அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணர் திருக்கோவில்
தான்தோன்றிமலை, கரூர் மாவட்டம்
சுவாமி : கல்யாண வெங்கட்ரமணர்.
அம்பாள் : ஸ்ரீ தேவி பூமிதேவி.
தலச்சிறப்பு : இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தலவரலாறு : சுசர்மா என்னும் பக்தன் தனது மனைவியுடன் புத்திர பாக்கியம் வேண்டி திருப்பதி யாத்திரை மேற்கொண்டான். யாத்திரையின் போது காவிரிக்கரையில் தங்கி இருந்தான். அப்போது நாரதர் கனவில் தோன்றி திருமக்கூடலூர் என்ற கூடுதுறைக்கு செல்லுங்கள். அங்கு உங்களைச் சிலர் வரவேற்பர் என்று சொன்னதைத் தொடர்ந்து அங்கு சென்றனர். அங்கு தச்சர்கள் இருந்தனர்.
அவர்கள் சுசர்மாவை வரவேற்று கல்வேலை நடக்கும் இம்மலைக்கு அழைத்துச் சென்ற போது மலையில் பிரகாசமான ஒளி ஒன்று கிளம்பியது.இதனையடுத்து பாறை பிளவுண்டு பெருமாள் காட்சி தந்தார். கேட்ட வரத்தையும் அருளையும் தந்தார். இவ்வாறு பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார். தவிர ஆதிசேசனுக்கும், வாயு பகவானுக்கும் நடந்த போட்டியில் சிதறிய திருவேங்கடமலையின் ஒரு பகுதிதான் தான்தோன்றிமலை என்றும் கூறப்படுகிறது.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
பூஜைவிவரம் : நான்கு காலபூஜை.
திருவிழாக்கள் : சித்திரை, புரட்டாசி, மாசி பெருந்திருவிழா நடைபெறுகிறது.
அருகிலுள்ள நகரம் : கரூர்.
கோயில் முகவரி : அருள்மிகு கல்யாணவெங்கட்ரமணர் திருக்கோயில்,
தான்தோன்றிமலை - 639 005, கரூர் மாவட்டம்.
தொலைபேசி எண் : 04324 - 257531.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. ஹோட்டல் சோழா இன் No.1,
கௌரிபுரம்,
கோவை ரோடு (அஜந்தா தியேட்டர் எதிரில்),
கரூர்.
2 .ஆர்த்தி ஹோட்டல் 37,
வெஸ்ட் பிரதக்க்ஷணம் ரோடு,
தின்னப்பா தியேட்டர் அருகில்,
கரூர் - 639001,
Ph : +(91)-4324-236122, +(91)-7373030133.
3. கே. எஸ் மெஸ் வெஜ் ஹோட்டல்,
88 கோவை ரோடு,
என்.ஆர்.எம்.பி பிலாசா,
கரூர் - 639002,
Ph : 240497.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. அடையார் ஆனந்த் பவன்,
NH - 67,
கரூர்.
2. கே. எஸ் மெஸ் வெஜ் ஹோட்டல்,
88 கோவை ரோடு,
என்.ஆர்.எம்.பி பிலாசா,
கரூர் - 639002,
Ph : 240497.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)