அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோவில்
திருவாரூர் மாவட்டம்
சுவாமி : உதிராபதீசுவரர், ஆத்திவனநாதர், மந்திரபுரீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீசுவரர்.
அம்பாள் : சூளிகாம்பாள், திருக்குழலம்மை.
தீர்த்தம் : சத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்கினி தீர்த்தம், சந்திர தீர்த்தம், இந்திர தீர்த்தம், இயம தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், சீராள தீர்த்தம் என்னும் 9 தீர்த்தங்கள்.
தலவிருட்சம் : அத்தி மரம்.
தலச்சிறப்பு : கோயில் ஊரின் நடுவே கிழக்கு நோக்கியுள்ளது. இறைவன் சிறுத் தொண்ட நாயனார்க்குப் பைரவர் திருக்கோலத்தில் வந்து பிள்ளைக்கறியமுது கேட்டு அருள்புரிந்த தலம். இக்கோயிலுக்கு மந்திரபுரீசம், சக்திபுரீசம், இந்திரபுரீசம், ஆத்திவனம், பாஸ்கரபுரீம் என்னும் வேறு பெயர்ளும் உள்ளன. கோயிலை அடுத்து சிறுத் தொண்டர் வாழ்ந்த மாளிகை இன்று கோயிலாக உள்ளது.
தல வரலாறு : யானை முகம் கொண்ட கஜமுகாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க இத்தலம் வந்தார். சுயம்புவாக எழுந்தருளி இருந்த சிவனை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து தோஷம் நீக்கியருளினார். எனவே சிவன், "கணபதீஸ்வரர்" என்று பெயர் பெற்றார்.
நடைதிறப்பு : காலை 6.45 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்து இருக்கும்.
திருவிழாக்கள் :
சித்திரை பரணியில் பிள்ளைக்கறி சமைத்த விழா,
மார்கழி சதயசஷ்டியில் கணபதி விழா,
சிவராத்திரி,
திருக்கார்த்திகை,
ஐப்பசியில் அன்னாபிஷேகம்.
அருகிலுள்ள நகரம் : திருவாரூர்.
கோயில் முகவரி : அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் (கணபதீஸ்வரர்) திருக்கோவில்,
கணபதீச்சரம், திருச்செங்காட்டங்குடி, திருப்புகலூர் - 609 704, திருவாரூர் மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. ஹோட்டல் செல்வீஸ் (பி) லிமிடெட் 2,
கட்டுகார ஸ்ட்ரீட்,
சந்தமங்களம்,
திருவாரூர் - 610 002,
Ph : 04366 222 082.
2. அருண் ஹோட்டல்,
சந்தமங்களம்,
கே.டி.ஆர். நகர்,
திருவாரூர்,
தமிழ்நாடு - 610 001.
3. ஹோட்டல் காவேரி,
சந்தமங்களம்,
கே.டி.ஆர் நகர்,
திருவாரூர்,
தமிழ்நாடு - 610 003.
4. ஹோட்டல் எம்.எம்.எ,
டாக்டர் கலைஞர் நகர்,
மன்னார்குடி ரோடு,
டி.நகர்,
விளாமல்,
திருவாரூர் - 610001,
Ph:04366 220 218.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)