அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்

பழனி

palani_temple

சுவாமி : தண்டாயுதபாணி

தீர்த்தம் : சண்முக நதி

தலவிருட்சம் : நெல்லி மரம்

தலச்சிறப்பு : ஆறுபடை வீடுகளில் ஒன்று. முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடான பொதினி எனும் பழனி குன்றின் மீது அமைந்துள்ளது. பழனி மலை கோயில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த குன்றின்மீது அமைந்துள்ள முருக கடவுளின் திரு உருவம் ஒன்பது வகையான நவபாஸாணங்களைக் கொண்டு போகர் எனும் சித்தரால் நிறுவப்பட்டதாகும். அலகு குத்துதல், காவடி எடுத்தல், முடிகாணிக்கை, பால்குடம் எடுத்து வருதல் என பல்வேறு பிரார்த்தனைகளை நிறைவேற்றி மேன்மையடையலாம்.தமிழகத்தின் முக்கிய பிரார்த்தனை தலம்.தமிழகத்தின் அதிக வருமானம் ஈட்டித்தரும் திருக்கோவில்கள் வரிசையில் இத்திருக்கோவில்முதலிடம் வகிக்கிறது.தற்போது பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் திட்டம் நிறைவேறியுள்ளது.

தல வரலாறு : பழனி திருத்தலம் முற்காலத்தில் கொங்கு நாட்டின் தெற்கு எல்லையாக விளங்கி வந்துள்ளது. பழனி பகுதியைக் கல்வெட்டுக்கள் வையாபுரி நாடு என்றே குறிப்பிடுகின்றன. இவ்வையாபுரி நாட்டை வையாபுரிக்கோப்பெரும் பேகன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளான். முற்காலத்தில் சித்தர்கள் பலர் வையாபுரி நாட்டில் வாழ்ந்துள்ளனர்.

சித்தர் போகர் தமிழ் நாட்டு வேட்கோவர் வகுப்பைச் சார்ந்தவர். சர்வ சாத்திரங்களையும் கற்றுத் துறை போகியவர். அது காரணம் பற்றியே அவர் போகர் என்று அழைக்கப்பட்டார். இவர் காலாங்கி முனிவரின் சிறந்த மாணவர் ஆவர். காய கல்ப மூலிகைகளைப் பயன்படுத்தி காயசித்தி செய்து கொண்டவர். உலக மொழிகள் பலவற்றையும் அறிந்திருந்தார். பல நாடுகளுக்கும் சென்று நம் நாட்டு வைத்திய, யோக முறைகளை திக்கெட்டும் பரப்பியவர். ஆயிரத்து எழுநூறு பாடல்களால் ஒரு நிகண்டு செய்தவர்.

இடைக்காடர், கருவூரார், புலிப்பாணி, கொங்கண்ர் ஆகியோர் போகரிடம் அஷ்டமா சித்துகளைப் பயின்றனர். போகர் தமது மாணாக்கர்களுடன் சீனதேசம் சென்று பல கருவி நூல்களும், இயந்திர நூல்களும் இயற்றி அங்குள்ளவர் அறிவியல் ஞானம் பெறச் செய்தார். சிலகாலம் கழித்து தமிழ் மண்ணுக்குத் திரும்பியவர், பழனியில் வாழ்ந்தார்.

நவபாஷாணங்களின் சேர்க்கையில் பழனி மலை முருகன் சிலையை உருவாக்கினார். இவரது மருத்துவ ஞானம் அளவற்றது. இவருடைய வைத்திய நூல்களில் நிகண்டு, வைத்தியம், துவாத காண்டம், சப்ப காண்டம், வைத்திய சூத்திரம், ஆகியவையும், ஆன்மீகத்தில் ஞான சூத்திரம், அட்டாங்க யோகம், ஞான சாராம்சம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கது. போகரின் சமாதி பழனி மலையில் உட் பிரகாரத்தில் அமைந்துள்ளது. இங்கே போகர் பூஜித்து வந்த நவ துர்கா, புவனேஸ்வரி, மற்றும் மரகதலிங்கம் சிலைகளுக்கு தினசரி பூஜைகள் நடை பெற்று வருகிறது.

நடைதிறப்பு : காலை 6.00 இரவு 8.00 மணி வரை.
கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் காலை 4.00 மணி முதல் இரவு இராக்கால பூஜை முடியும் வரை திறந்திருக்கும்.

பூஜை விவரம் : விழா பூஜை:வேட அலங்காரம்(அ) சாது.சந்நியாசி அலங்காரம். சிருகாலசந்தி:பாலசுப்பிரமணியர்.
காலசந்தி:பாலசுப்பிரமணியர்.உச்சிகாலம்:வைதீகாள் அலங்காரம்.சாயரட்சை:இராஜ அலங்காரம்.
அர்த்தசாமம்:வெள்ளை சாத்துப்படி.
சாதாரண நாட்களில்:விழாபூஜை-காலை 6.50 மணி.
சிறுகாலசந்தி-காலை 8.00 மணி.
காலசந்தி-காலை 9.00 மணி.உச்சிகாலம்-பகல் 12.00 மணி.
சாயரட்சை-மாலை 5.30 மணி
இராக்காலம்-இரவு 8.00 மணி.

விசேஷ நாட்களில்: விழாபூஜை-காலை 4.30 ,
சிறுகாலசந்தி-காலை 8.00,காலசந்தி-காலை 9.00 உச்சிகாலம்-பகல் 12.00,
சாயரட்சை-மாலை5.30.

திருவிழாக்கள் : சித்திரை-வருடப்பிறப்பு, சித்ராபௌர்ணமி, வைகாசி-வைகாசி விசாகம், ஆடி-ஆடிப் பூரத்திருவிழா,ஆவணி-விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி-நவராத்திரி விஜயதசமி அம்புவில் போடுதல்,ஐப்பசி-கந்தசஷ்டி-சூரசம்ஹாரம்-திருக்கல்யாணம், கார்த்திகை-திருக்கார்த்திகை, திருவாதிரை உற்சவம். தை-“தைப்பூசம்”-“திருத்தேர்”, மாசி-மாசிமகம்-சங்காபிஷேகம்-மகாசிவராத்திரி.பங்குனி-பங்குனி உத்திரம்-“திருத்தேர்”

 அருகிலுள்ள நகரம் : பழனி

கோயில் முகவரி : அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்,
பழனி-624 601, திண்டுக்கல் மாவட்டம்.

 

அருகில் உள்ள தங்கும் இடம் :

 

1.ஹோட்டல் சுபம்,

7, நார்த் கிரி ஸ்ட்ரீட்,

அடிவாரம்,

பழனி - 624 601,

Ph : +91 4545 242672, 98421 74796.

 

2.ஹோட்டல் கண்பதி(பி) லிமிடெட்,

103, பூங்கா ரோடு,

அடிவாரம்,

பழனி - 624 601,

Ph : 04545-242294, 325746.

 

3.ஹோட்டல் வேல்ஸ் கோர்ட்,

29, அய்யம்புள்ளி ரோடு,

அடிவாரம்,

பழனி - 624 601,

Ph : 04545-247770,325551.

 

4.தி ராயல் பார்க்,

256/W2, திண்டுக்கல் ரோடு,

ஓல்ட் ஆர்.டி.ஓ ஆபீஸ் அருகில்,

பழனி - 624 601,

Ph : 04545 - 251855.

 

5.பீகாக் இன்,

எண் 2, ஆண்டவர் பூங்கா ரோடு, பழனி அடிவாரம் - 624 601,

Ph : +91-4545-244410, +91-4545-321199.

 

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)

 

இருக்குமிடம்
  

 

 

அருகிலுள்ள கோவில்கள் 

 

செஞ்சேரி மலை 
68.4km
ஆனைமலைமாசாணி 
77.7km

பழமுதிர்சோலை
129Km