ஸ்ரீ நவநீத கிருஷ்ண பெருமாள் திருக்கோவில்
அரசலூர், தொட்டியம், திருச்சி

Sri-navaneedha-krishnan-thirukovil-Arasanur_temple

சுவாமி : ஸ்ரீ நவநீத கிருஷ்ண பெருமாள்.

மூர்த்தி : ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர்.

தலச்சிறப்பு : நவநீத கிருஷ்ணன் ஆலயத்திலுள்ள மூர்த்திகள் மற்றும் சிற்பங்கள் அனைத்தும் மிகுந்த கலை நுணுக்கம்  கொண்டவையாக அமைந்துள்ளது.  ஆலய மேல் விதானத்தில் சூரிய-சந்திர-கிரகண சுதை சிற்பங்கள் காட்சியளிக்கின்றன.   உள்ளேயிருக்கும் ஒரு தூணில் பெருமாளை சேவிக்கும் தம்பதியர் சிலைகள் அமைந்துள்ளன.  இவர்களே இந்த ஆலயத்தை  கட்டியவர்களாக இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.

இத்திருத்தலத்தில் கம்பத்தடியான் என்று அழைக்கப்படுகின்ற ஆஞ்சநேயர், கையில் சஞ்சீவி மலையுடன் தெற்கு திசை பார்த்து  காட்சியளிக்கிறார்.  இவரை வேண்டி வழிபட, எமபயம் நீங்கும் என்றும் வேண்டிய வரங்கள் கிட்டும் என்பது பக்தர்களின்  நம்பிக்கை.  இத்திருத்தலத்தில் லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர் போன்றோரும் இருப்பதால் அவர்களை வழிபட பில்லி,  சூனியம், ஏவல், கடன் தொல்லைகள், திருமணத் தடைகள் நீங்குமென்றும் குழந்தைபேறு வேண்டி வழிபடுவோருக்கு குழந்தை  பாக்கியம் கிட்டும் என்றும் நம்பப்படுகிறது.

கல்கி அவதாரம் எடுக்கப்போகும் இந்தப் பெருமாளுக்கு காவல் தெய்வங்களாக இவ்வூரின் தென்மேற்கில் கருப்பண்ண சுவாமியும்  வடமேற்கில் பகவதியம்மனும் வடகிழக்கில் மாரியம்மனும் தென்கிழக்கில் பிடாரியம்மனும் கோயில் கொண்டுள்ளனர்.  மேலும்  இவ்வூரில் சுகந்த குந்தலாம்பாள் சமேத தாயுமானவ சுவாமி சிவாலயமும் உள்ளது.  ஊரின் தென்திசையில் பரந்து விரிந்த  காவிரிக்கரையில் பிரகலாதனுக்கு சாந்த வடிவமாக பெருமாள் தரிசனம் கொடுத்த திருநாராயணபுரம் என்ற ஊர் உள்ளது.

இந்த ஊருக்கு வடக்கே சஞ்சீவி மலையின் ஒரு துண்டு விழுந்து உருவானதாக கூறப்படும் மூலிகைகள் நிறைந்து காணப்படும்  தலைமலை அமைந்துள்ளது.  நவநீத கிருஷ்ணன் உபய நாச்சிமார்களுடன் வைகாசி விசாக நாளன்று நம்மாழ்வார் சாற்றுமுறை  முடிந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலத்திற்கு வந்து வழிபட்டால், நோயற்ற வாழ்வு, தொழில்  முன்னேற்றம் ஏற்படும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

தல வரலாறு : அரச மரங்கள் நிறைந்த ஊர் அரசலூர் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் நவநீத கிருஷ்ண பெருமாள் கோயில்  கொண்டுள்ளார்.  இவர் கல்கி அவதாரம் எடுக்கப் போகிறார் என்ற நம்பிக்கையில் இந்த ஊரே அஸ்வத்தவூர் என அழைக்கப்பட்டு,  பின்னாளில் அரசலூர் என்றாகிவிட்டதாக கூறப்படுகிறது.  திருப்பதி ஸ்ரீநிவாசரை குல தெய்வமாகக் கொண்ட, இவ்வூரில் வாழ்ந்த  சில குடும்பத்தினர், இத்தலத்து ஸ்ரீநிவாசர் உற்சவருடன், பிரசன்ன வெங்கடேச பெருமாளையும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

நடைதிறப்பு : காலை6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : திருச்சி.

கோயில் முகவரி : ஸ்ரீ நவநீத கிருஷ்ண பெருமாள் திருக்கோவில்,

அரசலூர், தொட்டியம் வட்டம், திருச்சி மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. மதுரா ஹோட்டல்,

No.1 ராக்கின்ஸ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 001.

ஜங்சன் ரோடு,

கண்டோன்மெண்ட்,

Ph : +(91)-431-2414737, +(91)-9894558654.

 

2. மாயவரம் லாட்ஜ் No 87,

வண்ணாரபேட்டை தெரு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 002,

தெப்பக்குளம் அஞ்சல்,

Ph : +(91)-431-2711400, 2704089.

 

3. பெமினா ஹோட்டல் 109,

வில்லியம்ஸ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 001,

மத்திய பேருந்து நிலையம்,

ரெயில்வே ஜங்ஷன்,

Ph : 0431 - 2414501.

 

4. ஹோட்டல் ராக்போர்ட் வியுவ் 5,

ஓடத்துறை ரோடு,

சிந்தாமணி,

திருச்சிராப்பள்ளி - 620 002,

Ph : +91 740 2713466.

 

5. கிராண்ட் கார்டினியா,

22 - 25 மன்னார்புரம் ஜங்ஷன்,

திருச்சி - 620 020,

Mobile : +91 95856 44000, Tel : +91 431 4045000.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. ரகுநாத் ரெஸ்டாரன்ட்,

காலேஜ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 002.

 

2. பார்த்தசாரதி விலாஸ்/ வீகன் ரெஸ்டாரன்ட்,

கொண்டையன் பேட்டை ஆக்ரஹராம்,

திருவானை கோவில்,

திருச்சி - 620 002. 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 

அங்காளபரமேஸ்வரி 
300 m

அனலாடேஸ்வரர் 
500m
வேதநாராயணபெருமாள்
4.4 km

மதுரகாளி அம்மன் 
1km

தருகவனேஸ்வரர் 
31.8 km

குணசீலம் 
29 km