அருள்மிகு கூடலழகர் திருக்கோவில்

மதுரை

Arulmigu-Kodal-alagar_temple

சுவாமி : கூடலழகர்.

அம்பாள் : மதுரவல்லி, மரகதவல்லி.

தீர்த்தம் : ஹேமபுஷ்கரிணி.

தலவிருட்சம் : கதலி.

விமானம் : அஷ்டாங்க விமானம்.

தலச்சிறப்பு : கிருதாயுகம், கிரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகிய 4 யுகங்களிலும் இத்தலம்  சிறந்து விளங்குகிறது.  எம்பெருமான் இத்தலத்தில் அஷ்டாங்க விமானத்தில் அமர்ந்த  திருக்கோலத்தில் முதல் தளத்திலும், நின்ற திருக்கோலத்தில் இரண்டாம் தளத்திலும், சயன  திருக்கோலத்தில் மூன்றாம் தளத்திலும் காட்சி தருவது எழில்மிகு தோற்றமாகும்.  அருள்மிகு  கூடழகர் பக்தர்களை "வா" என்று அழைத்து "அபயம்" அளித்து "ஆஹீயாவரதன்",  "அபயதிருக்கரத்தன்" என்ற திருநாமத்தை கொண்டவராய் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.  திருமால்  வீற்றிருக்கும் விமானத்தில் தலையானதும் சிறந்ததுமான அஷ்டான விமானம் - திருவெட்டெழுத்து மந்திரமான "ஓம்நமோநாராயணாய" என்பதன் வடிவமாகும்.  பெருமானின்  மூன்று நிலைகளையும் கொண்ட இவ்விமானத்தை ஒருமண்டலம் (48 நாட்கள்) வலம் வந்தால் நினைத்தகாரியங்கள் கைகூடும் என்பது சிறப்பு.

தல வரலாறு : இங்கு சிவன் நடன கோலத்தில் நடராஜராக உள்ளார்.  நடராஜரின் ஆனந்த  தாண்டவத்தை பறை சாற்றும் இக்கோவில் சைவ சமய வழிப்படுக்கான கோவில் ஆகும்.  ஆனந்த  தாண்டவம் பிறத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து நிலைகளை  குறிக்கிறது.  உலகில் உள்ள எல்லா ஜீவ ராசிகளிலும் ஆனந்த தாண்டவம் நடைபெறும் என்பது  ஐதீகம்.

நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு  9.00 மணி வரை (சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.00 வரை சேவை உண்டு).

பூஜைவிவரம் : ஆறுகாலபூஜை.

திருவிழாக்கள் :

சித்திரை - திருவாதிரை நட்சத்திரத்தில் உடையவர்,

திருநட்சத்திர திருவிழா - 10 நாட்கள்,

ஆடி - "திருவாடிப்பூரநட்சத்திரதிருவிழா" - 10 நாட்கள்,

7-ம்நாள் திருநாளில் "சயனஉற்சவம்",

ஆவணி - திருபவித்திர திருவிழா மற்றும் உறியடி,

தை -கனுப்பாரிவேட்டை - தாயார்பெருமாள்மாலைமாற்றுதல்,

மாசி - தெப்பத்திருவிழா - 12 நாட்கள்.

அருகிலுள்ள நகரம் : மதுரை.

கோவில் முகவரி :  அருள்மிகு கூடலழகர் திருக்கோவில்,

மதுரை - 625 001.

தொலைப்பேசி எண்: 0452 – 2338542.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. போர்டுன் பாண்டியன் ஹோட்டல் ரேஸ் கோர்ஸ்,

மதுரை - 625 002,

Ph : 91-452-4356789.

 

2. தி எஸ்.பி.கே ஹோட்டல் லக்சுரி லக் வியூவ் ரோடு,

மானகிரி,

கே.கே நகர்,

மதுரை - 625 020,

Ph : 0452 255 5777.

 

3. ஹெரிடேஜ் மதுரை,

11, மேலக்கல் மெயின் ரோடு,

கோச்சடை,

மதுரை - 625 016,

Ph : + (91) 452 2385455 , +(91) 452 3244185.

 

4. சங்கம் ஹோட்டல்,

மதுரை அழகர்கோயில் ரோடு,

மதுரை - 625 002,

Ph : 91-452-4244555 / 2537531.

 

5. ஸ்டார் ரெசிடென்சி எண் 43 & 44,

கலெக்டர் ஆபீஸ் ரோடு,

நியர் அண்ணா பஸ் ஸ்டாண்ட்,

அரவிந்த் ஐய் ஹாஸ்பிட்டல்,

மதுரை - 625 020,

Ph : +91 - 452-4343999, +91 - 452-4343970.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. ஹோட்டல் சுப்ரீம்,

எண். 110, வெஸ்ட் பெருமாள் மிஸ்ட்ரி ஸ்ட்ரீட்,

மதுரை - 625 001,

Ph : 0452 234 3151.

 

2. சூர்யா ரூப் டாப் வெஜ் ரெஸ்டாரன்ட்,

110, வெஸ்ட் பெருமாள் மைஸ்ட்ரி ஸ்ட்ரீட்,

மதுரை - 625 001,

Ph : +91 452 2343151, 3012222.

 

3. அடையார் அனந்த பவன்,

285, காமராஜர் ரோடு,

மஹால் ஏரியா,

மதுரை மெயின்,

மதுரை - 625 009,

Ph : 044 2345 3045.

 

4. ஸ்ரீ மோகன் போஜநளாய்,

எண் 33, தனப்பா முதலி ஸ்ட்ரீட்,

மதுரை ஹெச்.ஓ,

மதுரை - 625 001,

டெம்ப்ல் வியூ எதிரில்,

Ph : +(91)-9943323221, 9442751870, +(91)-452-2346093.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 

அழகர் கோவில் 
1.1km

இன்மையிலும் நன்மை தருவார்
350m

திருபரங்குன்றம் 
6.8Km
பழமுதிர்சோலை
25.8Km