ஸ்ரீ ஸர்வமங்கள ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சுவாமி திருக்கோவில்
நங்கநல்லூர், சென்னை
சுவாமி : ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹர்.
தலச்சிறப்பு : ஐந்து தலை நாகத்தின் மீது அமர்ந்தபடி ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹர் அருள்பாலிப்பது சிறப்பு ஆகும். கருட சேவை மஹோத்ஸ்வம் 24-05-2009 அன்று நடைபெற்றது. இதில் ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ பெருமாள் நங்கநல்லூர், ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கீழ்கட்டளை, ஸ்ரீ ஒப்பிலியப்ப பெருமாள் இராம்நகர் மடிபாக்கம், ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ பெருமாள் ஆதம்பாக்கம், ஸ்ரீ கோதண்டராமர் மடிப்பாக்கம், ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாள் நங்கநல்லூர், ஆறு பெருமாள்களும் ஒன்றாக சேவை சாதித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோடானு கோடி புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே பெருமாளை பெரிய திருவடியாக கருடனில் சேவிக்க முடியும்.
கருடனில் பெருமாள் வருவது மிக்க விசேஷம், அருள் பாலிப்பதில் ஒரு நொடி கூட தாமதிப்பதில்லை என்று தான் எல்லா திவ்ய தேசங்களிலும் கருடன் நின்ற கோலத்தில் எப்போதும் புறப்படத் தயாரான நிலையில் சேவை சாதிக்கின்றார். நதியில் விழுந்த கட்டை எதைப்பற்றியும் கவலைப் படாமல் கடலை அடைவதைப் போல காய்சினப் பறவை ஏறி அருள் பாலிக்கும் பெருமாளை பற்றினால் நாமும் முக்தி அடையலாம் என்பது நம்பிக்கை.
தல வரலாறு : பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவருக்கு பிரகலாதனுக்காக தூணைப்பிளந்து கொண்டு வந்த நரசிம்மரை தரிசிக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. இதற்காக யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தீயின் நடுவே உக்கிர கோலத்தோடு தோன்றினார் நரசிம்மர். அவரைக் கண்டு பரவசப்பட்ட ஜமதக்னி, சாந்தமாக இருக்கும் படியும், தான் பெற்ற தரிசனம் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென வரம் கேட்டார். பெருமாளும் லட்சுமியைத் தாங்கி லட்சுமி நரசிம்மராய் புன்னகை சிந்த இத்தலத்தில் எழுந்தருளினார். நங்கையாகிய லட்சுமி தோன்றிய இடம் நங்கைநல்லூராகி, நங்கநல்லூர் என மருவி அழைகப்படுகிறது.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
திருவிழாக்கள் : நரசிம்ம ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி.
அருகிலுள்ள நகரம் : சென்னை.
கோயில் முகவரி : ஸ்ரீ ஸர்வமங்கள ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சுவாமி திருக்கோவில்,
24 தில்லை கங்கா நகர், நங்கநல்லூர், சென்னை - 600 061.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)