அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்
அன்பில், லால்குடி வட்டம்
சுவாமி : அன்பிலால் ஆலந்துறையார், சத்தியவாகீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர்.
அம்பாள் : சௌந்தர நாயகி.
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்.
தலவிருட்சம் : ஆல மரம், வில்வம் மரம்.
தலச்சிறப்பு : இத்திருக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று நம்பப்படுகிறது (சித்ரா பவுர்ணமி அன்று வழிபட்டால் இன்னும் சிறப்பு). 5 நிலை இராஜகோபுரத்துடன் விளங்கும் இத்தலத்தில் மூலவர் சத்யவாகீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்புவாக எழுந்து உள்ளார். பிரம்மர் தன் சாபம் நீங்க வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. எனவே இந்தத்தலம் பிரம்மபுரீஸ்வரம் என்று அழைக்கபடுகிறது. கோயிலின் உள்ளே சப்தமாதர், பிட்சாடனர், விசுவநாதர், விசாலாட்சி, பைரவர், முருகன் சன்னதிகள் மற்றும் நவக்கிரக சந்நிதியும் உள்ளது.
தல வரலாறு : இத்திருத்தலம் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னரால் கட்டப்பட்டது. காசிக்கு நிகரான இத்திருத்தலத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரர் பாடல் பாடியுள்ளனர். ஒரு முறை திருஞானசம்பந்தர் கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை தரிசிக்க வந்த போது, கொள்ளிட நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. திருஞானசம்பந்தரால் கோவிலை நெருங்க முடியவில்லை. தூரத்தில் நின்ற படியே சுயம்புவாய் அருள் பாலிக்கும் சிவபெருமானைப் பாடினார். காற்றில் கலந்து வந்த ஒலி ஓரளவே கோயிலை எட்டியது. திருஞானசம்பந்தரின் பாட்டை நன்கு கேட்பதற்காக விநாயகர் தன் யானைக் காதைப் பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து கேட்டதால், இத்திருகோவிலில் இருக்கும் விநாயகர் "செவி சாய்த்த விநாயகர்" என்றும் அழைக்கப்படுகிறார். காதில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலம் சென்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்தால், காதுக் குறைபாடுகள் நீங்கும் என நம்பப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத தாமரைபீடம்(சுவாமி தமரையில் இருபது போன்ற அமைப்பு) மற்றும் நீர்யாழி மண்டபம் அமைப்பு இக்கோவில் உள்ளது. நந்தி சுவாமிக்கு வழிவிட்டு விலகி இருக்கும்.
பாடியோர் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை.
திருவிழாக்கள் : பிரதோஷம், பவுர்ணமி, சித்ராபவுர்ணமி(திருகல்யாண வைபவம்), பஞ்சமூர்த்தி புறப்பாடு.
அருகிலுள்ள நகரம்: லால்குடி.
கோயில் முகவரி : அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்,
அன்பில் அஞ்சல் - 621 702, லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம்.
தொலைபேசி எண் : 9965739750
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. மதுரா ஹோட்டல்,
No.1 ராக்கின்ஸ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 001.
ஜங்சன் ரோடு,
கண்டோன்மெண்ட்,
Ph : +(91)-431-2414737, +(91)-9894558654.
2. மாயவரம் லாட்ஜ் No 87,
வண்ணாரபேட்டை தெரு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 002,
தெப்பக்குளம் அஞ்சல்,
Ph : +(91)-431-2711400, 2704089.
3. பெமினா ஹோட்டல் 109,
வில்லியம்ஸ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 001,
மத்திய பேருந்து நிலையம்,
ரெயில்வே ஜங்ஷன்,
Ph : 0431 - 2414501.
4. ஹோட்டல் ராக்போர்ட் வியுவ் 5,
ஓடத்துறை ரோடு,
சிந்தாமணி,
திருச்சிராப்பள்ளி - 620 002,
Ph : +91 740 2713466.
5. கிராண்ட் கார்டினியா,
22 - 25 மன்னார்புரம் ஜங்ஷன்,
திருச்சி - 620 020,
Mobile : +91 95856 44000, Tel : +91 431 4045000.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. ரகுநாத் ரெஸ்டாரன்ட்,
காலேஜ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 002.
2. பார்த்தசாரதி விலாஸ்/ வீகன் ரெஸ்டாரன்ட்,
கொண்டையன் பேட்டை ஆக்ரஹராம்,
திருவானை கோவில்,
திருச்சி - 620 002.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)