அருள்மிகு கமலவல்லி தாயர் சமேத ஹரசாப விமோசனப் பெருமாள் திருக்கோவில்

      திருக்கண்டியூர்தஞ்சாவூர் மாவட்டம்

                                       

சுவாமி : ஹரசாப விமோசன பெருமாள், பலிநாதன், கமலநாதன், ப்ருகுநாதன்.

அம்பாள் : ஸ்ரீ கமலவல்லி தாயர்.

தீர்த்தம் :  கமல புஷ்கரணி(பத்ம தீர்த்தம்), கபால புஷ்கரணி(கதா தீர்த்தம்).

விமானம் : கமலாக்ருதி.

தலச்சிறப்பு : இத்தலத்தைப் பற்றி பிரமாண்ட புராணத்தில் எட்டு அத்தியாயங்களிலும், திருமங்கையாழ்வார் பாசுரத்திலும்,  திருமுறைகளிலும் பிள்ளை பெருமாள் அய்யங்கார் அந்தாயிலும் பிள்ளை பெருமாள் அய்யங்கார் அந்தாயிலும் காணக்  கிடைக்கிறது.  சிவனின் (ஹரன்) சாபம் தீர்த்ததால், இங்குள்ள பெருமாள் "ஹரசாப விமோசனப் பெருமாள்" என்று  அழைக்கப்படுகிறார்.  பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. 

தல வரலாறு : இக்கோயிலை மகாபலி சக்கரவர்த்தி கட்டினார் என புராணங்கள் கூறுகிறது.  இதே ஊரில் சிவபெருமானும்  குடிகொண்டாதால் "கண்டீஸ்வரர்” எனப் பெயர் பெற்றது.  இத்தலம் ஒரு மும்மூர்த்தி தலமாகும்.  பிரம்மனுக்கு கோயில்  கிடையாது என்பதால், கண்டீஸ்வரர் கோயிலில் சரஸ்வதி சமேதராக பிரம்மன் அருள்பாலிக்கிறார்.   பிரம்மா, விஷ்ணு, சிவன்  ஆகிய மும்மூர்த்திக்கும் தனித்தனியே ஆலயம் அமைந்த ஒரே ஊர் திருக்கண்டியூராகும்.  எனவே இத்திருத்தலம் திரிமூர்த்தி  தலம் என்று அழைக்கப்படுகிறது.  திருத்தலத்திற்க்கு கமலாரண்யம், கண்டனஷேத்திரம், திரிமூர்த்தி ஷேத்திரம் என்ற பெயர்கள்  உள்ளது.  தாமரை தடாகங்கள் நிறைந்து காணப்பட்டதால் கமலாரண்யம் என்றும் மும்மூர்த்திகளுக்கும் ஆலயம் அமைந்து  உள்ளதால் திருமூர்த்தி ஷேத்திரம் என்றும், தலத்தை நினைத்தவுடனேயே செய்த பாபங்கள் அனைத்தும் கழிவதால் கண்டன ஷேத்திரம் என்றும் பெயர் ஏற்பட்டது.

திருவிழாக்கள் : 

பங்குனியில் பிரமோற்சவம்,

ஐப்பசியில் பவித்திர உற்சவம்,

வைகுண்ட ஏகாதசி,

கார்த்திகை தீபம்.

அருகிலுள்ள நகரம் : தஞ்சாவூர்.

கோயில் முகவரி : அருள்மிகு கமலவல்லி தாயர் சமேத ஹரசாப விமோசனப் பெருமாள்  திருக்கோவில்,

திருக்கண்டியூர், திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்
பிரம்மசிர கண்டேஷ்வரர்
170m

திருவையாறு சிவன் 
3.0km

சந்திரன் திங்களூர்
6.5km
கோவிந்தராஜ பெருமாள்
9.2Km
கைலாசநாதர் 
12.6Km
வடபத்ர காளி அம்மன்
9.4km