அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில்  

மயிலாப்பூர், சென்னை

kabaleshwarar_temple

சுவாமி : கபாலீஸ்வரர்.

அம்பாள் : கற்பகாம்பாள்.

தீர்த்தம் : கபாலீ தீர்த்தம்.

தலவிருட்சம் : புன்னை மரம்.

தலச்சிறப்பு : வாயிலார் நாயனார் அவதரித்த தலமாகும்.  சம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கியது  மற்றும் அம்பாள் மயில் வடிவம் கொண்டு வழிபட்டது ஆகியன இத்தலத்தில் நிகழ்ந்தன என்பது  தொன்நம்பிக்கை (ஐதீகம்).  முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற  தலம்.  பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம்.

தல வரலாறு : பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள், சிவனும் உபதேசித்தார்.  அவ்வேளையில் மயில் ஒன்று நடன மாடவே, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை கவனிக்காமல் வேடிக்கை பார்த்தாள்.   பாடத்தைக் கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பார்.  இப்போது குருவான சிவன்,  மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிற என்று மயிலாக  மாறும்படி செய்து விட்டார். அம்பிகை தன் குற்றத்திற்கு விமோசனம் கேட்டாள்.  பூலோகத்தில்  தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன்.  அதன்படி அம்பிகை  மயில் வடிவில் இத்தலம் வந்தாள்.  சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள் பார்வதிதேவி.   இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர்.  பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை  பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலாப்பூர் என்றும், திருமயிலை என்றும் வழங்கப்படுகிறது.

கி.பி. 1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது.  சில ஆண்டுகளுக்குள் அவர்கள்  ஆலயத்தைத் தகர்த்துக் கோட்டையும், தங்கள் தொழுகைக்கு இடமும் கட்டிக்கொண்டார்கள்.   கி.பி. 1672-க்கு பின்பு அப்போது உள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது.   இவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனையின் ஒரு  பகுதி இப்போது உள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, Vestiges of Old Madras என்ற நூலில் Vol.-I, Chap.24, பக்கம் 321, 322-ல் காணப்படுகிறது.

பாடியோர் : திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் :

பங்குனிப் பெருவிழா - பங்குனி 10 நாட்கள் அறுபத்துமூவர் திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள்

திருவிழாவின் போது கோயிலில் கூடுவர்,

பௌர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் இத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவர்,

தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள் மற்றும் பிற விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்,

தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.

அருகிலுள்ள நகரம் : சென்னை.

கோயில் முகவரி : அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்,

மயிலாப்பூர், சென்னை - 600 004.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
பார்த்தசாரதி 
3.2km

வடபழனி முருகன் 
8.2Km

சாய் பாபா
10Km
அஷ்டலக்ஷ்மி 
6.7Km
நங்கநல்லூர்ஆஞ்சநேயர் 
13.2Km
நங்கநல்லூர் முருகன் 
13.6Km