அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோவில்
திருவண்புருசோத்தமம், திருநாங்கூர்
சுவாமி : புருஷோத்தமர்.
அம்பாள் : புருஷோத்தம நாயகி.
மூர்த்தி : ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர்.
தீர்த்தம் : திருபாற்கடல்.
தலவிருட்சம் : பலா, வாழைமரம்.
தலச்சிறப்பு : பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 30 வது தலம் ஆகும். இத்தலத்தில் மூலவர் புருஷோத்தமர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தாயார் புருஷோத்தம நாயகி அமர்ந்த திருக்கோலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். ஆண்டாள், நம்மாழ்வார், உடையவர், சேனை முதலியார் ஆகியோர் தனி சன்னதியில் காட்சியளிக்கின்றனர். இத்தலத்தில் மூன்று ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளது. அதில் ராமர் சன்னதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கைகட்டி வாய்பொத்திய நிலையில் அருள்பாலிக்கிறார். வைணவத் திருத்தலங்களில் புருஷோத்தமன் என்ற திருநாமத்தில் இறைவன் அருள்பாலிக்கும் ஒரே தலம் ஆகும். இத்தல இறைவனின் வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட வண் புருடோத்தமன் என அழைக்கப்படுகிறார். எனவே இத்தலம் வண்புருடோத்தமம் என அழைக்கப்படுகிறது.
தல வரலாறு : சைவ சமயத்தில் திருஞான சம்பந்தருக்கு பார்வதி ஞானப்பாலை ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டி விட்டாள் என்பது போல, வைணவ சமயத்தில் பெருமாள் பசியால் அழும் குழந்தைக்கு ஒரு பாற்கடலையே உருவாக்கி பால் அமுது தந்திருக்கிறார். அவர் தான் சீர்காழி வன் புருஷோத்தமர். இங்கு பெருமாளை ராமனாகக் கருதி வழிபடுகின்றனர். வியாக்ரபாதர் என்ற மகரிஷி, தன் குழந்தை உபமன்யுவை அழைத்துக்கொண்டு இந்த பெருமாள் கோயிலில் உள்ள நந்தவனத்தில் பூப்பறித்து இறைவனுக்கு சார்த்த வந்தார். குழந்தையை நந்தவனத்தின் வாசலில் அமர செய்து விட்டு பூப்பறிக்க செல்கிறார். குழந்தை தந்தையை காணாததாலும், பசியாலும் அழுதது. குழந்தையின் அழுகுரல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனுக்கு கேட்டது. உடனே இத்தலத்தில் ஒரு பாற்கடலையே உண்டு பண்ணி குழந்தைக்கு ஊட்டினார். அழும் குழந்தைக்கு தாயார் புருஷோத்தம நாயகி பால் அமுது படைத்தாள்.
வழிபட்டோர் : உபமன்பு, வியாக்ரபாதர்.
பாடியோர் : திருமங்கையாழ்வார்.
நடைதிறப்பு : காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை.
திருவிழாக்கள் :
பங்குனி மாதம் பிரம்மோற்சவம்,
ஆவணி மாதம் பவுர்ணமியில் பவித்ரா உற்சவம்,
தை அமாவாசைக்கு மறுநாள் கருட சேவை.
அருகிலுள்ள நகரம் : சீர்காழி.
கோவில் முகவரி : அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோவில்,
திருவண்புருசோத்தமம், திருநாங்கூர் - 609 106 (சீர்காழி-திருநாங்கூர்) நாகப்பட்டினம் மாவட்டம்.
தொலைபேசி எண் : +91- 4364-256221.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. சோழா இன்,
105, பிடாரி சவுத் ஸ்ட்ரீட்,
தென்பதி,
சிர்காழி - 609 111,
Ph : 094444 93388.
2. ஐயர்பாடி ஹோட்டல்,
ஓல்ட் என்.ஹெச்,
தென்பதி,
சீர்காழி - 609 110.
3. ஹோட்டல் ஆர்யபவன்,
ஓல்ட் என்.ஹெச்,
திருவள்ளுவர் நகர்,
தென்பதி,
சீர்காழி - 609 111.
4. மங்கள விலாஸ் ஹோட்டல்,
தென்பதி,
சீர்காழி.
5. கணேசன் ஹோட்டல்,
சீர்காழி.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. சம்பூர்ணா ரெஸ்டாரன்ட்,
ஓல்ட் என்.ஹெச்,
தென்பதி,
சீர்காழி - 609 110.
2. கார்டன் ரெஸ்டாரன்ட்,
தென்பதி,
சீர்காழி - 609 110.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)