அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோவில்
திருவெறும்பூர், திருச்சி மாவட்டம்
சுவாமி : எறும்பீஸ்வரர்.
அம்பாள் : நறுங்குழல் நாயகி.
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்.
தலவிருட்சம் : வில்வம் மரம்.
தலச்சிறப்பு : இந்திரனும், தேவர்களும் எறும்பு வடிவில் வழிபட்ட தலம். எறும்புகளுக்காக தலை சாய்த்த இறைவன்.
தல வரலாறு : தாருகாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தினால் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். ஒரு நிலையில் விண்ணுலகில் வாழ்ந்த இந்திரனைத் தோல்வியுறச் செய்தான். தோல்வி கண்ட இந்திரன், பிரம்மனிடம் முறையிட்டான். பிரம்மன் “தென்கயிலாயமான மணிக்கூடபுரத்துப் பெருமானை வழிபடுவாயாக, அப்போது ஒரு புதல்வன் தோன்றுவான், அவனே சூரனை அழிப்பான்” என்று வழி கூறினார். அதன்படி தாங்கள் வழிபாடு செய்வதை அசுரன் அறிந்து விடக் கூடாது என்பதால், இந்திரனும், தேவர்களும் எறும்புகள் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தனர். இறைவனை கருநெய்தல் மலர்களால் பூசித்து வந்தனர்.
எண்ணெய்ப் பசையால் மலர்களைக் கொண்டு செல்லும் எறும்புகள் எளிதில் ஏறி வழிபட சிரமமாக இருந்தது. இதனால் தன் வடிவத்தினைப் புற்று மண்ணாக மாற்றியும், சறுக்கி விழாமல் எறும்புகள் எளிதில் ஏறும் வண்ணம் திருமுடி சாய்த்தும் எறும்புகளுக்குத் திருவருள் செய்தார். இதே போல, சிவசருமன் என்ற சிறுவனுக்காக விரிஞ்சிபுரத்திலும், தாடகைக்காகத் திருப்பனந்தாளிலும் முடி சாய்த்து காட்சி தந்தது இங்கே நினைவு கூறத்தக்கது.
வழிபட்டோர் : முருகன், பிரம்மன், திருமகள், ரதி, இந்திரன், அக்னி, அகத்தியர், நைமிச முனிவர் மற்றும் கட்டாங்கழி சுவாமிகள் முதலானோர் வணங்கிப் பேறுபெற்றுள்ளனர்.
பாடியோர் : திருநாவுக்கரசர்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழாக்கள் :
வைகாசியில் பிரம்மோற்சவம்,
ஐப்பசி அன்னாபிஷேகம்,
மகா சிவராத்திரி பௌர்ணமி கிரிவலம்,
பிரதோஷம் என சிவாலய விழாக்கள் அனைத்துமே நடைபெறுகின்றன.
அருகிலுள்ள நகரம் : திருச்சி.
கோயில் முகவரி : அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோவில்,
திருவெறும்பூர் - 620 013, திருச்சி மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. மதுரா ஹோட்டல்,
No.1 ராக்கின்ஸ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 001.
ஜங்சன் ரோடு,
கண்டோன்மெண்ட்,
Ph : +(91)-431-2414737, +(91)-9894558654.
2. மாயவரம் லாட்ஜ் No 87,
வண்ணாரபேட்டை தெரு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 002,
தெப்பக்குளம் அஞ்சல்,
Ph : +(91)-431-2711400, 2704089.
3. பெமினா ஹோட்டல் 109,
வில்லியம்ஸ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 001,
மத்திய பேருந்து நிலையம்,
ரெயில்வே ஜங்ஷன்,
Ph : 0431 - 2414501.
4. ஹோட்டல் ராக்போர்ட் வியுவ் 5,
ஓடத்துறை ரோடு,
சிந்தாமணி,
திருச்சிராப்பள்ளி - 620 002,
Ph : +91 740 2713466.
5. கிராண்ட் கார்டினியா,
22 - 25 மன்னார்புரம் ஜங்ஷன்,
திருச்சி - 620 020,
Mobile : +91 95856 44000, Tel : +91 431 4045000.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. ரகுநாத் ரெஸ்டாரன்ட்,
காலேஜ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 002.
2. பார்த்தசாரதி விலாஸ்/ வீகன் ரெஸ்டாரன்ட்,
கொண்டையன் பேட்டை ஆக்ரஹராம்,
திருவானை கோவில்,
திருச்சி - 620 002.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)