அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோவில்

கும்பகோணம், தஞ்சாவூர் 

nadanapurreshwarar_temple

சுவாமி : நடனபுரீஸ்வரர்.

அம்பாள் : சிவகாம சுந்தரி.

மூர்த்தி : தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஷண்முகர், துர்க்கை.

தீர்த்தம் : அகஸ்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம்.

தலவிருட்சம் : வன்னி மரம்.

தலச்சிறப்பு : நடனபுரீஸ்வரர் திருக்கோவில் தெற்கு நோக்கி ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்து  உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே முன் மண்டபம் உள்ளது.  இங்கு  தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும், இடப்புறம் கிழக்கு நோக்கிய சுவாமி சந்நிதியும் உள்ளது.   நடனபுரீஸ்வரர் உயர்ந்த திருமேனி எழிலுடன் லிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிகிறார்.   பிராகாரத்தில் வலம் வரும் போது கோஷ்டத்தில் 12 ராசி மண்டலங்களுக்கு மேலே பீடமிட்டு  அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.  இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி ராசி  மண்டல குரு எனப் போற்றப்படுகிறார்.  இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை  மாலை அணிவித்து வணங்கினால், 12 ராசிக்காரர்களின் சகல தோஷங்களையும் நீக்கி  நற்பலன்களை வழங்குவார் என்பது நம்பிக்கை.  மேற்குப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி  தெய்வானை சமேத ஷண்முகர், துர்க்கை ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

பல்லவர் காலத்து 11 செப்பேடுகள் தண்டந்தோட்டத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளன.  இந்த ஊர்  பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும் சிறப்புடன் திகழ்ந்தது என்பதை இந்தச் செப்பேடுகள்  மூலம் அறிய முடிகிறது.  இந்தச் செப்பேடுகள், 8-ம் நூற்றாண்டில் காஞ்சியை ஆண்டு வந்த  இரண்டாவது நந்திவர்மன் பற்றிக் கூறுகிறது.  காஞ்சீபுரத்திலுள்ள ஶ்ரீவைகுண்டப் பெருமாள்  கோவிலைக் கட்டியவனை இரண்டாவது நந்திவர்மன் என்றும் அறிய முடிகிறது.

தல வரலாறு : நடனபுரீஸ்வரர் திருக்கோவில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல் பெற்ற சோழ  நாட்டுத் தலம் ஆகும்.  கயிலாயத்தில் சிவன், பார்வதி திருக்கல்யாணம் நடைபெற்ற போது  திருக்கல்யாணத்தை காண தேவர்கள், முனிவர்கள் அனைவரும் வந்தனர்.  இதனால் வடதிசை  உயர்ந்து தென்திசை தாழ்ந்தது.  பூமி தேவியின் பாரத்தை சமம் செய்வதற்காக சிவன் அகத்தியரை  தென்திசைக்கு அனுப்பினார்.  சிவன், பார்வதி திருக்கல்யாணத்தை காண முடியாமல் மனம்  வருந்திய அகத்தியருக்கு அவர் விரும்பும் இடங்களில் எல்லாம் கல்யாண கோலத்தில் காட்சி  தருவதாக அருள் பாலித்தார்.  அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள நடனபுரீஸ்வரர்  திருக்கோவிலில் அகத்திய முனிவரின் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் கார்த்தியாயனி சமேத  கல்யாணசுந்தரராய் அகத்தியருக்கு காட்சித்தந்து அருளினார்.

அகத்தியருக்குக் காட்சி கொடுத்த இறைவன் அவருக்கு இரண்டு வரங்களையும் கொடுத்தார்.   அதன்படி இத்தலத்திற்கு வந்த நடனபுரீஸ்வரரை வழிபட்டால் திருமணம் தடைபடுகிறவர்களுக்கு  திருமணத் தடைகள் விலகும் என்றும், தங்கள் வாழ்விலுள்ள சகல தடைகளும் தீக்கி கயிலாயத்தை  தரிசித்தால் ஏற்படும் பலன் கிட்டும் என்றும் அருள் புரிந்தார்.  ஆகையில் இத்தலம் திருமணத் தடை  நீங்கும் ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.

வழிபட்டோர் : அகத்தியர்.

பாடியோர் : சுந்தரர்.

நடைதிறப்பு : காலை 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு  7.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகுநடனபுரீஸ்வரர் திருக்கோவில்,

தண்டந்தோட்டம், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் – 612 202.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2.சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3.குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4.ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

  1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம் 
  

 

அருகிலுள்ள கோவில்கள்

 

திருநாகேஸ்வரம்
5.2km

அகத்தீஸ்வரர்
4.1km

மகா மாரியம்மன்
5.9Km

ராமநாத சுவாமி
3.9km

ஆகாச மாரியம்மன்
3.4km

வீரமாகாளி அம்மன்
3.8km