அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்
நங்கநல்லூர், சென்னை
சுவாமி : சுப்ரமணிய சுவாமி.
தலச்சிறப்பு : சுப்ரமணிய சுவாமி (முருகன்) தமிழர்களால் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். முருகப்பெருமான் சிவன் - பார்வதி தம்பதியர்களுக்கு மகன் ஆவார். சிவபெருமான் தனது ஆறு முகத்திலிருந்து நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்றும் கூறப்படுகிறது.
27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் நட்சத்திரம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி(பௌர்ணமி) நாளாக இருக்கும். இந்த தைப்பூசத் திருநாள் அன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம். தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே முருகப்பெருமான்.
பார்வதி தேவி முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில் தான். இதன் காரணமாகவே தைப்பூசத் திருவிழா முருகன் கோவில்களில் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால் தீவினைகள் நீங்கி நன்மை ஏற்படும் என்பது ஐதீகம். முருகப்பெருமானுக்கு பல பெயர்கள் உண்டு. அவற்றுள் சில வேலன், குகன், குமரன், ஆறுமுகம், கந்தன், சரவணபவன், சுப்பிரமணியன் ஆகும். சுப்பிரமணியன் என்பதற்கு மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன் என்று பொருள்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
திருவிழாக்கள் : தைப்பூசம்.
அருகிலுள்ள நகரம் : சென்னை.
கோவில் முகவரி : அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்,
நங்கநல்லூர், சென்னை - 600 061.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)