அருள்மிகு சண்முகநாதர் திருக்கோவில்
விராலிமலை, புதுக்கோட்டை மாவட்டம்
சுவாமி : சண்முக நாதன் (ஆறுமுகம் )
அம்பாள் : வள்ளிதேவசேன
தீர்த்தம் : நாகதீர்த்தம்
தலவிருட்சம் : விராலிச் செடி
தலச்சிறப்பு : இங்கு வள்ளி திருமணம் நடந்த தலம் என்று கூறப்படுகிறது. மூலவர் முருகப்பெருமான் 10 அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும்.
தல வரலாறு : விஜயநகரப் பேரரசரின் வழிவந்த இரண்டாம் தேவராயரின் (கி.பி.1422 -1446) காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவனது அரசியல் தலைவன் அழகிய மணவாளத்தேவன் அருகில் உள்ள கத்தலூர், பேரம்பூர் ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு ஆண்டுள்ளான். இவனது கட்டுப்பாட்டில் விராலிமலை இருந்துள்ளது.இப்போது கோயில் இருக்கும் இடத்தில் ஒரு காலத்தில் குரா மரம் இருந்தது. வேடன் ஒருவன் வேங்கையை விரட்டி வந்தான்.அவ்வாறு வரும்போது குரா மரம் இருக்கும் இடத்தில் வேங்கை காணாமற் போய் விடுகிறது. குரா மரம் இருக்கும் இடத்திலேயே இறைவன் இருப்பதாக எண்ணி வழிபாடு நடந்திருக்கிறது. வயலூரிலிருந்த அருணகிரிநாதரை, "விராலி மலைக்கு வா' என்று முருகப்பெருமான் அழைக்க அவ்வாறே வந்த அருணகிரிநாதர் குறிப்பிட்ட இடம் தெரியாமல் தவிக்க வேடன் ரூபத்தில் வந்த முருகன் விராலிமலைக்கு வழிசொல்லி அழைத்து சென்று மலையை அடைந்தவுடன் மறைந்து விடுகிறார்.அஷ்டமாசித்தியை அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் வழங்கியதால் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இன்றளவும் கருதப் படுகிறது.திருப்புகழில் 18 தடவை இத்திருத்தலத்தைக் குறித்தே அருணகிரிநாதர் பாடியுள்ளார் என்பதிலிருந்தே இத்தலம் வெகு சிறப்பு வாய்ந்தது என்று புரிந்து கொள்ளலாம்.
நடைதிறப்பு : காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழாக்கள் : வைகாசி விசாகம் - 10 நாட்கள். தைப் பூசம் - 10 நாள். கந்த சஷ்டித் திருவிழா (சூரசம்காரம்) - ஐப்பசி- 6 நாட்கள். அருணகிரிநாதர் இசை விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடக்கிறது. தவிர முருகனுக்கு உகந்த நாட்கள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டம் விசேசமாக இருக்கும். பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் இத்தலம் பக்தர்களின் வருகையால் நிரம்பி வழியும்
அருகிலுள்ள நகரம் : திருச்சி
கோயில் முகவரி : அருள்மிகு சண்முக நாதர் திருக்கோவில், விராலிமலை - 621 316 புதுக்கோட்டை மாவட்டம்.
தொலைபேசிஎண் : +91 4322 221084
அருகில் உள்ள தங்கும் இடம் :
1.ஹோட்டல் சங்கம்,
கலெக்டர் ஆபிஸ் ரோடு, ராஜா காலனி,
திருச்சிராப்பள்ளி, திருச்சி - 620 001.
Ph : + 91-452-4244526.
2.ஹோட்டல் மாயாஸ்,
சத்திரம் பஸ் ஸ்டாண்ட்,திருச்சி - 2.
Ph: 2705717
3.பெமினா ஹோட்டல்
109, வில்லியம்ஸ் ரோடு, திருச்சிராப்பள்ளி, திருச்சி - 620 001,
மத்திய பேருந்து நிலையம், ரெயில்வே ஜங்ஷன்
Ph: 0431 - 2414501.
4.எஸ்.ஆர்.எம் ஹோட்டல்,
ரேஸ் கோர்ஸ் ரோடு,
காஜாமலை.
5.கிராண்ட் கார்டினியா,
22 - 25 மன்னார்புரம் ஜங்ஷன், திருச்சி - 620 020,
Mobile : +91 95856 44000.
Tel : +91 431 4045000.
அருகில் உள்ள உணவகங்கள் :
1.ஸ்ரீ சங்கீதாஸ்,
No. 2, வீ.ஓ.சீ ரோடு, மத்திய பேருந்து நிலையம் எதிரில்,
திருச்சிராப்பள்ளி, திருச்சி - 620 002.
2.ஏழாம் சுவை,
கலெக்டர் ஆபீஸ் ரோடு, கண்டோன்மென்ட்,
திருச்சிராப்பள்ளி, திருச்சி - 620 001.
3.விஜய் புட் கோர்ட்,
9, ரெனால்ட்ஸ் ரோடு,
ரிலையன்ஸ் மார்ட் மடியில், கண்டோன்மென்ட்,
திருச்சிராப்பள்ளி, திருச்சி - 620 001.
4.டிமோரா,
No B 29 & 30, 4th ப்ளோர், அம்பிகை சிட்டி,
சாஸ்த்ரி ரோடு, தென்னூர்,
திருச்சிராப்பள்ளி, திருச்சி - 620 018.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)