அருள்மிகு காசி விஸ்வநாதசுவாமி திருக்கோவில் 

தென்காசி

Tenkasi-kasi-visvanathar_temple

 

சுவாமி : அருள்மிகு காசிவிஸ்வநாதர்.

அம்பாள் : அருள்மிகு உலகம்மன்.

தீர்த்தம் : சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான  தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.

தலவிருட்சம் : செண்பக மரம்.

தலச்சிறப்பு : இந்திரன், மைநாகம், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி, கண்ம முனிவர் போன்றோர் வழிபட்ட தலம்.  நந்தியின் அவதார தலம் எனவும் போற்றப்படுகிறது.  சிலாகித முனிவர் குழந்தை வரம் வேண்டிய பயன் பெற்றதாக தலவரலாறு குறிப்பிடுகிறது.  திருக்கோயிலிலைக் கட்டிய பராக்கிரம பாண்டிய மன்னனின் உற்சவர் சிலை சுவாமி சந்நிதியில் உள்ளது.  திருக்கோயில் விழாக்களுக்கு தலைவராக அம்மன்னன் மதிக்கப்பட்டு மன்னனுக்கு முதல் மரியாதை செய்யப்படுவது இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

தல வரலாறு : தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் காசிக்குச் சென்று காசி விசுவநாதரை வழிபட எண்ணம் கொண்டார்.  மன்னனின் குலதெய்வமான முருகப்பெருமான் மன்னனுக்கு சக்தி வாய்ந்த அபூர்வ குளிகை ஒன்றை கொடுத்து வான் மார்க்கமாக காசி சென்று வழிபடச் செய்தார். இவ்வாறு காசிக்குச் சென்று தினமும் காசி விசுவநாதரை வழிபட இயலாததை எண்ணி, மன்னன் மனம் வருந்தினான்.  இறைவன் மன்னனது கனவில் தோன்றி நான் இங்கிருந்து அரைக்காத தூரத்தில்தான் இருக்கிறேன்.  நான் இருக்குமிடத்தில் நீ காண உனக்கு எறும்புகள் சாரைசாரையாக ஊர்ந்து சென்று வழிகாட்டும் என்று கூறி மறைந்தார்.  மறுநாள் எறும்பு சாரைசாரையாக செல்லுமிடத்தை மன்னன் அடையாளம் கண்டு அங்கு சிவலிங்கமும் நந்தியும் இருப்பதைக் கண்டு வணங்கினான்.  அந்த இடத்தில் கோயில் கட்டி, கோபுரமும் கட்டி, தென்காசி  நகரையும் நிர்மாணித்து தென்காசி கண்ட பாண்டியன் ஆனான். 1445-ல் பராக்கிரம பாண்டியனால் ராஜகோபுர திருப்பணி துவங்கப்பட்டு 6 ஆண்டுகளுக்குப் பின் பட்டத்துக்கு வந்த பராக்கிரம பாண்டியனின் தம்பி சடையவர்மன் குலசேகர பாண்டியனால் 1505-ல் ராஜகோபுரத் திருப்பணி முடிவடைந்தது என்று கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் :

மாசிமகப் பெருந்திருவிழா 10 நாள் சிறப்பாக கொண்டாடப்படும்,

புரட்டாசி நவராத்திரி கொலு திருவிழாவும்,

ஐப்பசி திருக்கல்யாணமும்,

ஆவணி மூல தெப்பத்திருவிழாவும்,

தை அமாவாசை பத்திர தீப திருவிழாவும் முக்கியமானதாகும்.

அருகிலுள்ள நகரம் : தென்காசி.

கோயில் முகவரி : அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்,

தென்காசி - 627 811, திருநெல்வேலி மாவட்டம்.

தொலைபேசி எண் : 04633 - 222 373

அருகில் உள்ள தங்கும் இடம்:

1.சாரல் ரிசோர்ட்ஸ்

42/42 எ, செங்கோட்டை ரோடு, குற்றாலம்,

திருநெல்வேலி டிஸ்டிக், தென்காசி - 627 802,

Ph:  04633 283 601.

2.கிங்ஸ் பாலஸ்  

100, ரயில்வே ரோடு,

திருநெல்வேலி டிஸ்டிக்,தென்காசி - 627 811,

Ph : 04633 280 636

3.ஹோட்டல் கௌரி சங்கர் ரெஸ்டாரன்ட்,

25 ஈஸ்ட் ஆவணி மூலா ஸ்ட்ரீட், தென்காசி - 627 811,

Ph : +91 994 387 5785.

4.எ.எல் மாஷி ரெஸ்டாரன்ட்,

கூலைக்கடை பஜார், தென்காசி - 627 811,

Ph : 944 4448699.

  1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (453 Votes)  

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
குற்றாலநாதர் 
5.6km

இலஞ்சி முருகன் 
4.5Km

நெல்லையப்பர் 
52.1Km
சங்கரன் கோவில் 
46.8Km
வைகுண்ட நாதர் 
81.2Km
விஜயசன பெருமாள் 
83Km