அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில்
திருவண்ணாமலை
சுவாமி : அண்ணாமலையார்.
அம்பாள் : உண்ணாமலையம்மன், அபீதகுசாம்பாள்.
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம்.
தலவிருட்சம் : மகிழ மரம்.
தலச்சிறப்பு : சைவ சமயத்தின் தலைநகர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலம். நினைத்தாலே முக்தி தரும் தலம். சித்தர்கள் பலர், ஜோதியில் இணைந்த அற்புத தலம். மாதந்தோறும் பௌர்ணமி தினத்தில், பௌர்ணமி நேரத்தில் அண்ணாமலையாரை தரிசித்து அண்ணாமலையாரின் திருஉருவமாகவே கருதி பக்தர்கள் போற்றி வணங்கும் மலையை வணங்கி வலம் வந்தால் என்னற்ற நன்மைகளும், வாழ்க்கையில் மேன்மையும் அடைவர் என்பது உண்மை. இதற்கு பௌர்ணமி ”கிரிவலம்” என்பர். பகவான் ரமண மகரிஷி, யோகி ராம் சரத்குமார் மற்றும் சித்தர்கள் ஜோதியில் இணைந்த தலம். கார்த்திகைத் திருநாளன்று மலை மீது ஏற்றப்படும் தீபஜோதியை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி அண்ணாமலையாரை தரிசிப்பர் என்பது தனி பெரும் சிறப்பு, அவ்வாறு கிரி வலம் சுற்றி வரும் போது எட்டு திசைகளிலும் எட்டு தனித்தனி லிங்கங்கள் அமைந்து உள்ளது.
இந்திர லிங்கம் (கிழக்கு)
இது முதல் லிங்கம் ஆகும். இது கிழக்கு நோக்கி உள்ளது. இதை தரிசித்தால் வளமும் நலமும் பெருகும்.
அக்னி லிங்கம் (தென்கிழக்கு)
இது இரண்டாவது லிங்கம் வலப்புறத்தில் உள்ளது. இதை வழிப்படுவதால் எல்லா நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்
எம லிங்கம் (தெற்கு)
இது மூன்றாவது லிங்கம் ஆகும். இதை வழிப்படுவதால் பொருளாதார பிரச்சினைகள் தீரும்.
நிருத்தி லிங்கம் (தென்மேற்கு)
இது நான்காவது லிங்கம் ஆகும். இதை வழிப்படுவதால் எல்லா மனக்கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம்.
வருண லிங்கம் (மேற்கு)
இது ஐந்தாவது லிங்கம் ஆகும். இதை தரிசிப்பதால் சமுதாய நலன் அடைவர்.
வாயு லிங்கம் (வடமேற்கு)
இது ஆறாவது லிங்கம் ஆகும். இது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நன்மை பயக்க கூடியது.
குபேர லிங்கம் (வடக்கு)
இது ஏழாவது லிங்கம் ஆகும். இதை வணங்குவதால் மன நிம்மதியும் பொருளாதாரமும் கிடைக்கும்.
ஈசான லிங்கம் (வட கிழக்கு)
இது கடைசி மற்றும் எட்டாவது லிங்கம் ஆகும். இதை வணங்குவதால் ஒருவருக்கு மன நிம்மதியும், கடவுளை நினைத்து வழிப்படும் ஆற்றலையும் கொடுக்கும்.
தல வரலாறு : புராணங்களின்படி ஒரு முறை விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தன் இருவரில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்ப்பட்டது. அவர்கள் இருவரும் சிவனிடம் சென்று கேட்பது என்று முடிவு செய்தார்கள். சிவனிடம் சென்று தங்கள் ஐயத்தை கேட்டதும் சிவன் தன் முடி அல்லது அடியை யார் முதலில் கண்டு பிடிக்கிறார்களோ அவரே பெரியவர் என்றார். பிரம்மா அவரது முடியை கண்டுபிடிப்பதற்காக அன்னமாக உருவமெடுத்து மேல் நோக்கி பறந்து சென்றார். அவரால் சிவனின் முடியை அதாவது அவரின் தொடக்கத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. ஏனென்றால் சிவன் தொடக்கமும் முடிவும் இல்லாத எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் கடவுள். பிரம்மன் தொடர்ந்து மேலே சென்ற போது ஒரு மலர் சிவனின் தலையில் இருந்து கீழ் நோக்கி விழுந்து கொண்டு இருந்தது. பிரம்மன் அந்த பூவினை எடுத்துக்கொண்டு தான் சிவனின் முடியை அடைந்து விட்டதாக பொய் சொல்லி விட்டார். நடந்ததை அறிந்த சிவன் பிரம்மன் மேல் கோபம் கொண்டு உனக்கு இப்புவியில் கோவிலே இருக்காது என்று சாபமிட்டார். அதனால் தான் பிரம்மன்னுக்கு என்று தனி கோயில் இவ்வுலகில் இல்லை. விஷ்ணு பன்றி உருவமெடுத்து கீழ் நோக்கி மண்ணை தோண்டி சிவனின் அடியை அறிய முயன்றார். ஆனால் அது முடியவில்லை, இருப்பினும் விஷ்ணு தொடர்ந்து முயன்றதை கண்ட சிவன் அவரை மெச்சி சிவனின் இதயத்தில் வைத்து கொண்டார்.
நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை.மாலை 3.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
பூஜை விவரம் : ஆறு கால பூஜை.
திருவிழாக்கள் :
சித்திரை - வசந்த உற்சவம் 10 நாட்கள்,
வைகாசி - விசாகம்,
ஆனி - ஆனி பிரம்மோற்சவம் 10 நாட்கள், ஆனி திருமஞ்சனம்(நடராஜர்) 1 நாள்,
ஆடி - ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 10 நாட்கள், சுந்தரர் உற்சவம் 1 நாள்.
ஆவணி - ஆவணி மூலம் உற்சவம் 1 நாள்,
புரட்டாசி - நவராத்திரி 9 நாட்கள்,
ஐப்பசி - அன்னாபிஷேகம் 1 நாள், கந்தசஷ்டி 6 நாட்கள்,
கார்த்திகை – தீப பிரம்மோற்சவம் 17 நாட்கள், முக்கிய திருவிழா கார்த்திகை
தீப திருவிழாவின் பத்தாம் நாள் திருவிழாவில் மாலை 6.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள்
தங்க விமானங்களில் ஏழுந்தருளி ஜோதி ஸ்வரூபமாக தீப உலா தங்க ரிஷப வாகனம் முதலியன,
மாசி - மகாசிவராத்திரி, மாசிமகம் பள்ளி கொண்டாடப்பட்டு தீர்த்தவாரி,
பங்குனி - பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் 6 நாட்கள்.
அருகிலுள்ள நகரம் : திருவண்ணாமலை.
கோயில் முகவரி : அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில்,
திருவண்ணாமலை – 606 601.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1.ஹோட்டல் அற்பனா,
எண் 7, ஸ்ரீராம் நகர்,
போளூர் ரோடு,
திருவண்ணாமலை - 606 601.
Ph : + 91 4175 254755 / 758 / 759.
2.ஹோட்டல் அஷேர்யா,
9, கணபதி நகர் செங்கம் ரோடு,
திருவண்ணாமலை - 606 603,
Ph : 093600 13511.
3.ராமகிருஷ்ணா ஹோட்டல்,
34-எப், போளூர் ரோடு,
திருவண்ணாமலை - 606601,
Ph : 04175-250003,250005,250006, +91 944 496 0005.
4.லக்ஷ்மி ரெசிடென்சி இன்,
69, செங்கம் ரோடு,
ஸ்ரீ ரமணா ஆசிரமம் எதிரில்,
திருவண்ணாமலை - 632 603,
Ph : 914175-236099, 914175-235757.
5.ஹோட்டல் நளா ரெசிடென்சி,
எண். 21, அண்ணாசாலை,
திருவண்ணாமலை,
Ph : :04175-252399, 252818, 222322, +91-9585550205 / 9443222818.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)