அருள்மிகு தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில்
வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர்

 

tanjapuriswarar_temple 

சுவாமி : தஞ்சபுரீஸ்வரர்.

அம்பாள் : ஆனந்தவல்லிதாயார்.

மூர்த்தி : பச்சைக்காளி, பவளக்காளி, சரஸ்வதி, கஜலட்சுமி.

தலவிருட்சம் : வன்னி மரம்.

தலச்சிறப்பு : தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்தை கொண்டுள்ளது.  மேற்கு நோக்கி அருள்பாலிக்கும்  அரிய சிவன் கோவில் ஆகும்.  துர்க்கை தாரகனை வதம் செய்த பிறகு இறைவனுடன் இணைந்து சாந்த சொரூபினியாக  ரிஷிகளுக்கு காட்சி கொடுத்த தலம்.  பிரகதீச்வரர் கோவிலுக்கும் முந்தை காலத்தில் கட்டப்பட்ட திருக்கோவில் ஆகும்.  இத்தல  சிவபெருமானை வழிபட்டு, பிரகதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது என கூறப்படுகிறது.  இத்திருத்தலம் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 திருகோவில்களில் ஒன்றாகும்.

தல வரலாறு : குபேரன் இலங்கையை ஆட்சி செய்து வந்தான்.  அப்பொழுது ராவணனிடம் தனது ஆட்சி, செல்வங்கள்,  அனைத்தையும் இழந்தான்.  குபேரன் இலங்கையை மீட்க வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரரை வழிபட்டார்.  சிவபெருமான்  அருளால் இழந்த செல்வங்கள் அனைத்தும் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தில் திரும்ப பெற்றான் என்பது ஐதீகம்.  இதனால்  தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் குபேர யாகம் நடத்தப்படுகிறது.

வழிபட்டோர் : குபேரன்.

நடைதிறப்பு : காலை 6.00 முதல் பகல் 1.00 மணி வரை, மாலை 4.00 முதல் இரவு 8.00 மணி வரை.

திருவிழாக்கள் :

ஐப்பசி மாத அமாவாசை அன்று குபேர யாகம்.

அருகிலுள்ள நகரம் : தஞ்சாவூர்.

கோவில் முகவரி : அருள்மிகு தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில்,

வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. சங்கம் ஹோட்டல்,

தஞ்சாவூர்,

திருச்சி ரோடு,

தஞ்சாவூர் - 613 007,

Ph : 91-4362-239451.

 

2. ஹோட்டல் பரிசுத்தம்,

55 ஜி.ஏ. கானல் ரோடு,

தஞ்சாவூர் 631 001,

Ph : 04362 231 801.

 

3. ஹோட்டல் ஞானம் அண்ணாசாலை(மார்க்கெட் ரோடு),

தஞ்சாவூர் 631 001,

Ph : 04362- 278501-507.

 

4. ஹோட்டல் பாலாஜி இன் 81,82,83,

பாஸ்கர புரம்,

நியூ பஸ் ஸ்டாண்ட்,

தஞ்சாவூர் - 613 005,

Ph : 04362-226949/227949.

 

5.ஸ்டார் ரெசிடென்சி எண் 43 & 44,

கலெக்டர் ஆபீஸ் ரோடு,

நியர் அண்ணா பஸ் ஸ்டாண்ட்,

அரவிந்த் ஐய் ஹாஸ்பிட்டல்,

மதுரை - 625 020,

Ph : +91 - 452-4343999, +91 - 452-4343970.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. ஹோட்டல் ராம்நாத்,

தெற்கு ராம் பார்ட் பழைய பேருந்துநிலையம்,

எண் 1335, தஞ்சாவூர் - 613 001

Ph : +(91)-4362-272567, +(91)-9362610901.

 

2. ஸ்ரீ லஷ்மி நாராயணன் பவன்,

எண் 133, பெரிய வீதி,

தஞ்சாவூர் - 613001,

பட்டுகோட்டை

Ph : +(91)-4362-252358.

 

3.கார்த்திக் உணவகம்

எண் 1334,தஞ்சாவூர் ஹெச்.ஓ - 613001,

தெற்கு ராம் பார்ட் அருகில் கார்த்திக் ஹோட்டல்

Ph : +(91)-4362-278662, 278663, 278322.

 

4.ஹோட்டல் காபி பிளாசா

எண் 1465, தஞ்சாவூர் -  613001,

தெற்கு ராம் பார்ட் அருகில் கார்த்திக் ஹோட்டல்

Ph : +(91)-4362-231358.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 


மேல சிங்க பெருமாள் 
750m

நீலமேக பெருமாள் 
750m

மணிகுன்ற பெருமாள் 
500m

ஆத்மனாதேஸ்வரர் 
3.6km

பிரசன்னவெங்கடேச பெருமாள் 
3.1km