கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்
கரூர் மாவட்டம்
சுவாமி : கல்யாண பசுபதீஸ்வரர், ஆநிலையப்பர், பசுபதிநாதர்.
அம்பாள் : அலங்காரவல்லி, சௌந்திரநாயகி, கிருபாநாயகி.
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், அமராவதி தீர்த்தம், தாடகை தீர்த்தம், அரச தீர்த்தம், தேனு தீர்த்தம், முருக தீர்த்தம்.
தலவிருட்சம் : வஞ்சி மரம்.
தலச்சிறப்பு : கொங்கு நாட்டு ஏழு தலங்களில் முதன்மையானது. இத்தலத்தின் கொடிமரம் கருங்கல்லால் ஆனது. கொடி மரத்தின் ஒரு புறத்தில் தலையைத் தட்டில் வைத்து கையில் ஏந்தியவாறு அமைந்த புகழ்ச்சோழ நாயனாரின் சிற்பமும் மறுபுறம் சிவலிங்கமும் சிவலிங்கத்தை நாவால் நக்குகின்ற பசுவும் அமைந்துள்ளன. ஐந்து லிங்கங்கள் இருப்பது இத்தல சிறப்பாகும். இத்திருக்கோவிலில் அம்பிகைக்கு இரண்டு சன்னதிகள் உள்ளன. கருவூரத்தேவர் அவதரித்த இடம், புகழ்ச்சோழ நாயனார் ஆண்ட ஸ்தலம். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
தலவரலாறு : ஆதிகரூர் 2000 ஆண்டு கால பழமையான ஆலயம். ஆறுகால வழிபாட்டுத் தலம். வஞ்சிபுரம் என்று முன்னர் அறியப்படுகிறது. சேரநாட்டு தலைநகர். படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்குவதற்காக சிவன் நடத்திய திருவிளையாடலால் உண்டான தலம் ஆகும். சிவனை அடைய விருப்பம் கொண்டிருந்த காமதேனுவிடம் நாரதர் சென்று, பூலோகத்தில் உள்ள வஞ்சிவனத்தில் தவம் செய்தால் அவர் எண்ணம் ஈடேறும் என்று கூறுகிறார். அதன்படி வஞ்சி வனமாகிய கரூர் சென்று அங்கு ஒரு புற்றுள் இருந்த லிங்கத்திற்கு தன் பாலைச் சொரிந்து திருமஞ்சனம் செய்து வழிபட, மகிழ்ச்சி அடைந்த சிவனும் காமதேனுவுக்கு விரும்புவற்றைப் படைக்கக்கூடிய ஆற்றலை அளிக்கிறார்.
காமதேனுவுக்குக் கிடைத்த படைப்பாற்றலால் அஞ்சிய பிரம்மா, தனது தவறை உணர்ந்து சிவனிடம் போய் தஞ்சம் அடைந்தார். சிவனும் அவரை மன்னித்து படைப்புத் தொழிலை அவருக்கேத் திரும்ப அளித்து காமதேனுவை இந்திரனிடம் அனுப்பி வைத்தார். பிரம்ம தேவர் வழிபட்டு உலகைப் படைக்கும் ஆற்றல் பெற்று கருவை தோற்றுவித்த காரணத்தால் கருவூர் கரூராக மருவியுள்ளது. இவ்வூரில் அமைந்துள்ள அற்புத தலம். காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில், சிவன் பசுபதீஸ்வரர் என்றும் ஆநிலையப்பர் என்றும் அழைக்கப்படுகிறார்.
பாடியோர் : திருஞானசம்பந்தர், கருவூரார், அருணகிரிநாதர்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.45 வரை.
பூஜைவிவரம் : ஆறு காலபூஜை.
திருவிழாக்கள் :
பங்குனி உத்திரதிருவிழா - பிரம்மோற்சவம் 12 நாட்கள் ,
ஆருத்ராதரிசனம் - 10 நாட்கள்,
நவராத்திரி - 10 நாட்கள்,
ஒவ்வொரு பிரதோஷ நாட்களும் விசேஷம்.
அருகிலுள்ளநகரம் : கரூர்.
கோயில்முகவரி : அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்,
கரூர் - 639 001, கரூர் மாவட்டம்.
தொலைபேசி எண் : 97905 55882, 04324-238017 , ஆலயம் - 04324-262010.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1.ஹோட்டல் சோழா இன் No.1,
கௌரிபுரம்,
கோவை ரோடு (அஜந்தா தியேட்டர் எதிரில்),
கரூர்.
2.ஆர்த்தி ஹோட்டல் 37,
வெஸ்ட் பிரதக்க்ஷணம் ரோடு,
தின்னப்பா தியேட்டர் அருகில்,
கரூர் - 639001,
Ph : +(91)-4324-236122, +(91)-7373030133.
3.கே. எஸ் மெஸ் வெஜ் ஹோட்டல்,
88 கோவை ரோடு,
என்.ஆர்.எம்.பி பிலாசா,
கரூர் - 639002,
Ph : 240497.
அருகில் உள்ள உணவகங்கள் :
1.அடையார் ஆனந்த் பவன்,
NH - 67,
கரூர்.
2.கே. எஸ் மெஸ் வெஜ் ஹோட்டல்,
88 கோவை ரோடு,
என்.ஆர்.எம்.பி பிலாசா,
கரூர் - 639002,
Ph : 240497.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)