அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்
காஞ்சிபுரம்
சுவாமி : கைலாசநாதர்.
தலச்சிறப்பு : இத்திருக்கோவில் அமைதியான, அழகான பச்சைப் பசேல் புல்வெளிகளைக் கொண்டு ஊரின் இறுதியில் அமைந்துள்ளது. கிழக்குப் பார்த்தச் சந்நிதி. இத்திருக்கோவில் 1. வெளிப்பிரகாரம் 2. உள்பிரகாரம் 3. மூலவர் கட்டடப்பகுதி என அமையப் பெற்றுள்ளது. இத்திருக்கோயிலின் முதல் நுழைவு வாயில் கிழக்குப் பார்த்த வண்ணமும் மூலவர் அறைக்குச் செல்லும் வாயில் தெற்கு நோக்கியும், மூலவர் கைலாசநாதர், பெரிய 16 பட்டை லிங்கத்திருமேனி கொண்டு, வேண்டி வரும் பக்தகளுக்கு அருள் புரிந்து கொண்டுள்ளார்.
தல வரலாறு : தொண்டை நாட்டைச் சேர்நத திரநின்ற ஊரில் அந்தணர் குலத்தில் பூசலார் என்னும் பெரியவர் தோன்றினார். அவர் வளர்ந்து கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார். வேதங்களைப் படித்து வித்தகரானார். அறவழியில் பொருள் தேடி சிவனடியார்களுக்கு உதவினார். இப்படியாக வாழ்ந்து வரும் சமயத்தில் இவர், இறைவனுக்குத் திருக்கோயிலைக் கட்ட ஆசைப்பட்டார். ஆனால் தம்மிடம் அதற்கான பொருள் இல்லையே என்று மிகவும் வருத்தப்பட்டார்.
பொருளுக்காகப் பல இடங்களில் முயற்சி செய்தார். ஆனால் பொருள் கிட்டவில்லை. அதனால் மிகவும் மனம் வருந்தினார். இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து, புறப்பகுதியில் தானே, இறைவனுக்குத் திருக்கோயிலை கட்ட முடியவில்லை! அகத்திலேயே உள்ளத்திலேயே இறைவன் சிவபெருமானுக்குத் திருக்கோயிலைக் கட்டலாம் என்று முடிவு எடுத்தார். ஒரு நல்ல நாள் பார்த்து கல், சுண்ணாம்பு, சிற்பியர் எல்லாம் சேகரித்து, நாள்தோறும் ஒரு புறம் அமர்ந்து கண்களை மூடி மனதை ஒரு மனதாக்கி, மனதுக்குள்ளேயே திட்டம் தீட்டி திருக்கோயிலைக் கட்டிக்கொண்டிருந்தார். சுற்றுச்சுவர் மதில், கோபுரம், விமானம், மண்டபம், குளம், இறைவனுக்கான வாகனம், மூலவர், உற்சவர் எல்லாம் செய்து முடித்தார். இறுதியில் குடமுழுக்கிற்கும் நாள் குறிப்பிட்டார்.
இதே சமக்காலத்தில் காஞ்சிபுரத்தில் காடவர்கோன் என்னும் மன்னன் காஞ்சி பதியின் மேற்குப் பகுதி இறுதியில், இறைவன் சிவபெருமானுக்கு பெரும் பொருட்ச் செலவில் கற்கோயில் கட்டி முடித்து, குடமுழுக்கிற்கும் நாள் குறித்து முடித்தான். குடமுழுக்கிற்கான பணியிலும் ஈடுபட்டான். ஒரு நாள் இறைவன் காடவர்கோன் கனவில் தோன்றி, நீ குறித்த நன்நாளில் நின்றவூரில் பூசலார் என்ற நம் அடியவன் கோயில் எடுத்தக் குடமுழுக்கிற்கும் ஏற்பாடு செய்தான். அதே நாளில் நீயும் குடமுழுகிற்கு நாள் குறித்துள்ளாய். நாளை நாம் அங்கு புகுவோம் எனவே, நீ வேறு நாள் அமைப்பாய் என்று கூறினார். மன்னன் காடவர்கோன் கண்விழித்து கனவில் இறைவன் கூறியதை மீண்டும் ஒரு முறை நினைத்து, உடனே திருநின்ற ஊருக்கு பயணமானான். நின்ற ஊரை அடைந்து, அங்கு பூசலார் கட்டிய கோயில் எங்கு உள்ளது. குடமுழுக்கிற்கு உண்டான் அறிகுறியும் தென்படாமல் குழம்பி, அங்கிருந்த மக்கள் அணுகிக் கேட்டான். மக்கள் பூசலாரை காட்ட, மன்னன் பூசலாரிடம் சென்று தம் கனவில் இறைவன் கூறியதைச் சொல்ல, பூசலார் மெய்சிலிர்த்து இறைவனின் கருணையை எண்ணி வியந்தார். உடனே பூசலார், தாம் இறைவனுக்குத் தம் மனத்தில் மட்டுமே கோயில் கட்டியதாக் கூறினார். இதை அறிந்த மன்னன் இறைவனின் கருணையை நினைத்து வியந்து, அன்று முதலே அத்திருநகரில் இறைவனுக்கு ஒரு திருக்கோயிலைக் கட்டி குடமுழுக்கும் செய்தான்.
அத்திருக்கோயிலில் இறைவன் எழுந்து அருள்புரியும் கருவறையைச் சுற்றிலும் சொர்க்கவாசல் என்னும் பிராகாரம் ஒன்று உள்ளது. இவ்வாசலானது, நுழையும் இடமும் வெளிவரும் இடமும் குறுகிய வடிவில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இவ்வாசலின் வழியே சென்று வெளியே வந்தால் மறுபிறப்பு எடுத்ததற்கு சமம். மேலும் கருவறை கட்டத்தைச் சுற்றிலும் பல சிறிய கோயில்களைக் காணலாம். பல்லவர் காலத்திய கட்டடக் கலைதிறனுக்கு இக்கோயில் ஒர் உதாரணம் ஆகும். SAND STONE என்று சொல்லப்படும் மண் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள திருக்கோவில் ஆகும்.
நடைதிறப்பு : திருக்கோவில் காலை 8.30 மணி முதல் 12.00 வரை, மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள நகரம் : காஞ்சிபுரம்.
கோயில் முகவரி : அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்,
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் .
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. ஜி.ஆர்.டி ரெசிடென்சி காஞ்சிபுரம்,
487, காந்தி ரோடு,
காஞ்சிபுரம் - 631 502,
+(91)-44-27225250, +(91)-9940184251.
2. எம். எம் ஹோட்டல்,
No. 65 - 66, நெல்லுகார ஸ்ட்ரீட்,
காஞ்சிபுரம் - 631 502,
Ph : +(91)-44-27227250, +(91)-8098827250.
3. "ஹோட்டல் பாபு சூர்யா No. 85,
ஈஸ்ட் ராஜா ஸ்ட்ரீட் காஞ்சிபுரம்,
காமாட்சி அம்மன் கோவில் எதிரில்,
காஞ்சிபுரம் - 631 501,
Ph : +(91)-44-27222556, +(91)-9597121214.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. சரவண பவன் 66,
அன்னை இந்திரா காந்தி ஸ்ட்ரீட்,
காஞ்சிபுரம் - 631502,
Ph : 4427226877.
2. ஹோட்டல் சரவண பவன் 504,
காந்தி ரோடு,
இந்தியன் ஓவர்சிஸ் பாங்க எதிரில்,
காஞ்சிபுரம்
3. ஹரிடம் என்.ஹெச் - 45
தென்பாக்கம் கிராமம்,
காஞ்சிபுரம் - 603301, Ph :044 27522336.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)