அருள்மிகு ஆகாச மாரியம்மன் திருக்கோவில்
நாச்சியார் கோயில், கும்பகோணம் வட்டம்
சுவாமி : அருள்மிகு ஆகாச மாரியம்மன்.
தலவிருட்சம் : வேம்பு மரம்.
தலச்சிறப்பு : சமயபுர மாரியம்மன் இவ்வூருக்கு வைகாசி அமாவாசையை அடுத்து வரும் புதன்கிழமை முதல் 10 நாட்களுக்கு எழுந்தருளுவதாக ஐதீகம். மற்ற தினங்களில் ஜோதி வடிவில் அம்பாளை வழிபடுகிறார்கள். இங்கே அம்மனுக்கு என தனியாக சிற்பமோ, விக்கிரஹமோ, பஞ்சலோகச் சிலையோ கிடையாது.
தல வரலாறு : அறுநூறு ஆண்டுகள் முன்னர் வளையல் வியாபாரியான ஒரு மாரியம்மன் பக்தன் வருடா வருடம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். ஒரு சமயம் அவனால் சமயபுரம் வரை செல்ல முடியவில்லை. மனம் வருந்திய அவன் அம்மனைப் பார்க்க முடியவில்லையே என வருந்த அவனுக்காக ஆகாய மார்க்கமாய் அம்பிகை சமயபுரத்தில் இருந்து கிளம்பி இங்கே வந்து காட்சி கொடுத்ததாகவும், அது முதல் அவன் வேண்டுகோளின்படி ஒவ்வொரு வருடமும் சமயபுரத்தில் இருந்து ஆகாய மார்க்கமாய் இங்கே வந்து காட்சி கொடுக்கச் சம்மதித்ததாகவும் கோயிலின் தல வரலாறு கூறுகிறது.
இந்நிகழ்வு நடந்தது வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமை என்று சொல்லப்படுகிறது. ஆகவே ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அம்மன் வருகையை ஒட்டி உற்சவம் ஆரம்பித்துப் பத்து நாட்கள் நடக்கின்றது. ஊரே கூடி நடத்தும் விழா கடைசி நாள் அன்று அம்மனுக்கு விடையாற்றிக் கண்ணீரோடு வழி அனுப்புவதோடு முடிகின்றது. அம்மனை தர்ப்பையால் ஒவ்வொரு வருடமும் உருவாக்குகின்றனர். பத்து நாட்களும் செப்புக் குடத்தில் கலசம் வைக்கப்பட்டு விழா எடுக்கப்படுகின்றது. கலச நீரும் அம்மனுக்குச் சாத்தப்படும் எலுமிச்சை மாலையில் எலுமிச்சம் பழமும் பிரசாதமாய் பக்தர்களுக்குத் தரப்படும். தர்ப்பையால் உருவாக்கப்பட்ட அம்மனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காண முடியும். ஆதி அந்தமில்லாப் பெரும் ஜோதியான அம்பிகை சிறிய உருவத்துடன் உருவாக்கப்பட்டுக் கடைசியில் பத்தாம் நாள் அன்று வளர்ந்து இராஜராஜேஸ்வரியாய்க் காட்சி அளிப்பாள். அதன் பின்னர் அம்பாளுக்குப் பிரார்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு பக்தர்களால் காவடிகள் எடுக்கப்பட்டு சமயபுரத்துக்கு அம்பாளை எழுந்தருளச் செய்கின்றனர். நாச்சியார் கோயிலில் வேறு கிராமத் தெய்வங்களோ, காவல் தெய்வங்களோ கிடையாது. இந்தக்கோயில் ஒன்று தான் உள்ளது. இந்த வைகாசி மாதம் திருவிழா சமயம் தவிர மற்ற நாட்களில் இங்கு ஜோதி வடிவில் அம்பாள் காட்சி கொடுத்து அருள் பாலிக்கிறாள்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
பூஜை விவரம் : ஒரு கால பூஜை.
திருவிழாக்கள் : வைகாசி - அமாவாசையை அடுத்துவரும் புதன்கிழமை முதல் 10 நாட்களுக்கு அம்மன் வந்து செல்லும் திருவிழா.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு ஆகாச மாரியம்மன் திருக்கோவில்,
நாச்சியார் கோயில் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. சிவமுருகன் ஹோட்டல்,
60 பீட் மெயின் ரோடு,
நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,
கும்பகோணம் - 612 001,
Ph : 096000 00384.
2.சாரா ரீஜன்ஸி,
45/1 சென்னை ரோடு,
கும்பகோணம் - 612002,
Ph : 082200 05555.
3.குவாலிட்டி இன்,
வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,
கும்பகோணம்,
தஞ்சாவூர் - 612 001,
Ph : 0435 255 5555,
4.ஹோட்டல் கிரீன் பார்க்,
எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,
கும்பகோணம் - 612 001,
Ph : (0435) - 2402853 / 2403914.
5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,
காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,
Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. வெங்கட்ரமணா உணவகம்,
No 40, TSR பெரிய வீதி,
கும்பகோணம் - 612001,
அருகில் காந்தி பார்க்,
Ph : +(91)-9442130736.
2. ஸ்ரீ பாலாஜி பவன்,
1, சாஸ்திர காலேஜ் ரோடு,
கும்பகோணம் - 612001
Ph : +(91)-435-2424578.
3. ஹோட்டல் சண்முக பவன்,
16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,
கும்பகோணம் - 612001.
Ph : +(91)-435-2433962.
4. கௌரி ஷங்கர் ஹோட்டல்
No 47, ஜான் செல்வராஜ் நகர்,
கும்பகோணம், 612001
Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.
5. ரயாஸ் கார்டன் உணவகம்,
No 18 ரயாஸ் ஹோட்டல்,
தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,
கும்பகோணம் , 612 001.
Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)