அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோவில்
திருவேள்விக்குடி, குத்தாலம், நாகப்பட்டினம்
சுவாமி : கல்யாணசுந்தரேஸ்வரர் (மணவாளேஸ்வரர்), கௌதுகேஸ்வரர்.
அம்பாள் : பரிமள சுகந்த நாயகி, கெளதுகேஸ்வரி.
மூர்த்தி : அர்த்தநாரீசுவரர், சந்திரசேகரர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, நடராஜர், ஈசான மூர்த்தி.
தீர்த்தம் : அக்னி தீர்த்தம்(யாக குண்டம்), கௌதுகா பந்தன தீர்த்தம்.
தலச்சிறப்பு : தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் 23வது திருத்தலம் ஆகும். இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவபெருமானது திருமண வேள்வி நடந்தத் திருத்தலம் என்பதால் (திரு) வேள்விக்குடி என்று பெயர் பெற்றது. ஈஸ்வரிக்குக் கங்கனதாரனம் செய்தபடியால், கெளதுகா பந்தனச் ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. தற்கால வழக்குப்பெயர், திருவேள்விக்குடி என வழங்குகிறது. இத்தலம் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்துள்ளது. திருஞானசம்பந்தர், சுந்தரரால் பாடல் பெற்ற தலம். குத்தாலம் திருத்துருத்திப் புராணத்தில் இத்தலம் பற்றி 17 பாடல்கள் உள்ளன. இத்தலத்து இறைவன், பகலில் திருவேள்விக் குடியிலும், இரவில்(திருத்துருத்தி) குத்தாலத்திலும் எழுந்தருளி இருப்பதாகப் பதிகங்கள் கூறுகின்றன.
இத்திருக்கோவில் ஊரின் நடுவே, கிழக்கு நோக்கி இருக்கிறது. கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், எடுத்துக்கட்டி மண்டபம், நான்கு பாகுபாடுகளையும், இரண்டு பிரகாரங்களையும் உடையது. முதலில் நம்மை வரவேற்பது 3 அடுக்கு கோபுரம், அர்த்த மண்டப வாயில் நான்கு கைகளையுடைய துவார பாலகர்கள் உள்ளனர். முதல் பிரகாரத்தில், தென்முகக் கடவுள் கிழக்கு நோக்கி, வலஞ்சுழி விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், கோதண்டராமர், கஜ லட்சுமி, விஷ்ணுதுர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. முதல் பிரகாரத்தில் அம்மன் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அம்மன் கோவிலின் பின் புறத்தில், ஈசான்யத்தில், நவக்கிரகமாக ஈஸ்வரனே அமர்ந்துள்ளார்.
திருமணத் தலம் என்பதால், கொடி மரமும், நவக்கிரகமும் கிடையாது, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள், ஈசான்யத்தில் உள்ள ஈஸ்வரனுக்கு 48 அகல் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால், நலம் கிடைக்கும். பவுர்ணமி தினத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை திருமண தடை நீங்க யாகம் நடக்கிறது. இந்த யாகத்தில் திருமணத் தடை உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபடலாம். திருமணம் முடிந்தவுடன் தம்பதிகள் இத்தலத்திற்கு வந்து சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து நன்றி சொல்லிவிட்டால் போதும். திருமண தடை நீக்கும் திருத்தலம் திருவேள்விக்குடி ஆகும்.
தல வரலாறு : பசு வடிவில் இருந்த அன்னை பார்வதி, சாபவிமோசனம் பெற்று, பரத முனிவரின் மகளாகப் பிறந்து, சிவபெருமானை மணம்புரிந்தார். பார்வதி தேவி, பரமேஸ்வரனை நினைத்து 16 திங்கட்கிழமை விரதம் இருந்து, மணலில் லிங்கம் வரித்து பூஜை செய்து வந்தார். 17ம் நாள் திங்கட்கிழமை ஈசன் தோன்றி, அம்மனுக்கு கங்கணம் கட்டி, வேள்விகள் செய்து, பிரம்மா நடத்தி வைக்க மணம் புரிந்து கொண்டார். எனவே தான் இத்தலம் "திருவேள்விக்குடி" என அழைக்கப்பட்டது.
அரச குமாரன் ஒருவனுக்கு நிச்சயித்திருந்த பெண்ணின் தாய் தந்தையர் திருமணத்திற்கு முன் இறந்து விட்டனர். இதன் பின் பெண் வீட்டார் இத்திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்பதால் அரசகுமாரன் இத்தலம் வந்து இறைவனை வணங்கி, தடைப்பட்டு நின்ற திருமணத்தை நடத்தி வைக்க வேண்டினான். அரசகுமாரனின் வேண்டுதலை ஏற்ற சிவன் ஒரு பூதத்தை அனுப்பி அந்த பெண்ணை அழைத்து வந்து, திருமணம் செய்து வைத்தார்.
சிவனின் தோழரான சுந்தரர் இங்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு, தனது நோய் நீங்கி குணமடைந்தார். சிவ பெருமான் தன்னில் ஒரு பகுதி பாகத்தை உமையவளுக்கு அளித்து அர்த்தநாரீஸ்வரர் வழிபாட்டு முறையை முதன் முதலாக தொடங்கியதே திருவேள்விகுடியில் தான் என்றும் கருதப்படுகிறது.
வழிபட்டோர் : பார்வதி, சுந்தரர்.
பாடியோர் : திருஞானசம்பந்தர், சுந்தரர்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
பூஜை விவரம் : நான்கு கால பூஜை.
திருவிழாக்கள் :
மகாசிவராத்திரி,
பங்குனி உத்திரம்.
அருகிலுள்ள நகரம் : குத்தாலம்.
கோவில் முகவரி : அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
திருவேள்விக்குடி - 609 801, குத்தாலம் போஸ்ட், நாகப்பட்டினம் மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. சிவமுருகன் ஹோட்டல்,
60 பீட் மெயின் ரோடு,
நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,
கும்பகோணம் - 612 001,
Ph : 096000 00384.
2.சாரா ரீஜன்ஸி,
45/1 சென்னை ரோடு,
கும்பகோணம் - 612002,
Ph : 082200 05555.
3.குவாலிட்டி இன்,
வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,
கும்பகோணம்,
தஞ்சாவூர் - 612 001,
Ph : 0435 255 5555,
4.ஹோட்டல் கிரீன் பார்க்,
எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,
கும்பகோணம் - 612 001,
Ph : (0435) - 2402853 / 2403914.
5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,
காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,
Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. வெங்கட்ரமணா உணவகம்,
No 40, TSR பெரிய வீதி,
கும்பகோணம் - 612001,
அருகில் காந்தி பார்க்,
Ph : +(91)-9442130736.
2. ஸ்ரீ பாலாஜி பவன்,
1, சாஸ்திர காலேஜ் ரோடு,
கும்பகோணம் - 612001
Ph : +(91)-435-2424578.
3. ஹோட்டல் சண்முக பவன்,
16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,
கும்பகோணம் - 612001.
Ph : +(91)-435-2433962.
4. கௌரி ஷங்கர் ஹோட்டல்
No 47, ஜான் செல்வராஜ் நகர்,
கும்பகோணம், 612001
Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.
5. ரயாஸ் கார்டன் உணவகம்,
No 18 ரயாஸ் ஹோட்டல்,
தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,
கும்பகோணம் , 612 001.
Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. வெங்கட்ரமணா உணவகம்,
No 40, TSR பெரிய வீதி,
கும்பகோணம் - 612001,
அருகில் காந்தி பார்க்,
Ph : +(91)-9442130736.
2. ஸ்ரீ பாலாஜி பவன்,
1, சாஸ்திர காலேஜ் ரோடு,
கும்பகோணம் - 612001
Ph : +(91)-435-2424578.
3. ஹோட்டல் சண்முக பவன்,
16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,
கும்பகோணம் - 612001.
Ph : +(91)-435-2433962.
4. கௌரி ஷங்கர் ஹோட்டல்
No 47, ஜான் செல்வராஜ் நகர்,
கும்பகோணம், 612001
Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.
5. ரயாஸ் கார்டன் உணவகம்,
No 18 ரயாஸ் ஹோட்டல்,
தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,
கும்பகோணம் , 612 001.
Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)