அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்
திருச்செங்கோடு
சுவாமி : அர்த்தநாரீஸ்வரர்.
அம்பாள் : பாகம்பிரியாள்.
மூர்த்தி : முருகன்.
தீர்த்தம் : சங்குதீர்த்தம், தேவதீர்த்தம்.
தலவிருட்சம் : இலுப்பைமரம்.
தலச்சிறப்பு : செங்குத்தான பெரியமலை, 1200 படிகள். வாகன வசதி மலைமேல் செல்ல உள்ளது. அர்த்தநாரீஸ்வரர் கால் அடியில் தண்ணீர் ஊற்று உள்ளது. மூலவர் அர்த்தநாரீஸ்வரர்ராயினும் முருகன் பெருமை சொல்லற்கரியது.
தல வரலாறு : ஒரு சமயம் கயிலை மலை மீது பார்வதி தேவியுடன், சிவபெருமான் அமர்ந்திருந்தார். அப்பொழுது சிவனைக் காண வந்த பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வணங்கி வலம் வந்தார். ஆனால் பார்வதி தேவியை வணங்கவில்லை. அதனால் பார்வதி தேவி கோபமடைந்தார். சினம் கொண்ட பார்வதி தேவி பிருங்கியின் உடலில் உள்ள சதை மற்றும் இரத்தம் நீங்குமாறு சாபமளித்தார். பிருங்கி முனிவர் சதையும் இரத்தமும் நீங்கி எலும்பு தோல் போர்த்திய உடம்பினைப் பெற்றார். சிவன் தம்முடைய தளர்வடைந்த நிலையினைக் கண்டு இரக்கமுற்றார். சிவன் பிருங்கி முனிவருக்கு மூன்றாவது காலாக ஊன்று கோலினை அளித்தார்.
ஊன்று கோலினை பெற்ற முனிவர் மகிழ்ச்சி அடைந்து, சிவனின் முன்பாக நடனம் ஆடி பக்தியைச் செலுத்தினார். இதனைக் கண்ட பார்வதி தேவி மனம் வருந்தி சிவனில் பாதி உருவை அடையவேண்டும் என்று கருதி சிவனை நோக்கிக் கடுமையான தவத்தினை மேற்கொண்டார். சிவன் மனமகிழ்ந்து தம்முடலில் பாதியினைத் தருவதாக வரமளித்தார். பார்வதி தேவி சிவனுடன் ஒன்றிணைந்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி அளித்தார். பிருங்கி முனிவர் இருவரையும் வணங்க வேண்டிய நிலை ஏற்பட்டு வணங்கினார்.
பாடியோர் : திருஞானசம்பந்தர்.
நடைதிறப்பு : காலை 6.00 முதல் 2.00 மாலை 3.00 முதல் 7.00 வரை.
திருவிழாக்கள் : சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரம்.
அருகிலுள்ள நகரம் : ஈரோடு.
கோயில்முகவரி : அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்,
திருச்செங்கோடு - 637211. நாமக்கல் மாவட்டம்.
தொலைபேசி எண் : 04288 - 255925.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1.ஹோட்டல் ராதா பிரசாத்,
அண்ணா சிலை அருகில்,
திருசெங்கோடு - 637 211,
Ph : 04288 - 255510, 255560, 097155 69000, 097888 34567.
2.ஹோட்டல் சரவண பவன் கிளாச்சிக்,
சௌத்கார் ஸ்ட்ரீட்,
எஸ்.ஹெச் 79, கொள்ளபாலயம்,
திருசெங்கோடு - 637 211.
அருகில் உள்ள உணவகங்கள் :
1.லிஜோ ரெஸ்டாரன்ட்,
அண்ணா சிலை அருகில்,
ஹோட்டல் ராதா பிரசாத் கிரௌண்ட் ப்ளோர்,
திருசெங்கோடு - 637 211, Ph : 97-50-681777.
2.தையல்நாயகி விலாஸ்,
ஈஸ்ட் கார் ஸ்ட்ரீட்,
கமலர்,
திருசெங்கோடு - 637 211.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)