ்சிபுரம்,

487, காந்தி ரோடு,

காஞ்சிபுரம் - 631 502,

+(91)-44-27225250, +(91)-9940184251.

 

2. எம். எம் ஹோட்டல்,

No. 65 - 66, நெல்லுகார ஸ்ட்ரீட்,

காஞ்சிபுரம் - 631 502,

Ph : +(91)-44-27227250, +(91)-8098827250.

 

3. "ஹோட்டல் பாபு சூர்யா No. 85,

ஈஸ்ட் ராஜா ஸ்ட்ரீட் காஞ்சிபுரம்,

காமாட்சி அம்மன் கோவில் எதிரில்,

காஞ்சிபுரம் - 631 501, 

Ph : +(91)-44-27222556, +(91)-9597121214.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. சரவண பவன் 66,

அன்னை இந்திரா காந்தி ஸ்ட்ரீட்,

காஞ்சிபுரம் - 631502,

Ph : 4427226877.


2. ஹோட்டல் சரவண பவன் 504,

காந்தி ரோடு,

இந்தியன் ஓவர்சிஸ் பாங்க எதிரில்,

காஞ்சிபுரம்


3. ஹரிடம் என்.ஹெச் - 45

தென்பாக்கம் கிராமம்,

காஞ்சிபுரம் - 603301, Ph :044 27522336.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்
காமாட்சி அம்மன் 
240m

குமரகோட்டம் 
740m

கச்சபேஸ்வரர்
700m
வைகுண்டபெருமாள்
900m
பாண்டவதூதர்
1.5Km
பவழவண்ணர் 
850m