அருள்மிகு மரகதவல்லித் தாயார் உடனுறை பச்சைவண்ணர் பெருமாள் திருக்கோவில்

காஞ்சிபுரம்

Pacha-vannar_temple

சுவாமி : ஸ்ரீ பச்சைவண்ணர் (மரகத வண்ணம்).

அம்பாள் : மரகதவல்லித் தாயார்.

தலச்சிறப்பு : இத்திருப்பதியின் நுழைவு வாயில் கிழக்கு நோக்கியும், மூலவர் பச்சை வண்ணர்  என்கிற மரகத வண்ணர் அமைந்துள்ள மண்டபவாயில் தெற்கு நோக்கியும், மூலவர் பச்சை  வண்ணர் பெருமாள் கிழக்கு நோக்கியும் சேவார்த்திகளுக்குத் தரிசனம் வழங்கிக்  கொண்டுள்ளார்.  தாயார் சந்நிதி தனிச் சந்நிதியாக உள்ளது.  தாயார் சந்நிதிக்கு முன்பு பீடத்தில் யந்திரபிரவாசனி  (ஸ்ரீசுத்தமந்திரம்) சிலா ரூபத்தில் பிரதிட்டை செய்து வைக்கப்பட்டுள்ளது.  ஸ்ரீனிவாசப்பெருமாள்  நின்ற திருக்கோலத்தில் உள்ளார்.  இங்கு மகாலெட்சுமி தாயார் உற்சவ ரூபத்தில் கஜலட்சுமியாகக்  காட்சித் தருகிறார்.  ஆதிசேசன் காவலாக உள்ளார்.

தல வரலாறு : தொண்மைக் காலத்தில் திருவட்டாறு என்கிற பகுதி யாதவக்குப்பம் என்று ஆகி,  பிறகு அப்பெயர் மருவி தற்போது கோனேரிகுப்பம் என்று வழங்கப்படும் பகுதியானது.  பசுக்கள்  நிறைந்த யாதவர்கள் நிறைந்த பகுதியாக விளங்கியது.  அச்சமயம் மரீச்சி என்னும்  மகரிஷி இப்பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும், அவர் மகாவிஷ்ணுவின் பரமபக்தர் என்றும்,  அதனால் சதா மகாவிஷ்ணுவை நினைத்துக் கயண்டும், அவரின் புகழைப் பாடிக்கொண்டு  இருந்தவர் என்றும், இதனால் இவரின் பக்திக்கு மகிழ்ந்து மகாவிஷ்ணு, இராம அவதாரத்தில்  விஷ்ணுரூபத்தில் பச்சைநிற மேனி கொண்டு இந்த மரீச்சி மகரிஷிக்குக் காட்சித் தந்த இடமாகக்  இத்திருத்தலம் கருதப்படுகிறது.

பொது தகவல் : இத்திருத்தலம் திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படவில்லை.  ஆனால்  பவளவண்ணப் பெருமாளைத் தரிசிக்கும் பக்தர்கள் இந்த பச்சை வண்ணர் பெருமாளையும் ஒரு சேர  சேவித்தால் புண்ணியம், என்பது சான்றோர்களின் எண்ணம் ஆகும்.  திவ்ய தேசங்களில் 2  பெருமாள் உருவங்களில் இவர் ஒருவராகவே காட்சித் தருவது சிறப்பு ஆகும்.  எனவே  பவளவண்ணர் பெருமாளைச் சேவிக்கச் செல்லும் சேவார்த்திகள் பச்சை வண்ணரையும் சேவிக்க  வேண்டும் என்ற கருத்தை வலியூட்டுகின்றனர்.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30  வரை.

அருகிலுள்ள நகரம் : காஞ்சிபுரம்.

கோவில் முகவரி : அருள்மிகு மரகதவல்லித் தாயார் உடனுறை பச்சைவண்ணர் பெருமாள் திருக்கோவில்,

பெரிய காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. ஜி.ஆர்.டி ரெசிடென்சி காஞ்சிபுரம்,

487, காந்தி ரோடு,

காஞ்சிபுரம் - 631 502,

+(91)-44-27225250, +(91)-9940184251.

 

2. எம். எம் ஹோட்டல்,

No. 65 - 66, நெல்லுகார ஸ்ட்ரீட்,

காஞ்சிபுரம் - 631 502,

Ph : +(91)-44-27227250, +(91)-8098827250.

 

3. "ஹோட்டல் பாபு சூர்யா No. 85,

ஈஸ்ட் ராஜா ஸ்ட்ரீட் காஞ்சிபுரம்,

காமாட்சி அம்மன் கோவில் எதிரில்,

காஞ்சிபுரம் - 631 501, 

Ph : +(91)-44-27222556, +(91)-9597121214.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. சரவண பவன் 66,

அன்னை இந்திரா காந்தி ஸ்ட்ரீட்,

காஞ்சிபுரம் - 631502,

Ph : 4427226877.


2. ஹோட்டல் சரவண பவன் 504,

காந்தி ரோடு,

இந்தியன் ஓவர்சிஸ் பாங்க எதிரில்,

காஞ்சிபுரம்


3. ஹரிடம் என்.ஹெச் - 45

தென்பாக்கம் கிராமம்,

காஞ்சிபுரம் - 603301, Ph :044 27522336.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 


பவழ வண்ணர்
350m

ஏகாம்பரேஸ்வரர்
1km

கச்சபேஸ்வரர்
2.8Km

பண்டவதூதர்
1.1km

உலகந்த பெருமாள் 
800m

காமாட்சி அம்மன் 
600m