அருள்மிகு அமிர்தநாராயணப் பெருமாள் திருக்கோவில்

திருக்கடையூர்

Amirtha-Narayana-perumal_temple


சுவாமி : அமிர்தநாராயணப் பெருமாள்.

அம்பாள் : அமிர்தவள்ளி.

தலச்சிறப்பு : ராமானுஜர் வழிபட்ட தலம்.  அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரரை தரிசித்த  பிறகு,  அமிர்த நாராயண பெருமாளையும் தரிசனம் செய்தால் தான், திருக்கடையூர் வழிபாட்டு பலன்  முழுமையாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.  ராகு–கேது பரிகார தலமாகவும்  கருதபடுகிறது.

திருத்தல வரலாறு : தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தனர். அசுரர்களை ஏமாற்றி விஷ்ணு அதை ஒரு கலசத்தில் வைத்தார்.  மீண்டும் கலசத்தை திறந்த போது அமிர்தம் சிவலிங்கமாக இருந்தது.  பார்வதிதேவியின் அருள் இல்லாததால் தான் இவ்வாறு  மாற்றம் ஏற்பட்டதாக விஷ்ணு கருதினார்.  தனது மார்பில் அணிந்திருந்த திருவாபரணங்களை  கழற்றி, அவற்றைப் பார்வதிதேவியாகக் கருதி பூஜித்தார்.  அப்போது அம்பாள் அபிராமி என்ற  திருநாமத்துடன் அங்கு தோன்றி, அமிர்தம் கிடைக்க அருள்பாலித்தாள்.  அமிர்தத்தை தேவர்களுக்கு  விஷ்ணு பங்கிட்டு கொடுத்தார்.

இதனை அறிந்த ஒரு அசுரன், தேவரைப் போல வடிவம் தாங்கி அமிர்தத்தை பருகினான்.   சாகாவரமும் தேவபலமும் பெற்றான்.  அவனை வெட்டினார் விஷ்ணு.  அமிர்தம் பருகியதால்  அவனுக்கு உயிர் போகவில்லை.  துண்டான உடல்கள் ராகு, கேது என்ற பெயர் பெற்று, நவக்கிரக  மண்டலத்தில் இணைந்தனர்.  அபிராமி அம்மையின் தோற்றத்திற்கும், தேவர்களுக்கு அமிர்தம்  கிடைக்க காரணமான விஷ்ணு திருக்கடையூரில் அமிர்த நாராயண பெருமாள் என்ற பெயரில்  அருள்பாலிக்கிறார்.  ஸ்ரீதேவி, பூதேவியும் உள்ளனர்.  அமிர்தவல்லித் தாயாரிடம் திருமணமாகாத  பெண்கள் வேண்டிக்கொண்டால் சிறந்த மணமகன் அமைவார் என்பது நம்பிக்கை.

நடைதிறப்பு : காலை 6.00 முதல்  8.30 மணி வரை, மாலை 4.30 முதல் 7.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள நகரம் : நாகப்பட்டினம்.

கோயில் முகவரி : அருள்மிகு அமிர்தநாராயணப் பெருமாள் திருக்கோயில்,

திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. ஹோட்டல் கனகாபிஷேகம்,

எண் 6, சன்னதி ஸ்ட்ரீட்,

திருக்கடையூர் - 609 311,

Ph : +91 4364 287191 / 92 / 93.

 

2. ஹோட்டல் சதாபிஷேகம்,

#6/18A, சன்னதி ஸ்ட்ரீட்,

திருக்கடையூர்,

நாகப்பட்டினம் - 609 311,

Ph : +91 - 4364 - 287413, 287513, +91 - 97894 97762.

 

3. ஹோட்டல் மூகாம்பிகை ரெசிடென்சி அபிராமி ரெஸ்டாரன்ட்

திருக்கடையூர்

தரங்கம்பாடி தாலுகா,

நாகப்பட்டினம் - 609311

Phone; 04364-287515;

 

4. அபிராமி ரெசிடென்சி,

மேல வீதி, திருக்கடையூர் - 609 311,

Ph : 04364 287065, 287066, 98840 87065, 94449 27650.

 

5.ஹோட்டல் மணிவிழா,

சன்னதி ஸ்ட்ரீட்,

திருக்கடையூர் - 609 311,

Ph : 04364 287 840.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. அபிராமி ரெஸ்டாரன்ட்,

திருக்கடையூர் மெயின் ரோடு,

தரங்கபாடி தாலுகா,

நாகப்பட்டினம் - 609 311,

Ph : 04364-287515; 287748;287749;287750, +91- 9364387750.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 


கேது ஸ்தலம் 
14.4km

புதன் ஸ்தலம் 
16.8km

வைத்தீஸ்வரன்
22.3Km

ஆதிசேஷ தீர்த்தம் 
42.6km

சுயம்பு நாதர் 
36.5km

லலிதாம்பிகை 
38.7km