அருள்மிகு அக்னீஸ்வர சுவாமி திருக்கோவில்

திருப்புகலூர், நாகப்பட்டினம் மாவட்டம்

agneeshvara-swamy_temple

சுவாமி : அக்கினி புரீசுவரர், சரண்ய புரீசுவரர், கோணப்பிரான்.

அம்பாள் : சூளிகாம்பாள், கருந்தாழ் குழலி.

தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்.

தலவிருட்சம் : புன்னை மரம்.

தலச்சிறப்பு : இத்தலத்தில் அக்னி பகவான் இறைவனை நோக்கி தவம் செய்து பேறு  பெற்றிருக்கிறார். அக்னி பூஜித்த  தலமாதலால் இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்ற திருநாமம்.   அக்னி தவம் செய்யும் போது தன்னைச் சுற்றி ஒரு தீர்த்தம்  அமைத்துக் கொள்கிறார்.  அதுவே  கோவில் வெளிப்புறத்தில் அகழியாக, அக்னி தீர்த்தமாக விளங்கிறது.  சுவாமி கிழக்கு  நோக்கியும்,  அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர்.  பெரியகோயில், அக்கினி தேவன், பரதுவாச  முனிவர், முதலியோர் வழிபட்ட தலம். திருநாவுக்கரசர், முக்தித்தலம்.  முருக நாயனார்  அவதாரத்தலம்.  முருக நாயனார் திருமடத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,  சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலோர் கூடியிருந்து முருக நாயனாருடன் மகிழ்ந்த  பதி,  சுந்தரருக்குச் செங்கல்லைப் பொன்னாக்கி அற்புதம் நிகழ்த்திய தலம்.  

இங்கு விநாயகர், முருகர், சிந்தாமணி ஈசுவரர், பரத்துவாசர்  வழிபட்ட லிங்கம், அக்கினி,  அறுபத்துமூவர், பஞ்சலிங்கங்கள், திருநாவுக்கரசர், மகரிஷிகள்  வழிபட்ட லிங்கங்கள், மகாலட்சுமி,  சனீசுவரன், நளசக்கரவர்த்தி, நவக்கிரகம், கலைமகள், அன்னபூரணி, காலசம்காரர், சந்திரசேகரர்,  நடராசர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், லிங்கோற்பவர், பிரமன், துர்க்கை, பிட்சாடனர், ஆலிங்கன  கல்யாண சுந்தரர் முதலிய சந்நிதிகள் உள்ளன.  இத்தலத்தில்  2 முகம், 7 கரம், 3 திருவடி, 4 கொம்பு, 7 ஜூவாலைகளுடன் கூடிய அக்கினி, மூகாசூரசம்மார மூர்த்தி, சோமாஸ்கந்தர், நடராசர்  ஆகிய சந்நிதிகள் தனிச் சிறப்புடையன.

தல வரலாறு : பாணாசுரன் என்ற அசுரனின் தாயார் சிவபூஜை செய்பவள்.  தாயாரின் பூஜைக்காக  சுயம்பு லிங்கங்களைப் பெயர்த்து  எடுத்து வருகிறான் பாணாசுரன்.  ஆனால் திருப்புகலூர்  அக்னீசுவரரை பெயர்த்து எடுக்க முடியாமல் போகவே தன்னையே பலி  கொடுக்க முயர்ச்சி  செய்யும் போது இறைவன் அவனை தடுத்து ஆட்கொள்கிறார்.  பாணாசூரன் தோண்டிய அகழியே  நாற்புறமும்  தீர்த்தமாக உள்ளது.  அவன் தாயாரின் பூஜையை இருந்த இடத்தில் இருந்தே ஏற்றுக்  கொண்டதின் அடையாளமாக தலை சாய்த்து காட்சி அளிக்கிறார்.  அதனாலேயே இறைவன்  கோணப்பிரான் என்றும் அறியப்படுகிறார்.

பாடியோர் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர்.

நடைதிறப்பு : காலை 7.00 மணிமுதல் 12.00 மணி வரை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை. 

கோயில் முகவரி : அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்,

திருப்புகலூர் - 609 704, திருப்புகலூர் அஞ்சல், வழி திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம் மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. ஹோட்டல் செல்வீஸ் (பி) லிமிடெட் 2,

கட்டுகார ஸ்ட்ரீட்,

சந்தமங்களம்,

திருவாரூர் - 610 002,

Ph : 04366 222 082.

2. அருண் ஹோட்டல்,

சந்தமங்களம்,

கே.டி.ஆர். நகர்,

திருவாரூர்,

தமிழ்நாடு - 610 001.

3. ஹோட்டல் காவேரி,

சந்தமங்களம்,

கே.டி.ஆர் நகர்,

திருவாரூர்,

தமிழ்நாடு - 610 003.

4. ஹோட்டல் எம்.எம்.எ,

டாக்டர் கலைஞர் நகர்,

மன்னார்குடி ரோடு,

டி.நகர்,

விளாமல்,

திருவாரூர் - 610001,

Ph:04366 220 218.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
ராமநாத சுவாமி
2.3km

சௌரி ராஜா பெருமாள்
2.1km

ரத்தினகிரிஸ்வரர்
6.2 km
உத்திரபதிஸ்வரர்
4.3Km
கூத்தனூர் சரஸ்வதி
13.6Km
சனி-திருநள்ளார்
15km