அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

திருப்பட்டூர், திருச்சி மாவட்டம்

Thirupattur-bramma_temple

சுவாமி : அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர்.

அம்பாள் : பிரம்ம நாயகி.

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்.

தலவிருட்சம் : மகிழ மரம்.

தலச்சிறப்பு : பிரம்மபுரீஸ்வரர் கோவில் ஒருவரது தலைஎழுத்தை மாற்றும் கோவில் என்று சொல்லப்படுகிறது.  மேலும் தலையில் எழுதியிருந்தால் மட்டுமே ஒருவர் இந்த கோவிலுக்கு  செல்ல முடியும் என்று நம்பபடுகிறது.  பிரம்மனுக்கு அருள் புரிந்த ஈசன் தான் பிரம்மபுரீஸ்வரர்.   பிரம்மபுரீஸ்வரர் ஒரு சுயம்பு மூர்த்தி.  கிழக்கு நோக்கிய மூலவர் போலவே வெளி பிரகாரத்தில்  தெற்க்கு பக்கத்தில் கிழக்கு நோக்கி பிரம்மன் சன்னதி உள்ளது.  

திருபட்டூரில் மட்டுமே பிரம்மன்  தனி சன்னதியுடன் காணபடுகிறார். இக்கோவிலில் எழுந்தருளி  பாலிக்கும் பிரம்மாவின் உயரம் 6 .1/4 அடி.  பிரதி வியாழன் பிரம்மாவிற்கு உகந்தநாள் ஆகும்.  அன்று காலை 6.00 மணிக்கு  நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொள்ளலாம்.  பிரதி பங்குனி  மாதத்தில் 15, 16, 17 ஆகிய நாட்களில் பிரம்மபுரீஸ்வரர் மீது காலையில் சூரியகதிர்கள் பட்டு  நமஸ்கரிக்கும்.  இதனை  பக்தர்கள் தரிசித்து அருள் பெறலாம்.

தல வரலாறு : திருபட்டூரில் உள்ள பிரம்மன் தலை எழுத்தை மாற்றும் சக்தி  உடையவர்.  படைப்பாற்றல் உள்ள பிரம்மன் ஒரு முறை தனக்கும் ஐந்து தலை ஈசனுக்கும் ஐந்து தலை என்று அகங்காரத்தில் இருந்தார். அதனால் ஈசனை மதிக்காமல் இருந்தார்.  ஈசன் பிரம்மனுடைய  அகங்காரத்தை அழிக்க நினைத்து ஐந்து தலைகளில் ஒரு தலையை கொய்து விடுகிறார்.  இதனால்  பிரம்மன் படைப்பாற்றலை இழக்கிறார்.  ஈசனின் சாப விமோசனம் வேண்டி பிரம்மன் திருபட்டூரில்  12 சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து ஈசனை வேண்டுகிறார்.  மகிழ்ந்த ஈசன் பிரம்மனுக்கு  மீண்டும் படைப்பாற்றலை வழங்குகிறார்.  

மேலும் ஈசன் இங்கு வந்து பிரம்மனை  வணங்குபவர்களுக்கு அவர்களது தலை எழுத்தை மாற்றி மங்களகரகமாக்கும் ஆற்றலை வழங்குகிறார்.  திருபட்டூரில் உள்ள பிரம்மனின் பார்வை பட்டாலே  போதும் சகல தோஷங்களும்  விலகி நல்வாழ்வு அமையும்.  ஆனால் விதி இருப்பவர்கள் மட்டுமே  இந்த தலத்திற்கு வர முடியும்  என்றும் நம்பபடுகிறது.  இந்த கோவிலில் முதலில் ஈசன், பின்பு  பிரம்மன், அம்பாள் என்று வணங்கிவிட்டு 36 நெய் தீபங்கள் ஏற்றி 9 முறை ஆலயத்தை வலம்  வந்தால் சகல வித  தோஷங்களும் விலகி விடும் என்று நம்பபடுகிறது.  ஏழாம் எண் ஆதிக்கத்தில்  பிறந்தவர்களும்  ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கோவிலில்  வழிபட்டால் விசேஷ  பலன்கள் உண்டாகும் என்று நம்பபடுகிறது.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல்  இரவு 8.00 மணி வரை.  பிரதி வியாழன் அன்று பிற்பகல் 1.00 மணி வரை நடை திறந்திருக்கும்.

பூஜைவிவரம் :

காலசந்தி - காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை,

உச்சிக்காலம் - பகல் 11.30 மணி முதல் 12.00 மணி வரை,

சாயரட்சை - மாலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை,

அர்த்தஜாமம் - இரவு 7.45 மணி முதல் 8.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : திருச்சி.

கோயில்முகவரி : அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்,

திருப்பட்டூர் - 621 105, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. மதுரா ஹோட்டல்,

No.1 ராக்கின்ஸ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 001.

ஜங்சன் ரோடு,

கண்டோன்மெண்ட்,

Ph : +(91)-431-2414737, +(91)-9894558654.

 

2. மாயவரம் லாட்ஜ் No 87,

வண்ணாரபேட்டை தெரு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 002,

தெப்பக்குளம் அஞ்சல்,

Ph : +(91)-431-2711400, 2704089.

 

3. பெமினா ஹோட்டல் 109,

வில்லியம்ஸ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 001,

மத்திய பேருந்து நிலையம்,

ரெயில்வே ஜங்ஷன்,

Ph : 0431 - 2414501.

 

4. ஹோட்டல் ராக்போர்ட் வியுவ் 5,

ஓடத்துறை ரோடு,

சிந்தாமணி,

திருச்சிராப்பள்ளி - 620 002,

Ph : +91 740 2713466.

 

5. கிராண்ட் கார்டினியா,

22 - 25 மன்னார்புரம் ஜங்ஷன்,

திருச்சி - 620 020,

Mobile : +91 95856 44000, Tel : +91 431 4045000.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. ரகுநாத் ரெஸ்டாரன்ட்,

காலேஜ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 002.

 

2. பார்த்தசாரதி விலாஸ்/ வீகன் ரெஸ்டாரன்ட்,

கொண்டையன் பேட்டை ஆக்ரஹராம்,

திருவானை கோவில்,

திருச்சி - 620 002. 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (453 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 

மாற்றுரைவைதீஸ்வரர்
28.5km

உத்தமர்கோவில் 
23.3km

பழைய சமயபுரம் 
17.6km

சமயபுரம்
16.8km

மாந்துறை சிவன் 
31.8km

திருவெள்ளறை
28.1km