அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

மதுரை 

madurai_meenachi_amman_temple

 

சுவாமி : மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர்

அம்பாள் : மீனாட்சி, அங்கயற்கண்ணி

தீர்த்தம் : பொற்றாமரைக்குளம், வைகை, தெப்பக்குளம்,

தலவிருட்சம் : கடம்ப மரம்

தலச்சிறப்பு : தமிழ் சங்கங்கள் பிறந்த இடம் மதுரை ஆகும். தமிழ்வளர்த்த தென்பாண்டி நாட்டின் தலைநகர், அங்கயர் கன்னியுடன் கோயில் கொண்ட எழில்நகர், "மதுரை"யின் மையப்பகுதியில் மீனாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக ஆயிரங்கால்மண்டபம், கிளிக்கூண்டுமண்டபம், ஊஞ்சல்மண்டபம், புதுமண்டபம், உயர்ந்தகோபுரங்கள் திகழ்கின்றன. இக்கோவிலுக்கு ஐந்து நுழைவாயில்கள் உள்ளது. இது 847 அடி, 792 அடி நீள அகலங்களோடு மிக பிரமாண்டமான கோவிலாக காட்சி அளிக்கிறது. நான்கு ராஜகோபுரங்களோடு மொத்தம் பதினான்கு கோபுரங்கள் உள்ளது. வெளிநாட்டவரும் அதிகஅளவில் இத்திருக்கோவில் வந்து வியந்து வணங்கி வருகின்றனர்.
கிழக்கு வாசலின் அருகே உள்ள அம்மன் சந்நிதியில் உள்ள மண்டபம் திருமலை நாயக்கரின் மனைவிகளால் கட்டப்பட்டது. திருமலை நாயக்கர் மதுரையை 17th நுற்றாண்டில் ஆட்சி புரிந்து இருக்கின்றார். பார்வதி தேவியின் எட்டு அவதாரங்களான கருமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, யக்னரூபிணி, ஷ்யாமளா, மகேஸ்வரி, மற்றும் மனோன்மணி ஆகிய உருவங்கள் சிலைகளாக வடிவைக்க்மப்பட்டுள்ளது.

மீனாட்சியின் வரலாறு : ஓவியமாக மண்டபத்தில் மேற்கூரையில் வரையப்பட்டுள்ளது. மேலும் சில ஓவியங்கள் திருவிளையாடல் நிகழ்வுகள் அனைத்தையும் குறிப்பதாக உள்ளது. இது நாயக்கர் காலத்து ஓவியம் ஆகும். பொற்றாமரை குளத்தில் வடக்கே உள்ள சுவரில் 64 வகையான சிவனின் திருவிளையாடல்கள் வரையப்பட்டுள்ளது.

தல வரலாறு : முன்னொரு காலத்தில் சுயம்பு ஆக இருந்த ஒரு லிங்கத்தை தேவர்களின் தலைவன் இந்திரன் கதம்பவனத்தில் கண்டான். பின் அந்த சிலையை இந்திரன் மதுரையில் பிரதிஷ்டை செய்தான். அதனாலேயே இங்கு சிவன் இந்திரனின் வாகனத்தில் உள்ளார். வரலாற்று சான்றுகளின் படி இக்கோவில் பல நுறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருப்பினும் கிபி ௧௩௧௦ ஆண்டு மாலிக்காபூர் என்ற இஸ்லாமிய மன்னனால் தரை மட்டமாக்கப்பட்டது. பின் 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இக்கோவில் புதியதாக கட்டப்பட்டது. திருஞானசம்பந்தர் அவர்களால் 7ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டுள்ளது.

நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் பகல் 12.30 மணி வரை. மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை.

பூஜைவிவரம் : ஆறுகால பூஜை.

திருவிழாக்கள் : சித்திரை-புதுப்பஞ்சாங்கம் வாசித்தல், சித்திரை பெருவிழா, கற்பக விருட்ச சிம்ம வாகனத்தில் பவனி, பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கில் பட்டினபிரவேசம், ரத உற்சவம். வைகாசி-வசந்தஉற்சவம். ஆடி-முளைக்கொட்டு உற்சவம்-தீர்த்தவாரி. ஆவணி-ஆவணிமூலத்திருநாள்-புட்டுக்குமண்சுமந்தருளியலீலை-விருசாபாரூடுதரிசனம். புரட்டாசி-நவராத்திரி. ஐப்பசி-பவித்திர உற்சவம். கார்த்திகை-கோலாட்டஉற்சவம், கார்த்திகை 2 வதுசோமவாரம்.மார்கழி-திருப்பள்ளியெழுச்சி எண்ணைகாப்பு உற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம். தை-தைபொங்கல் கல்யானைக்கு கரும்புகொடுத்தருளல், செல்லத்தம்மன் உற்சவம், தெப்பஉற்சவது வஜாரோஹனம் கற்பகவிருட்ச, சிம்மவாகனத்தில் பவனி. மாசி-மாசிமண்டல உற்சவம். பங்குனி-கோடை வசந்த உற்சவம்.

அருகிலுள்ள நகரம் : மதுரை

கோயில்முகவரி : அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை-625 001.

தொலைபேசி எண் : 0452-2344360

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. போர்டுன் பாண்டியன் ஹோட்டல் ரேஸ் கோர்ஸ்,

மதுரை - 625 002,

Ph : 91-452-4356789.

2. தி எஸ்.பி.கே ஹோட்டல் லக்சுரி லக் வியூவ் ரோடு,

மானகிரி,

கே.கே நகர்,

மதுரை - 625 020,

Ph : 0452 255 5777.

 

3. ஹெரிடேஜ் மதுரை,

11, மேலக்கல் மெயின் ரோடு,

கோச்சடை,

மதுரை - 625 016,

Ph : + (91) 452 2385455 , +(91) 452 3244185.

 

4. சங்கம் ஹோட்டல்,

மதுரை அழகர்கோயில் ரோடு,

மதுரை - 625 002,

Ph : 91-452-4244555 / 2537531.

 

5. ஸ்டார் ரெசிடென்சி எண் 43 & 44,

கலெக்டர் ஆபீஸ் ரோடு,

நியர் அண்ணா பஸ் ஸ்டாண்ட்,

அரவிந்த் ஐய் ஹாஸ்பிட்டல்,

மதுரை - 625 020,

Ph : +91 - 452-4343999, +91 - 452-4343970.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. ஹோட்டல் சுப்ரீம்,

எண். 110, வெஸ்ட் பெருமாள் மிஸ்ட்ரி ஸ்ட்ரீட்,

மதுரை - 625 001,

Ph : 0452 234 3151.

 

2. சூர்யா ரூப் டாப் வெஜ் ரெஸ்டாரன்ட்,

110, வெஸ்ட் பெருமாள் மைஸ்ட்ரி ஸ்ட்ரீட்,

மதுரை - 625 001,

Ph : +91 452 2343151, 3012222.

 

3. அடையார் அனந்த பவன்,

285, காமராஜர் ரோடு,

மஹால் ஏரியா,

மதுரை மெயின்,

மதுரை - 625 009,

Ph : 044 2345 3045.

 

4. ஸ்ரீ மோகன் போஜநளாய்,

எண் 33, தனப்பா முதலி ஸ்ட்ரீட்,

மதுரை ஹெச்.ஓ,

மதுரை - 625 001,

டெம்ப்ல் வியூ எதிரில்,

Ph : +(91)-9943323221, 9442751870, +(91)-452-2346093.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்
இன்மையிலும் நன்மை தருவார்
750m

கூடல் அழகர் 
1Km

திருபரங்குன்றம் 
7.8Km
அழகர் கோவில் 
21.3Km
பழமுதிர்சோலை
24.3Km
சௌம்யநாராயண பெருமாள் 
71.2Km