அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவில் 

சிறுவாச்சூர், பெரம்பலூர் மாவட்டம்

 

Madurakali-amman_temple

சுவாமி : அருள்மிகு மதுரகாளியம்மன்.

மூர்த்தி : மதுரகாளி.

தீர்த்தம் : திருக்குளம். 

தலவிருட்சம் : மருத மரம். 

தலச்சிறப்பு : ஸ்ரீ ஆதிசங்கரர் வழிபட்ட தலம்.  ஊமை, செவிடு, போன்ற குறைகளை போக்கும்  சக்தியுள்ள அம்மன்.  பேய், பிசாசு, பில்லி, சூனியம் போக்கும் அம்மன் இத்திருக்கோவிலின்  அம்பாள்.  திங்கள், வெள்ளிக் கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இத்திருக்கோவிலின்  பின்புறம் உள்ள பெரியசாமி மலையில் வாசம் செய்து வருவதாக கூறுபவரும் உண்டு.

தல வரலாறு : சிலப்பதிகாரம் காவிய நாயகி கண்ணகி வரலாற்றுடன் தொடர்பு படுத்தி இங்கு  அம்மனின் வரலாறு செவிவழிச் செய்தியாய்க் கூறப்பட்டு வருகிறது.  கற்புடையத் தெய்வம்  கண்ணகி தன் கணவர்க்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு மனம் பொறாமல் கோபம் கொண்டு  மதுரையை எரித்து பின் மன அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில் அத்தலமடைந்து  அமைதி கொண்டாள் எனவும் கண்ணகியைக் கொண்டு மதுரையை எரியூட்டிய மதுரை  காளியம்மனே இத்தலம் விரும்பி அமர்ந்தாள் எனவும் பெரியோர்கள் கூறுகின்றனர்.

சிறுவாச்சூரின் வழிபாட்டு தெய்வம் செல்லியம்மன் ஆகும்.  ஒரு மந்திரவாதி தனது மந்திர  வலிமையால் இவ்வம்மையைக் கட்டுப்படுத்திக் தீய செயல்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளான்.   அன்னை மதுரை காளியம்மன் இத்தலத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை இரவு வந்து சேர்ந்த போது  செல்லியம்மனுடன் இரவு தங்க இடம் கேட்க செல்லியம்மனோ தன்னை மந்திர வலிமையால்  தொல்லைப்படுத்தும் மந்திரவாதி பற்றிக் கூறிய போது மதுரை காளியம்மன் தான் அதற்குத் தக்க  வழி செயவதாகக் கூறி தங்கி, வழக்கப்படி வந்த மந்திரவாதியை அன்னை மதுரை காளி  எதிர்  கொண்டு அழித்து விட, செல்லியம்மன் அன்னையின் திறன் கண்டு இனி அவளே சிறுவாச்சூர்  ஆலயத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வர வேண்டும் என வேண்டி, தான் அருகில்  இருக்கும் பெரியசாமி மலை சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு  முதல் மரியாதை வேண்டும் எனவும் கூற, மதுரை காளியம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டு  ஆலயத்திலே அமர செல்லியம்மன் பெரியசாமி மலை சென்று கோயில் கொண்டு விடுவதாகவும், சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரை காளியம்மன் பக்தர்களுக்குத் திங்கள் கிழமை  காட்சி தருவதாகவும், எனவே தான் சிறுவாச்சூர் ஆலயம், வெள்ளி, திங்கள் மட்டும் திறந்து பூஜை செய்யப்படுவதாகவும் ஆன்றோர்கள் செவி வழியே இந்த அரிய வரலாற்றை தெரிவித்து உள்ளனர்.

இந்த நாட்கள் தவிர ஆலய சிறப்புத் திருநாட்கள் சிலவற்றிலும் ஆலயம் திறந்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.  மற்ற நாட்களில் மதுர காளியம்மனும், செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில்  தங்குவதாக ஐதீகம் உள்ளது.  மதுரை காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி  மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறுவார்கள்.  சினங் கொண்டு வந்த மதுரகாளியம்மன் இங்கு  வந்து அமைதியுற்றுப் பக்தர்களுக்குப் பல இனிய நிகழ்வுகளை அருளுவதாலும், மதுரகாளியம்மன்  (மதுரம்+இனிமை) என்ற பெயர் பெற்றாள் என்பதும் பொருத்தம் உடையதே ஆகும்.  செல்லியம்மன்  தனக்கு முதல் மரியாதை வேண்டு என்று கேட்டதற்கு ஏற்ப பூஜையின் போது தீபாராதனை காட்டு கையில் முதலில் மலை நோக்கி மேலே தீபாராதனை காட்டி விட்டுத்தான் பின்னர்  மதுரகாளியம்மனுக்குத் தீபாராதனை காட்டும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

நடைதிறப்பு : வாரம் திங்கள் மற்றும் வெள்ளிகிழமைகளில் மட்டுமே கோவில் திறந்திருக்கும்.  காலை 6.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை தொடர்ந்து வழிபாடு செய்யலாம்(உணவு இடைவேளை நண்பகல் 12.30 - 1.00). குறிப்பு :- பிரதி மாதம் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களிலும் வழிபாடு நடைபெறும்.

பூஜை விவரம் : மூன்று காலபூஜைகள், அபிஷேகம் காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை, மகா தீபாராதனை 1.00 மணிக்கு,  சந்தனக்காப்பு அலங்காரம் மாலை 5.00 மணி வரை.

திருவிழாக்கள் :

சித்திரை திங்களில் அமாவாசைக்குப் பின்வரும் முதல் செவ்வாயன்று பூச்சொரிதல் தொடங்கும்.

அடுத்த செவ்வாய் காப்புகட்டி 13 நாட்கள் பெருந்திருவிழா சிறப்புடன் நடைபெறுகின்றது.

அருகிலுள்ள நகரம் : பெரம்பலூர்.

கோயில் முகவரி : அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவில் சிறுவாச்சூர், பெரம்பலூர் மாவட்டம்.

தொலைபேசி எண்: 04328 - 225333, 04328 - 291375.

அருகில் உள்ள தங்கும் இடம்:

1.தனலட்சுமி ஸ்ரீநிவாசன் ஹோட்டல்,

கலெக்டர் ஆபீஸ் ரோடு,

நியூ பஸ் ஸ்டாண்ட், சுங்கு பேட்டை. 

 

2.ஹோட்டல் டெம்பில் இன்,

139, சென்னை டிரன்க் ரோடு, சிறுவாச்சூர் - 621 113,

Ph : 095009 98962.

 

3.ஹோட்டல் அமிர்தா,

திருச்சி - சென்னை ஹைவே.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)  

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
கலியபெருமாள் 
35.2km

பெருமாள் மலை 
32.5Km

பிரம்மபுரீஸ்வரர் 
24.5Km
ஆலந்துரையர் 
39.2Km
பெருமாள் 
46.8Km
நீலிவனேஸ்வரர்
47.4Km