அருள்மிகு எழுத்தறி நாதேசுவரர் திருக்கோயில்
இன்னம்பூர், கும்பகோணம் வட்டம்
சுவாமி : அருள்மிகு எழுத்தறிநாதர்.
அம்பாள் : அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை, நித்ய கல்யாணி.
மூர்த்தி : விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சந்திரன், பைரவர், நடராஜர், தட்சிணாமூர்த்தி நால்வர்.
தீர்த்தம் : ஐராவத தீர்த்தம்.
தலவிருட்சம் : பலா, செண்பகம்.
தலச்சிறப்பு : ஐராவதம் வழிபட்ட தலம். அகத்தியர் வழிபட்டு இலக்கண உபதேசம் பெற்ற தலம். ஈசன் தாமே கணக்கெழுதிக் கொடுத்த தலமாகும். கல்வி பயிலத் தொடங்கும் முன், இங்கு உள்ள இறைவனை வழிபட்டால் கல்வி தடையின்றி பயிலும் அருள் கிடைக்கும். இத்திருக்கோயிலில் உள்ள சிவலிங்கம் பெரியதாகும்.
தலவரலாறு : முன் ஒரு சமயத்தில் தான் பெற்ற சாபம் காரணமாக சூரியன் தன்னுடைய பொலிவை இழந்து ஒளி குறைந்து இருக்கும் சமயம் தனக்கு எங்கு சாபம் நிவர்த்தியாகும் என்று யோகிகளிடம் கேட்க பூர்வ ஜென்ம பாவ நிவர்த்தி தலமான ஐராவதம் வழிபட்ட இன்னம்பரில் உள்ள (ஐராவதேஸ்வரர் ) சுயம்புநாத சுவாமியை வழிபட்டால் சாபம் நிவர்த்தியாகும் எனக் கூறுகின்றனர். இங்கு வந்து சிவ பெருமானை தரிசனம் செய்ய முயலும் பொழுது நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியன சிவபெருமானை மறைக்கவே தன் நிலையை அவர்களிடம் கூறி தனக்கு சாப விமோசனம் கிடைக்க உதவுமாறு வேண்டுகோள் விடுகின்றார். சூரியனின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியோர் சூரியன் வழிபட சற்று விலகி வழி கொடுத்தனர். நந்தி விலகிய தலங்களில் இந்த தலமும் ஒன்று.
வழிபட்டோர் : அகத்தியர், ஐராவதர், சூரியன்.
பாடியோர் : திருஞானசம்பந்தர், அப்பர்.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
பூஜை விவரம் : நான்கு கால பூஜை.
திருவிழாக்கள் :
ஆனி மாதம் திருக்கல்யாணம்,
கார்த்திகை,
சோம வாரங்கள்,
நவராத்திரி,
திருவாதிரை.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு எழுத்தறி நாதேசுவரர் திருக்கோயில், சுவாமி மலை திருக்கோயிலின் இணைக்
கோயிலாகும்.
இன்னம்பூர் அஞ்சல், திருப்புறம் பியம் (வழி) - 612 003, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. ஹோட்டல் அழகு 24,
சன்னதி ஸ்ட்ரீட்,
சுவாமிமலை - 612 302,
Ph : +91-99449-09579.
2.இன்டிகோ சுவாமிமலை வில்லா,
6/30 பி ஆக்ராஹரம்,
பாபுராஜபுரம் (போஸ்ட்),
கும்பகோணம் - 612 302.
3. ஹோட்டல் சரவண பவன் 25பி & 25சி,
ஜீவரத்தினம் மளிகை,
கிரௌன் தியேடர் அருகில்,
டெய்லி தந்தி அருகில்,
ஆற்காடு ரோடு,
வேலூர் - 632 004.
Ph : 0416 221 7433.
4.ஓ.வி.எம் ரிசோர்ட்ஸ் கும்பகோணம்,
கும்பகோணம்.
5.வெங்கடராமன் ஹோட்டல்,
கர்ண கொள்ளை ஆக்ராஹரம்,
வலயபேட்டை ஆக்ராஹரம்,
கும்பகோணம்.
அருகில் உள்ள உணவகங்கள் :
1.ஸ்ரீ ஆதி கணேஷ் பவன் பியூர் வெஜிடேரியன் ஹோட்டல்
எண் 32, சன்னதி ஸ்ட்ரீட்,
சுவாமிமலை,
கும்பகோணம் - 612 302,
Ph : +(91)-9443161929, 7598578257.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)