அருள்மிகு கணேசபுர மாரியம்மன் திருக்கோவில்

காரைக்குடி வட்டம், சிவகங்கை மாவட்டம்

Karaikudi-amman-ganesapuram_temple

சுவாமி : மாரியம்மன்.

தலச்சிறப்பு : காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். பங்குனி பொங்கல் விழா,  பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கும்.  கணபதி ஹோமமும், தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி, கொடியேற்றம் நடைபெறும்.   முக்கிய நிகழ்வான பால்குட ஊர்வலம், அன்று மாலை முத்தாலம்மன் கோயிலிலிருந்து கரகம், மதுக்குடம், முளைப்பாரி  ஊர்வலமாக, கோயிலை வந்தடையும். விழா நாட்களில், மாலை 6.00 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம் ஆராதனை  நடைபெறும்.

அம்மனை வழிபடும்போது, பழங்களால் அபிஷேகம் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.  வாழைப்பழ அபிஷேகம் செய்தால்  சாகுபடி செய்த பயிர்கள் நல்ல மகசூல் தரும்.  பலாப்பழ அபிஷேகம் செய்தால் நினைத்தது நடக்கும்.  மாம்பழ அபிஷேகம்  செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.  மாதுளம்பழ அபிஷேகம் செய்தால் கோபம் தீரும்.  எலுமிச்சம்பழம் அபிஷேகம்  செய்தால்  பகைவர் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.

'எங்கும் நிறைந்த பரம்பொருளை, தீபச் சுடராகக் கண்டு வழிபடுவதால், வாழ்வில் துன்ப இருளை அகற்றி இன்ப ஒளி ஏற்றலாம்'  என்பது சான்றோர் கருத்துப்படி நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பமுடன் வாழ கணேசபுர மாரியம்மன் அருள்  புரிவாள் என்பது நம்பிக்கை.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

திருவிழாக்கள் : பங்குனி பொங்கல் விழா, கணேசபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா இரவு 7.00 மணி.

கோயில் முகவரி : அருள்மிகு கணேசபுர மாரியம்மன் திருக்கோவில்,

கணேசபுரம், காரைக்குடி வட்டம், சிவகங்கை மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1.ஹோட்டல் சுபலட்சுமி பாலஸ்,

#1 சர்ச் பஸ்ட் ஸ்ட்ரீட்,

செக்காலை ரோடு,

செக்காலை,

காரைக்குடி - 630 001,

Ph : 04565 237 010

 

2.பங்களா,

தேவகோட்டை ரோடு,

செஞ்சை,

காரைக்குடி - 630 001,

Ph : 04565 220 221.

 

3.தப்பா கார்டன்ஸ் ரிசோர்ட்,

687, மெயின் ரோடு,

அறியாக்குடி,

காரைக்குடி.

 

4.ஹோட்டல் பிரசிடென்ட் செக்காலை,

காரைக்குடி - 630 001.

 

5.செல்வம் ஹோட்டல்,

கோவிலூர் திருப்பத்தூர் ரோடு,

கூத்தடைப்பட்டி,

பிள்ளையார்பட்டி - 630 212.

 

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்

 

குன்றக்குடி சண்முகநாதர்
4.1km

பிள்ளையார்பட்டி
8.4 km
வைரவன்பட்டி
9.8 km

பைரவன்
15.7 km

சௌம்ய நாராயண பெருமாள்
24.7 km