அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்
நங்கநல்லூர், சென்னை
சுவாமி : ஸ்ரீவிஸ்வரூப ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயஸ்வாமி.
மூர்த்தி : ராமர், கிருஷ்ணர், கருடர், வினாயகர், நாகர்.
தலச்சிறப்பு : இத்தலத்தில் ஆஞ்சநேயர் 32 அடி உயரமுடைய ஒரே கல்லினால் ஆன சிலையாக உள்ளார் என்பது சிறப்பு. இவருக்கு சாற்றப்படும் வடை மாலை மிகச் சிறப்புடையது. இந்த வடை மாலைக்கு ஆறாயிரம் வடைகள் தயார் செய்யப்பட்டு மாலையாக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் தான் ராஜ ராஜ சோழன் காலத்தில் சிலை பிரதிஷ்டை செய்த பிறகு கோயில் கட்டிடம் கட்டப்பட்டது. அதற்குப் பிறகு இம்மாதிரி கட்டப்பட்ட முதல் கோயில் இது தான் என்று கருதப்படுகிறது. தொண்ணூறிரண்டு அடி உயரமுள்ள கோபுரத்தின் கலசம் செப்பினால் செய்யப்பட்டு தங்கத்தகடுகளால் மூடப்பட்டுள்ளது. ஆகம சாஸ்திரப்படி கோயில் கட்டபட்டது. ராமர், கிருஷ்ணர், கருடர், வினாயகர், நாகர் ஆகியவர்களுக்கு பிறகு சந்நதிகள் கட்டப்பட்டன.
தல வரலாறு : இத்தலம் 1995-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகளால், இவ்வூருக்கு நங்கைநல்லூர் (திருமகள் வாழும் ஊர்) எனப் பெயரிடப்பட்டு இப்போது நங்கநல்லூர் என அழைக்கப்படுகிறது. "ஸ்ரீவிஸ்வரூப ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயஸ்வாமி'' என்ற பெயருடன் ஆஞ்சநேயர் எழுந்தளியுள்ளார்.
நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : சென்னை.
கோயில் முகவரி : அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்,
ராம் நகர், நங்கநல்லூர், சென்னை - 600 061.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)